உத்தாமணியின் மருத்துவக்குணங்கள்-Uthamani mooligai benefits
Uthamani mooligai benefits-வேலிப்பருத்தி, உத்தம கன்னிகை என்ற மாற்றுப்பெயர்களைக் கொண்டது உத்தாமணி. உத்தாமணி முழுத் தாவரமும் மருத்துவக்குணம் கொண்டது. இது கசப்புச் சுவையை உடையது. இது,5செ.மீ நீளம் வரை வளரக்கூடிய தன்மையைக் கொண்டது.
இதய வடிவ இலைகளைக் கொண்டது. பசுமை நிறமான பூங்கொத்துகளை உடையது. மென்மையான முட்களைக் கொண்ட காய்கறிகளை உடையது. காய்களின் உள்ளிருக்கும் விதைகளில் பட்டு போன்ற பஞ்சிழைகள் அடுக்கப்பட்டிருக்கும்
மருத்துவ குணங்கள்
உத்தாமணியானது குடைச்சல், வீக்கம், நடுக்கம், வலி, இரைப்பு, இருமல், கோழை ஆகியவற்றைக் குணப்படுத்தும் தன்மையைக் கொண்டது. குடல் புழுக்களைக் கொல்லக்கூடியத் தன்மையைக் கொண்டது. பசியைத் தூண்டக்கூடிய தன்மையைக் கொண்டது. உத்தாமணி இலைச்சாறு மூக்கடைப்பை நீக்கும் தன்மையைக் கொண்டது. கருப்பையை வலுப்படுத்தக்கூடியது.
இரத்தப்போக்கு
உத்தாமணி தாவரத்தின் மூலப்பொருள் “பெர்குலேரியா” ஆகும். இது மகப்பேற்றின்போது ஏற்படும் அதிகமான இரத்தப்போக்கினைக் கட்டுப்படுத்தும் ஆற்றலை உடையது.
வயிறு சார்ந்த பிரச்சனை
குழந்தைகளுக்கு ஏற்படும் வயிறு சார்ந்த பிரச்சனைகளைச் சரிசெய்ய உத்தாமணி உதவுகிறது. உத்தாமணி இலைகளைப் பறித்து, நீரில் கழுவி சுத்தம் செய்து கொள்ள வேண்டும். இதனை, இலேசாக நசுக்கி தண்ணீரில் போட்டு காய்ச்சிக்கொள்ள வேண்டும். பின்னர், சிறிதளவு வசம்பைச் சுட்டு கரியாகிக் கொண்டு, அந்த உத்தாமணிக் குடிநீருடன் சேர்த்து நன்றாக கலக்க வேண்டும். இதனை குழந்தைகளுக்கு காலை, மாலை இரண்டு வேளைகள் கொடுத்தால் வயிறு சார்ந்த பிரச்சனைகள் குணமாகும்.
வயிற்றுப் புழுக்கள்
குழந்தைகளுக்கு வயிற்றுப் புழுக்கள் வெளியேற உத்தாமணி இலையின் சாறை கொடுக்க வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் வயிற்றுப்புழுக்கள் வெளியேறும். வயிறு சார்ந்த பிரச்சனைகள் முழுவதும் குணமாகும்.
வீக்கம்
கை, கால் வீக்கம் குறைய உதவுகிறது. உத்தாமணி இலைச் சாறுடன் சிறிதளவு சுண்ணாம்பு கலந்துக்கொள்ளவும். அரைத்த விழுதை கை, கால் வீக்கங்களுக்குப் பற்றாக போட்டால் வீக்கமானது குணமாகும்.
மூட்டுவலி
மூட்டுவலி குணமாக உத்தாமணி இலையை அரைத்துக்கொள்ள வேண்டும். அத்துடன், எலுமிச்சம்பழச்சாறு கலந்து வலி உள்ள இடத்தில் தடவ வேண்டும். இவ்வாறு தடவுதன் மூலம் மூட்டுவலியானது குணமாகும்.
Pingback: ஆமணக்கில் இவ்வளவு மருத்துவ குணங்களா…-Ricinus benefits