ஊளைச் சதையைக் குறைக்கும் பிரண்டையின் மகத்துவம் – Pirandai Benefits in Tamil

Pirandai Benefits in Tamil

Pirandai Benefits in Tamil -வஜ்ரவல்லி என்ற பெயர் கொண்ட பிரண்டை கொடியானது மருத்துவ குணம் கொண்டது. பிரண்டை கொடி வகையைச் சார்ந்தது.

பிரண்டை வகைகள்

பிரண்டை வகைகள்

பிரண்டையில் பல வகைகள் உள்ளன. அவை, சிவப்பு பிரண்டை, உருண்டைப் பிரண்டை, முப்பிரண்டை, தட்டைப்பிரண்டை, களிப்பிரண்டை, தீம்பிரண்டை, புளிப்பிரண்டை, ஓலைப்பிரண்டை ஆகியவை ஆகும். பிரண்டையைத் துவையலாகவும், தோசையாகவும், குழம்பாகவும் செய்து சாப்பிடலாம். பிரண்டையின் வேரானது பெரும்பாலும் மருத்துவதற்கு பயன்படுகிறது. பிரண்டையை நறுக்குவதற்கு முன்பு தேங்காய் எண்ணெய் விரலில் தடவி கொள்வது நல்லது. அப்போதுதான் கை அரிக்காமல் இருக்கும். அல்லது கை கிளவுஸ் அணிந்து கொண்டும் பிரண்டையை நறுக்கலாம்.பிரண்டையின் மருத்துவ குணத்தை அறியலாம்.

பிரண்டையின் பயன்கள்…

பிரண்டையின் பயன்கள்
  • நினைவுத்திறனை அதிகரிக்கச் செய்யும்.
  • உடல் அசதியைப் போக்கும்.
  • ஊளைச்சதையைக் குறைக்கும்.
  • குடல் புண்ணைக் குணமாக்கும்.
  • இரைப்பை அழற்சியைச் சரி செய்யும்.
  • பல் சார்ந்த பிரச்சனைகளைச் சரி செய்யும்.
  • குடல் புழுக்களை வெளியேற்றும்.
  • கெட்ட கொழுப்பை வெளியேற்றும்.
  • இரத்த ஓட்டத்தைச் சீராக்கும்.
  • உயர் இரத்த அழுத்தமானது குணமாகும்.
  • இதய நோய்கள் குணமாகும்.
  • நீரழிவு நோயைக் கட்டுப்படுத்தும்.
  • செரிமான பிரச்சனையைக் குணப்படுத்தும்.
  • முதுகு வலி, இடுப்பு வலியானது குணமாகும்.
  • எலும்பை பலப்படுத்தும்.

பிரண்டையின் நன்மைகள்…

பிரண்டையின் பயன்கள்

பிரண்டையை உணவில் சேர்த்துக் கொண்டால் ஞாபக திறன் அதிகரிக்கும். மேலும், உடலானது சுறுசுறுப்பாக இருக்கும்.

பிரண்டை இலை மற்றும் கறிவேப்பிலை, கொத்தமல்லி இவற்றை நன்றாக வதக்கிக்கொள்ளவும். இத்துடன் இஞ்சி, மிளகு, பூண்டு, காய்ந்த மிளகாய் சேர்த்து அரைத்தால் பிரண்டை துவையல் தயராகும். இந்த பிரண்டை துவையலானது இதயம் சார்ந்த நோய்களைக் குணப்படுத்தும்.

பிரண்டை உப்பை உணவில் சேர்த்துக்கொண்டால் ஊளை சதையானது குறையும். இந்த உப்பை காலையிலும், மாலையிலும் பாலுடன் கலந்து சாப்பிட்டால் நல்ல பலன் கிடைக்கும்.

பிரண்டையைத் துவையல் ஆக்கி சாப்பிட்டு வந்தால், குடல் புண், இரைப்பை அழற்சி ஆகியவை குணமாகும். மேலும், பல் சார்ந்த பிரச்சனைகளான, பல் வலி, பல் சொத்தை, பல் கூச்சம் ஆகியவை குணமாகும். மேலும், பிரண்டை துவையலானது குடலில் உள்ள புழுக்களை வெளியேற்றும்.

பிரண்டையைப் பறித்துக் கொள்ளவும். அதனை நன்றாக சுத்தம் செய்து கொள்ளவும். அதனை சிறு சிறு துண்டாக்கி, நெய்யில் வதக்கி, உப்பு கலந்து காலையிலும், மாலையிலும் உட்கொண்டு வந்தால் மூலநோயனாது குணமாகும். மேலும், உயர் இரத்த அழுத்தம், இதயம் சார்ந்த நோய்கள், நீரழிவு நோய் ஆகியவை குணமாகும். அது மட்டுமின்றி இரத்த ஓட்டமானது சீராகும்.

பிரண்டையைத் துவையலாக செய்து சாப்பிட்டால், செரிமான பிரச்சனைகள் சரியாகும்.

பிரண்டையைப் பறித்து நறுக்கி கொள்ளவும். அதனை அரைத்து சாறு எடுத்துக்கொள்ளவும். இந்த சாறுடன் நல்லெண்ணெய் கலந்து குடித்து வந்தால் முதுகு வலி மற்றும் இடுப்பு வலியானது குணமாகும்.

