செவ்வாய் கிழமை வெற்றிலை தீபம் ஏற்றும் நேரம் – Vetrilai Deepam for Murugan
முருகனுக்கு உகந்த நாள் செவ்வாய்க்கிழமை ஆகும். முருகப்பெருமான் செவ்வாய் கிரகத்திற்கு உரிய கடவுள் என்பது உங்களுக்கு தெரியுமா? மேலும் முருகனை தரிசித்து வந்தால் அதிர்ஷ்டங்கள் பெருகும் என்பது ஐதீகம். எனவே அதிர்ஷ்டத்தை அள்ளித் தரும் செவ்வாய்க்கிழமை அன்று வெற்றிலை தீபம் ஏற்றி முருகனின் வழிபட்டால் பல விதமான நன்மைகளை பெறலாம்.
வெற்றிலை தீபம் ஏற்றும் நேரம் -Vetrilai deepam for murugan time
செவ்வாய்க்கிழமையில் காலை ஆறிலிருந்து ஏழு செவ்வாய் ஹேரை* *பகல் ஒரு மணி முதல் இரண்டு மணி வரை செவ்வாய் ஹேரை* *இரவு எட்டு மணி முதல் ஒன்பது மணி வரை செவ்வாய் ஹேரை* இந்த பூஜை செய்ய வேண்டும். அதற்கு முதலில் பூஜையறையில் நட்சத்திர கோலம் போட்டு அதில் ஆறு வெற்றிலை அதன் மேல் அகல் விளக்கை வைத்து நெய் தீபம் ஏற்ற வேண்டும்.
வெற்றிலை தீபம் ஏற்றுவது எப்படி?
இந்த பூஜை செய்வதற்கு முதலில் முருகனின் படம் அல்லது சிலையை எடுத்து சுத்தம் செய்ய வேண்டும். பின் அதில் குங்குமம் மஞ்சள் இடவேண்டும். மேலும் முருகனின் படத்தில் வாசனை உள்ள மலர்களை வைக்க வேண்டும். இதனை அடுத்து 6 புதிய வெற்றிலை எடுத்துக் கொள்ள வேண்டும். குறிப்பாக நுனிப்பகுதி சேதாரம் இல்லாமல் இருக்க வேண்டும். மேலும் நுனி இல்லாத வெற்றிலையை பூஜைக்கு ஒருபோதும் பயன்படுத்த வேண்டாம். பின்னர் நீங்கள் வெற்றிலையில் இருந்து அதன் காம்பினை கிள்ளி எடுக்க வேண்டும். பின் 6 வெற்றிலையும் மயில் தோகை போல் ஒரு தாம்பூலத்தில் விரித்து வைத்து அதில் மஞ்சள் குங்குமம் வைக்க வேண்டும். பிறகு அகல் விளக்கை வைத்து, அதில் நல்லெண்ணெய் ஊற்றி, திரி வைத்து, அதில் நாம் எடுத்து வைத்திருக்கும் காம்புகளையும் போட்டு தீபத்தை ஏற்ற வேண்டும். தீபம் ஏற்றும் போது உங்களுக்கு தேவையானதை மனதில் நினைத்து முருகப்பெருமானை வழிபட வேண்டும்.
vetrilai deepam benefits in tamil
முருகப்பெருமானுக்கு வெற்றிலை தீபம் ஏற்றி வழிபட்டு வந்தால் பலவிதமான நன்மைகளை நாம் பெறலாம். மேலும் இந்த வெற்றிலை தீபத்தை செவ்வாய்க்கிழமையில் தான் ஏற்ற வேண்டும். இந்த தீபத்தை ஏற்றுவதால், நீங்கள் நினைத்த காரியம் நடக்கும், உங்கள் பிரச்சனைகள் அனைத்தும் நீங்கும், மகிழ்ச்சி மற்றும் செழிப்பு பொங்கும், குறிப்பாக பண பிரச்சனை ஒருபோதும் வரவே வராது.
மேலும், அகல் விளக்கின் உள்ளே போடப்பட்டிருக்கும் காம்பிலிருந்து வரும் வாசனையும், அகல் விளக்கில் கீழே இருக்கும் வெற்றிலையிலிருந்து வரும் வாசலையும் வீடு முழுவதும் பரவும். இந்த வாசனையால் முருகப்பெருமானின் மனம் குளிர்ந்து நீங்கள் வேண்டிக் கொண்ட அனைத்தையும் உங்களுக்கு அருள் புரிவார். எனவே செவ்வாய்க்கிழமை அன்று இந்த வெற்றிலை தீபம் முருகன் வழிபாட்டை தொடர்ந்து 6 வாரங்கள் செய்து வந்தால் நீங்கள் நினைத்த காரியம் அனைத்தும் நிச்சயமாக நிறைவேறும்.