30 நாளில் தொப்பையைக் குறைக்க வேண்டுமா? – Thoppai Kuraiya

தொப்பையைக் குறைக்க

Thoppai Kuraiya தொப்பையால்  மக்கள் பெரிதும் அவதிப்படுகின்றனர். தொப்பையைக் குறைக்க பல முயற்சிகளை மேற்கொண்டும் பலன் கிடைக்காமல் அவதிப்படுகின்றனர். மிக எளிமையான வழியில் தொப்பையைக் குறைப்பது எப்படி? என்பதைப் பற்றி காண்போம்.

தொப்பை குறைய உணவு அட்டவணை

அதிகாலை எழுந்தவுடன் வெதுவெதுப்பான நீரை பருக வேண்டும்.

காலை கிரீன் டீயை பருக வேண்டும். வேக வைத்த முட்டை ,பாதாம் பருப்பை எடுத்துக் கொள்ள வேண்டும்.

மதிய உணவாக கீரை, ஃப்ரூட் சாலட் எடுத்துக் கொள்ள வேண்டும்.

இரவு உணவாக காய்கறி சூப்பை எடுத்துக் கொள்ள வேண்டும்.

தொப்பையைக் குறைக்கக்கூடிய வழிமுறைகள்… -Thoppai Kuraiya

முருங்கைக்கீரை மற்றும் இஞ்சியை நன்றாக அரைத்து, அதனை வடிகட்டிக்கொள்ளவும். பின்னர், அத்துடன் எலுமிச்சை சாறைக் கலந்து குடித்து வந்தால் தொப்பை குறையும்.

அன்னாச்சி பழத்தைத் தோல் நீக்கி சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக்கொள்ள வேண்டும். அத்துடன் ஓமம் கலந்து நன்றாக கொதிக்கவிட்டு, வடிக்கட்டி குடித்து வந்தால் தொப்பை குறையும்.

அருகம்புல்லை நன்றாக அரைத்து, அதனை வடிகட்டி பாலுடன் கலந்து குடித்து வந்தால், தொப்பை குறையும்.

நெல்லிக்காய் மற்றும் இஞ்சியை நன்றாக அரைத்து, வடிக்கட்டி குடித்து வந்தால், தொப்பை குறையும்.

தண்ணீர் அதிகமாக குடிக்க வேண்டும். தண்ணீர் அதிகமாக குடிப்பதன் மூலம் வயிற்றில் உள்ள கொழுப்புகள் அனைத்தும் கறையும்.

நெல்லிக்காய் சாறுடன் கறிவேப்பிலை, மிளகு, உப்பு மற்றும் தேன் கலந்து குடித்து வந்தால், தொப்பையானது குறையும்.

ஒவ்வொரு உணவு உண்டப்பின்பும் வெந்நீர் குடிக்கும் பழக்கதைக் கொண்டு வர வேண்டும். எண்ணெயில் பொரித்த உணவு, இனிப்பு உணவுகளைத் தவிர்க்க வேண்டும்.

தண்ணீரில் சோம்பு, சீரகம், ஓமம் போட்டு கொதிக்கவிடவும். அத்துடன், தேன் கலந்து, வெறும் வயிற்றில் குடித்தால் தொப்பை குறையும்.

தண்ணீரில் கிராம்பை போட்டு கொதிக்கவிடவும். அத்துடன் பெருங்காயம், உப்பு, எலுமிச்சை சாறு கலந்து குடிக்க வேண்டும். இவ்வாறு, செய்வதன் மூலம் தொப்பை குறையும்.

தண்ணீரில் கொத்தமல்லி விதை, இலவங்கப்பட்டை போட்டு கொதிக்கவிடவும். பின்னர், ஆப்பிள் சீடர் வினிகர் மற்றும் எலுமிச்சை சாறு கலந்துக்கொள்ளவும். இந்த தண்ணீரை வடிக்கட்டி குடித்து வந்தால், தொப்பையானது குறையும்.

தொப்பை குறைய உடற்பயிற்சி- thoppai kuraiya exercise

தொப்பையை குறைக்க செய்ய வேண்டிய உடற்பயிற்சிகள் என்னவென்று பார்ப்போம். முதலில் முதுகை நேராக வைத்து நாற்காலியில் உட்கார வேண்டும். இரு புறங்களிலும் கால்களை நீட்ட வேண்டும். விரல்களை தலைக்கு பின்னால் வைக்க வேண்டும். மூச்சை மெதுவாக விட வேண்டும். உடலின் மேல் பகுதியை மெதுவாக தொடையை நோக்கி சாய்க்க வேண்டும். மெதுவாக மூச்சை உள்ளே இழுக்க வேண்டும். இப்பொழுது தலையைத் தூக்கவும். மறுபடியும் இவ்வாறு செய்ய வேண்டும். இவ்வாறு தொடர்ந்து பத்து முறை செய்தால் தொப்பையானது விரைவில் குறையும்.

அடுத்த உடற்பயிற்சி என்னவென்றால் உங்களது கைகளை ,கால்களையும் தரையில் நன்றாக அழுத்தி வைக்க வேண்டும். பின்பு மொத்த உடலையும் கையின் அழுத்தத்தை கொண்டு மேலே எழுப்பி நேராக நிறுத்த வேண்டும். பின்பு கீழே உடனே கொண்டு வர வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் தொப்பையானது விரைவில் குறையும். இந்த உடற்பயிற்சிகள் யாவும் உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

இதையும் படிக்கலாமே

30 நாட்களில் உடல் எடையைக் குறைக்க வேண்டுமா? -உடல் எடை குறைய உணவு அட்டவணை -Udal Edai Kuraiya

Share this post

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top