பிரண்டையைப் பறித்து நறுக்கி கொள்ளவும். அத்துடன் கல் உப்பு சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். இதனை வலி மற்றும் சுளுக்கு உள்ள இடத்தில் வைத்து கட்டு போட்டால் வலியானது குறையும்.

பிரண்டைத் துவையல், பிரண்டை தோசை, பிரண்டை குழம்பு தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், எலும்பு சார்ந்த நோய்கள் குணமாகும்.

பிரண்டையைப் பறித்து நறுக்கி கொள்ளவும். அத்துடன் கல் உப்பு சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். இதனை எலும்பு முறிவு உள்ள இடத்தில் வைத்து, கட்டு போட்டால் எலும்பு முறிவானது குணமாகும்.

பிரண்டை துவையலைச் சாப்பிட்டு வந்தால், வாயுத் தொல்லை நீங்கும்.

பிரண்டை உப்புடன் ஜாதிக்காய்த்தூள் சேர்த்து சாப்பிட்டு வந்தால் உடலானது வலிமை பெறும்.

பிரண்டை உப்புடன்  வெண்ணெய் கலந்து சாப்பிட்டால், வாய்ப்புண், வாய்நாற்றம், உதடு வெடிப்பு ஆகியவை சரியாகும்.

பிரண்டை வற்றலை சாப்பிட்டால் பசியின்மை, நாக்குச் சுவையின்மை ஆகியவை குணமாகும்.

பிரண்டை தாவரத்தின் மருத்துவ குணத்தைப் பற்றி அறிந்து, அதனை சரியான முறையில் பயன்படுத்தினால் நிச்சயம் நன்மை பயக்கும்.

பிரண்டை குழம்பு

பிரண்டை குழம்பு

சட்டியில் நல்லெண்ணெய் விட்டு வடகம், கடுகு, சீரகம், வெந்தயம் சேர்த்து தாளித்து பூண்டு ,கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும். பிறகு நறுக்கிய பிரண்டைத்துண்டுகளை சேர்த்து விடவும். நன்றாக வதங்கியதும் புளிக்கரைசல் விட்டு மிளகாய்த்தூள், மஞ்சள் தூள், உப்பு கலந்து மேலும் சிறிது நீர் விட்டு கொதிக்க விடவும். எண்ணெய் பிரிந்து வரும் போது இறக்கி விடவும். அருமையான பிரண்டைக் காரக்குழம்பு தயார். இதை சாதத்துக்கு மட்டும் அல்லாமல் இட்லி, தோசை சாப்பிடலாம். மூன்று நாட்கள் வரை கெடாமல் இருக்கும்.

பிரண்டை

பிரண்டை குழம்பு

துவரம் பருப்பை குக்கரில் வேகவைத்து குழைய விடுங்கள். பிரண்டையை சிறுதுண்டுகளாக நறுக்கி நல்லெண்ணெய் 2 டீஸ்பூன் விட்டு இலேசாக வதக்கி எடுக்கவும். வாணலியில் 2 டீஸ்பூன் நல்லெண்ணெய் விட்டு கடுகு, வரமிளகாய்,பூண்டு சேர்த்து வதக்கி பொடியாக நறுக்கி வதக்கிய பிரண்டை துண்டுகளை சேர்க்கவும். பிறகு பருப்பு நீரை சேர்த்து கொதிக்க விடவும். பிரண்டை நன்றாக வெந்ததும் மஞ்சள் தூள், மசித்த துவரம்பருப்பு, பெருங்காயம், மிளகுசீரகத்தூள்,எலுமிச்சைச்சாறு அனைத்தையும் சேர்த்து ஒரு கொதி விட்டு இறக்கி கொத்துமல்லித்தழை, கறிவேப்பிலை சேர்த்து இறக்கவும். இதை சூப் போல் அப்படியே குடிக்க செய்யலாம். குழந்தைகளுக்கு சாதத்தில் போட்டு பிசைந்தும் கொடுக்கலாம்.

பிரண்டை உப்பு

பிராண்டையை எரிக்காமல் பஸ்மாக்கினால் பிரண்டை உப்பு கிடைக்கும். மூட்டுவலிக்கு மிகவும் நல்லது.நாட்டுமருந்து கடைகளில் கிடைக்கும்

பிரண்டை பொடி

பிரண்டையை சுத்தம் செய்து வெறும் வாணலியில் வறுத்து கொட்டி ஆறவிடுங்கள். அனைத்தையும் தனித்தனியாக வாணலியில் வறுத்து வைத்துகொள்ளுங்கள். தட்டில் கொட்டி ஆறியதும் மிக்ஸியில் அரைத்து கொள்ளுங்கள். முதலில் பிரண்டையை அரைத்து பிறகு மற்ற பொருள்களை சேர்த்து அரைக்கவும். இந்த பொடியை கண்ணாடி பாட்டிலில் வைத்து அவ்வபோது பயன்படுத்துங்கள். இது நல்லெண்ணெய் சேர்த்து இட்லி, தோசைக்கு தொட்டு கொள்ளலாம். உதிரான சாதத்தில் பொடியை கலந்து சாப்பிடலாம். எல்லாருமே விரும்பி சாப்பிடுவார்கள்.

இதையும் படிக்கலாமே

பிரியாணி சுவையில் தக்காளி சாதம் செய்யும் முறை…-thakkali sadam seivathu eppadi

சுவையான புதினா சாதம் செய்யும் முறை…-Pudina rice

Share this post

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top