சாமந்திப் பூவின் மருத்துவக்குணங்கள் – Samanthi Poo Benefits

samanthi poo

Samanthi Poo -சிவந்திப்பூ என்று அழைக்கப்படும்  சாமந்தி பூவில் மருத்துவக்குணங்கள் நிறைந்து காணப்படுகிறது. சாமந்தி பூ மஞ்சள், சிவப்பு, ஆரஞ்சு, வெள்ளை, நீலம் ஆகிய நிறங்களில் பூக்கும் தன்மையுடையது.

தலைவலிSamanthi Poo Benefits

சாமந்தி பூவின் இதழ்களைப் பறித்துக்கொள்ளவும். அதனை, நிழலில் உலர்த்திக்கொள்ளவும். பின்னர்,  பொடி செய்து தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் தலைவலியானது குணமாகும்.

மலச்சிக்கல்Samanthi Poo Benefits

சாமந்தி பூவின் இதழ்களைப் பறித்துக்கொள்ளவும்.அதனை, தண்ணீரில் போட்டுக்கொள்ளவும். தண்ணீரை நன்றாக கொதிக்க வைக்க வேண்டும். இந்த தண்ணீரில் மிளகு, சீரகத்தைப் போட்டுக்கொள்ளவும். தண்ணீர் கொதித்தப்பிறகு, அந்த தண்ணீரை வடிகட்டி குடித்தால் மலச்சிக்கல் குணமாகும்.

உடல் உஷ்ணம்Samanthi Poo Benefits

உடல் உஷ்ணத்தால் மக்கள் பெரிதும் அவதிப்படுவர். இவர்கள் சாமந்தி பூவை கசாயம் செய்து அருந்தி வந்தால் உடல் சூடு நீங்கும்.

உடல் எடை அதிகரிக்கSamanthi Poo Benefits

சாமந்திப் பூவின் இதழ்களை காயவைத்துக்கொள்ளவும். பின்னர், அதனை  பொடி செய்து தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் உடல் பலம் பெறும். எடை அதிகரிக்கும்.

samanthi poo

சுளுக்குSamanthi Poo Benefits

சாமந்திப் பூவின் இதழ்களை நீரில் கொதிக்கவைத்துக்கொள்ளவும். அந்த நீரை சுளுக்கு உள்ள பகுதிகளில் ஒற்றடம் கொடுக்க வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் சுளுக்கு  குணமாகும்.

காய்ச்சல்Samanthi Poo Benefits

சாமந்திப் பூவை கொதிக்க வைத்துக்கொள்ளவும். அதனுடன் சிறிது பனை வெல்லம் சேர்த்து அப்படியே மூடிவைத்துவிடவும்.  சிறிது நிமிடங்கள் கழித்து வடிகட்டி அருந்தி வந்தால் காய்ச்சல் குணமாகும்.

சிறுநீர் எரிச்சல்Samanthi Poo Benefits

சாமந்திப் பூவை நீரில் கொதிக்க வைத்துக்கொள்ளவும். பின்னர், அந்த நீரை அருந்தி வந்தால் சிறுநீர் எரிச்சல் குணமாகும். சிறுநீரகம் சார்ந்த பிரச்சனைகள் குணமாகும்.

இதையும் படிக்கலாமே-

  1. மருத மரத்தின் மருத்துவப் பயன்கள் -Marutha Maram Benefits
Share this post

1 thought on “சாமந்திப் பூவின் மருத்துவக்குணங்கள் – Samanthi Poo Benefits”

  1. Pingback: சங்குப்பூவின் மருத்துவக்குணங்கள்…-sangu poo benefits - ஆரோக்ய பயணம்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top