சுவையான புதினா சட்னி செய்யும் முறை…-pudina chutney in tamil
புதினா சட்னி அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடிய சட்னியாகும். மிகவும் சுவையான இந்த சட்னியில் சத்துகள் நிறைந்து காணப்படுகிறது. புதினா சட்னி செய்யும் முறையைக் காணலாம்.
புதினா சட்னி – pudina chutney in tamil
தேவையான பொருட்கள்
உளுத்தம் பருப்பு –ஒரு தேக்கரண்டி,
சின்ன வெங்காயம் – 15
பூண்டு பற்கள் – 4
இஞ்சி – 2 துண்டு
பச்சை மிளகாய் – 5
காய்ந்த மிளகாய் – மூன்று
புதினா – இரண்டு கைப்பிடி
மல்லி – ஒரு கைப்பிடி
தேங்காய் துருவல் – ஒரு கிண்ணம்
புளி – சிறிய நெல்லிக்காய் அளவு
உப்பு – தேவையான அளவு
கட்டி பெருங்காயம் – ஒரு துண்டு
தாளிக்க தேவையான பொருட்கள்
கடுகு – அரை தேக்கரண்டி
உளுந்து – அரை தேக்கரண்டி
வர மிளகாய் – 1
கறிவேப்பிலை – ஒரு கொத்து
புதினா சட்னி செய்யும் முறை
ஒரு வாணலை எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். அதில் ஒரு துண்டு கட்டி பெருங்காயத்தை சேர்த்து பொரிக்க வேண்டும். பொரிந்த பெருங்காயத்தை தனியாக ஒரு தட்டில் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். அதே வாணலில் கொஞ்சம் எண்ணெய் விட்டு ஒரு தேக்கரண்டி அளவிற்கு உளுத்தம் பருப்பு சேர்த்து வதக்க வேண்டும்.
புதினா சட்னிக்கு உளுத்தம் பருப்பு அதிகம் சுவையாக இருக்கும். உளுந்து பொன்னிறமாக மாறியதும தனியாக எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். பிறகு அதே வாணலில் கொஞ்சம் எண்ணெய் விட்டு சின்ன வெங்காயத்தை சேர்த்து வதக்க வேண்டும். சின்ன வெங்காயம் சேர்க்கும் பொழுது புதினா சட்னி ருசி தரும்.
இதனுடன் பூண்டு பற்களை சேர்த்து வதக்க வேண்டும். வெங்காயம் மற்றும் பூண்டு நன்கு வதங்கிய பிறகு , இரண்டு துண்டு அளவிற்கு இஞ்சியை சேர்த்து வதக்க வேண்டும். பின்னர், பச்சை மிளகாய் மற்றும் காய்ந்த மிளகாய் ஆகியவற்றை சேர்த்து வதக்க வேண்டும். இவை நன்கு வறுபட்டதும் நன்கு சுத்தம் செய்து வைத்துள்ள புதினா இலைகளை சேர்த்துக் கொள்ள வேண்டும்.
அதே அளவிற்கு ஒரு கைப்பிடி மல்லி தழைகளை சேர்க்க வேண்டும். இவை நன்றாக வதக்க வேண்டும். பிறகு ஒரு கப் அளவிற்கு தேங்காய் துருவலை சேர்த்துக் கொள்ள வேண்டும். தேங்காய் நன்கு வறுபட்டதும் அடுப்பை அணைத்து ஆற வைக்க வேண்டும். இவை நன்கு ஆறியதும் மிக்ஸி ஜாரில், அவற்றை போட்டுக்கொள்ள வேண்டும்.
தேவையான அளவிற்கு உப்பு போட்டுக்கொள்ள வேண்டும். சிறிய அளவு புளியை அதனுடன் சேர்த்துக் கொள்ள வேண்டும். பின்னர் பொரித்து வைத்துள்ள கட்டி பெருங்காயம் மற்றும் உளுந்தம் பருப்பையும் அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
தேவையான அளவிற்கு எண்ணெய் விட்டு எண்ணெய் நன்கு காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை, வர மிளகாய் ஆகியவற்றை தாளித்து புதினா சட்னியுடன் சேர்த்துக்கொள்ளவும். சுவையான புதினா சட்னி தயார்.
இதையும் படிக்கலாமே-
உங்கள் உடல் எடையைக் குறைக்க உதவும் புதினாடீ செய்யும் முறை…-Pudina tea
Pingback: சுவையான புதினா சாதம் செய்யும் முறை…-Pudina rice
Pingback: பிரியாணி சுவையில் தக்காளி சாதம் செய்யும் முறை...-thakkali sadam seivathu eppadi