தொட்டால் சிணுங்கியின் மருத்துவப்பயன்கள் – Thotta Chinungi Plant

Thotta chinungi plant

Thotta Chinungi Plant – Touch-me-not என்று அழைக்கப்படும் தொட்டால் சிணுங்கி செடி வகையைச் சார்ந்தது ஆகும். இதன் இலைகள் புளிய இலைகள் போல காணப்படும். பூக்கள் ஊதா நிறத்தில் இருக்கும். ஈரப்பதமான இடங்களில் தானே வளரக் கூடிய தன்மையைக் கொண்டது. தொட்டால் சிணுங்கி தரையில் படர்ந்து வளரக்கூடியத் தன்மையைக் கொண்டது.

தொட்டால் சிணுங்கி இலையை மனிதர்கள் தொட்டாலும், அதிர்வு ஏற்பட்டாலும் இலைகள் மூடிக்கொள்ளும். சிறிது நேரம் கழித்து இலைகள் விரிவடையும்.

தொட்டால் சிணுங்கியை ‘நமஸ்காரி’ என்றும் அழைப்பர். இந்த மூலிகை காந்த சக்தி உடையது. இதனை, தொடுகின்ற போது அதனுடைய சக்தி மனிதனுள் மின்சாரம் போல் பாயும். 48 நாள் தவறாது தொட்டு வந்தால் உடலில் நேர்மறை எண்ணங்கள் உருவாகும். மேலும், மன ஆற்றல் அதிகமாகும்.

தோல் சார்ந்த நோய்கள் – Thotta Chinungi Plant

Thotta chinungi plant

தொட்டால் சிணுங்கியின் இலையைப் பறித்துக்கொள்ளவும். அதனை, அரைத்து சாறு எடுத்துக்கொள்ளவும். இந்த சாறை தோலின் மீது தடவினால், தோல் சார்ந்த நோய்கள் குணமாகும். தோலில் ஏற்படும் படை, தேமல் போன்ற நோய்கள் குணமாகும்.

ஆசனக்கடுப்பு – Thotta Chinungi Plant

தொட்டால் சிணுங்கியின் வேரையும் இலையையும் சம அளவில் எடுத்துக்கொள்ளவும். பின்னர், இதனை, உலர்த்திக்கொள்ளவும். பிறகு, இதனை நன்றாக அரைத்துக்கொள்ளவும். பிறகு, இதனை சலித்துக்கொள்ளவும். இந்த பொடியைப் பாலில் கலந்து, குடித்து வந்தால் ஆசனக்கடுப்பு குணமாகும்.

வயிற்றுக் கடுப்பு -Thotta Chinungi Plant

தொட்டால் சிணுங்கியின் இலையை ஒரு பிடி அரைத்துக்கொள்ளவும். பின்னர், இதனை எலுமிச்சையளவு மோரில் கலந்து மூன்று நாள் சாப்பிட்டால்  வயிற்றுக் கடுப்பு குணமாகும்.

சிறுநீர் எரிச்சல் -Thotta Chinungi Plant

தொட்டால் சிணுங்கியின் இலையை ஒரு பிடி அரைத்துக்கொள்ளவும். பின்னர், இதனை, தயிரில் கலந்து சாப்பிட்டு வந்தால் சிறுநீர் எரிச்சல் குணமாகும். சிறுநீரகத்தில் உள்ள நச்சுகள் வெளியேறும்.

மாதவிடாய் சார்ந்த பிரச்சனைகள் -Thotta Chinungi Plant

தொட்டால் சிணுங்கியின் இலையைப் பறித்து சுத்தம் செய்துக்கொள்ளவும். பின்னர், தேவையான அளவில் சிறுவெங்காயத்தையும், சீரகத்தையும் சேர்த்து அரைத்துக்கொள்ள வேண்டும். அரைத்த விழுதை பசு மோரில் கலந்து சாப்பிட்டு வந்தால் மாதவிடாய் சார்ந்த பிரச்சனைகள் குணமாகும்.

இதையும் படிக்கலாமே-

  1. வெங்காயத் தாளின் மருத்துவக் குணங்கள் -Onion Leaf Benefits
Share this post

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top