அரிப்பு முழுவதுமாக நீங்க செய்ய வேண்டியவை என்ன?-Itching remedies

அரிப்பு

அரிப்பால் மக்கள்பெரிதும் அவதிப்படுகின்றனர். வெயில் காலம் மற்றும் மழை காலங்களில் கிருமி தொற்றால் அரிப்பு ஏற்படுகிறது. சிலருக்கு உணவு ஒவ்வாமை காரணமாக அரிப்பு ஏற்படுகிறது. மேலும், வெயிலில் அலைதல், உடல் உஷ்ணம் ஆகிய காரணங்களால் அரிப்பு ஏற்படுகிறது. அரிப்பைச் சரிசெய்யக் கூடிய மிக எளிமையான வழிமுறைகளைக் காண்போம்.

பேக்கிங் சோடா -அரிப்பு முழுவதுமாக நீங்க

பேக்கிங் சோடாவைச் சிறிதளவு எடுத்துக்கொள்ளவும். அதை குளியல் தண்ணீரில் போட்டுக்கொள்ளவும். பேக்கிங்சோடா கலந்த தண்ணீரில் குளித்தால் அரிப்பு குணமாகும். கிருமி தொற்று நீங்கும்.

வேப்பிலை -அரிப்பு முழுவதுமாக நீங்க

வேப்பிலை சிறந்த கிருமி நாசினியாகும். வேப்பிலையை நீரில் போட்டு ஊற வைத்துக்கொள்ளவும். பின்னர், அந்த தண்ணீரில் குளித்தால் அரிப்பு குணமாகும். வேப்பிலை உடலில் உள்ள கிருமிகளை அழிக்கும் ஆற்றலை உடையது.

ஓட்ஸ் -அரிப்பு முழுவதுமாக நீங்க

ஓட்ஸைக் குளிக்கும் தண்ணீரில் சிறிதளவு கலந்துக்கொள்ளவும். பின்னர், அந்த தண்ணீரில் குளித்தால் அரிப்பு குணமாகும்.

தேங்காய் எண்ணெய் -அரிப்பு முழுவதுமாக நீங்க

தேங்காய் எண்ணெயை உடலில் தடவி மசாஜ் செய்துக்கொள்ளவும். பின்னர் வெதுவெதுப்பான தண்ணீரில் குளித்து வந்தால் அரிப்பு குணமாகும்.

துளசி -அரிப்பு முழுவதுமாக நீங்க

துளசி இலைகளை அரைத்துக்கொள்ளவும். பின்னர் உடலில் தடவி ஊறவைத்து, பின்னர் குளித்தால் உடலில் உள்ள கிருமி அழியும். சருமம் பொலிவு பெறும்.

மஞ்சள் -அரிப்பு முழுவதுமாக நீங்க

மஞ்சள் சிறந்த கிருமி நாசினியாகும். மஞ்சளை நீரில் போட்டு ஊற வைத்து, அந்த தண்ணீரில் குளித்தால் அரிப்பு குணமாகும். மஞ்சள் உடலில் உள்ள கிருமிகளை அழிக்கும் ஆற்றலை உடையது.

குப்பைமேனி -அரிப்பு முழுவதுமாக நீங்க

குப்பைமேனி செடியின் இலைகள், சிறிது மஞ்சள், சிறிது கல்லுப்பு ஆகிய மூன்றையும் ஒன்றாக சேர்த்து அரைத்துக்கொள்ளவும். பின்னர்,  அரிப்பு ஏற்பட்ட இடங்களில் தடவினால் அரிப்பு குணமாகும்.

நன்னாரி -அரிப்பு முழுவதுமாக நீங்க

நன்னாரி வேரை தண்ணீரில் போட்டு நன்றாக காய்ச்சவும். தண்ணீர் சுண்டவுடன் அந்த தண்ணீரை காலை மற்றும் மாலை பருகினால் அரிப்பு குணமாகும்.

அருகம் புல் -அரிப்பு முழுவதுமாக நீங்க

அருகம் புல் ஒரு சிறந்த மூலிகையாகும். அருகம் புல்லை அரைத்து சாறாக்கி குடித்து வந்தால் அரிப்பு குணமாகும். அதில் சில துளிகளை அரிப்புள்ள இடங்களில் பூசினால் அரிப்பு குணமாகும்.

கற்றாழை -அரிப்பு முழுவதுமாக நீங்க

கற்றாழை பல மருத்துவ குணங்களை கொண்டது. இதன் தோலை நீக்கி உள்ளே இருக்கும் சாறை எடுத்து தோலில் தடவினால் அரிப்பிலிருந்து நிவாரணம் கிடைக்கும்.

இதையும் படிக்கலாமே-

குழந்தையின் அழுகை நிறுத்துவது எப்படி?-How to control baby crying

Share this post

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top