சுவையான புதினா சாதம் செய்யும் முறை…-Pudina rice
புதினா சாதம் என்றாலே அனைவருக்கும் மிகவும் பிடிக்கும்.புதினா சாதத்தில் மருத்துவக்குணங்கள் நிறைந்து காணப்படுகிறது. வயிறு சார்ந்த பிரச்சகளை அனைத்தையும் இந்த புதினா சாதம் விரட்டியடிக்கும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடிய புதினா சாதத்தைச் செய்யும் முறையைக் காணலாம்.
புதினா சாதம்
தேவையான பொருட்கள்
புதினா – ஒரு கிண்ணம்
புளி சிறிதளவு
பச்சைமிளகாய் -2
இஞ்சி -இரண்டு துண்டு
தாளிக்க தேவையான பொருட்கள்
எண்ணெய் -ஒரு தேக்கரண்டி
கடுகு- ஒரு தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு-ஒரு தேக்கரண்டி
காய்ந்த மிளகாய் -2
முந்திரி பருப்பு -10
உப்பு தேவையான அளவு
புதினா சாதம் செய்யும் முறை
ஒரு மிக்சியில் புதினாவைச் சேர்க்கவும் .அதனுடன் சிறிதளவு புளி சேர்க்கவும். பிறகு, இரண்டு துண்டு இஞ்சி மற்றும் இரண்டு காய்ந்த மிளகாய் சேர்த்து அரைத்து வைக்கவும். பின்னர், ஒரு கடாயில் ஒரு தேக்கரண்டி எண்ணைய் சேர்க்கவும். எண்ணைய் காய்ந்தப்பிறகு ஒரு தேக்கரண்டி கடுகு, ஒரு ஒரு தேக்கரண்டி உளுத்தம் பருப்பு, அதனுடன் இரண்டு காய்ந்த மிளகாய் சேர்த்து வறுக்கவும்.
பிறகு அதனுடன் முந்திரியை சேர்த்து வறுக்கவும். பின்பு அதனுடன் அரைத்த புதினா விழுதை சேர்த்து வதக்கவும். வதக்கிய பிறகு அதனுடன் வேகவைத்த சாதத்தை சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து மெதுவாக கிளறவும். சுவையான புதினா சாதம் தயார்.
Pingback: உங்கள் உடல் எடையைக் குறைக்க உதவும் புதினாடீ செய்யும் முறை…-Pudina tea