ஆரோக்கியமான வெண்மையான பற்கள் பெற வேண்டுமா? இதோ சில எளிய வீட்டு வைத்தியம் உங்களுக்காக – Teeth Whitening

வெண்மையான பற்கள்

Teeth Whitening – முத்துப்போன்ற வெண்மையான பற்கள் பெற யாருக்குத்தான் ஆசை இருக்காது. முத்துப்போன்ற வெண்மையான பற்களைப் பெற வேண்டும் என்றால், பற்களை முறையாக பராமரிக்க வேண்டும்.

Teeth whitening At home in tamil – பற்கள் வெண்மையாக என்ன செய்ய வேண்டும்?

காலை மற்றும் இரவு இரண்டு வேளையும் பல் துலக்க வேண்டும். காலையில் சாப்பிடுவதற்கு முன்பாக பல் துலக்க வேண்டும். இரவு சாப்பிட்ட உடன் பல் துலக்க வேண்டும்.

ஒவ்வொரு முறை உணவு உண்டப் பின்பும்  வாய் கொப்பளிக்க வேண்டும். உணவுத் துணுக்குகள் பற்களுக்கு இடையே, மாட்டிக்கொள்ளும். அதனால், பற்களில் சொத்தை, கிருமித்தொற்று, வாய் துர்நாற்றம் ஏற்பட வாய்ப்புண்டு. எனவே, உணவு உண்டப்பின்பு வாய் கொப்பளிக்க வேண்டும்.

மேல்தாடைப் பற்களை கீழ்நோக்கியும், கீழ்தாடைப் பற்களை மேல்நோக்கியும் துலக்க வேண்டும். பக்கவாட்டு பற்களை மேலும் கீழுமாக பல் துலக்க வேண்டும்.

பல் துலக்கியப்பின் பற்களைக் கையால் நன்றாக மசாஜ் செய்ய வேண்டும்.

கேரட் மற்றும் வெள்ளரிக்காய் சாப்பிட்டு வந்தால், பல் பலமாக இருக்கும்.

சிட்ரஸ் பழங்களையும், கீரைகளையும் , புரதச்சத்து மிக்க உணவுகளையும் எடுத்துக்கொள்ள வேண்டும். இதனை, சாப்பிட்டு வந்தால், பல் ஆரோக்கியமாக இருக்கும்.

தினமும் பால் அருந்தி வந்தால், பற்கள் நன்றாக உறுதியாக இருக்கும்.

நகத்தைக் கடிப்பதைத் தவிர்க்க வேண்டும். அதனால், கிருமிகள் உள்ளே நுழைய வாய்ப்புண்டு.

மிக சூடான பொருட்களைச் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். மிகவும் குளிர்ச்சியான பொருட்களைச் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும்.

கடினமான பொருட்களைக் கடிப்பதைத் தவிர்க்க வேண்டும்.

இதையும் படிக்கலாமே

30 நாளில் தொப்பையைக் குறைக்க வேண்டுமா? – Thoppai Kuraiya

சொத்தை பல் புழு வெளியேற – பூச்சி பல் வலி நீங்க – சொத்தை பல் வலி குணமாக பாட்டி வைத்தியம்

Share this post

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top