பல்லி விழும் பலன்கள் – Palli Vilum Palan in Tamil நம் உடலில் தலை,இடது கை,வலது கை,வலது கால், தலை உச்சி என எங்கு விழுந்தால் என்ன பலன் தெரியுமா?

Palli Vilum Palan

நம் அனைவரது வீட்டிலும் பல்லி நிச்சயமாக இருக்கும். எதிர்பராத விதமாக பல்லி நம் மீது விழுவதும் உண்டு. அதனால், பயம் கொள்ளத் தேவையில்லை. பல்லி நம் மேலே விழுவதால் வரவிருக்கும் நல்லது மற்றும் கெட்டதை சுட்டிக் காட்டுவதாக அமையும். கடவுள் மனிதனோடு பேசுவதற்கு பல வழிகளை வைத்துள்ளார். கடவுள் ஒரு சில நேரங்களில் ஒரு சில தகவல்களை நமக்குக் குறிப்பால் உணர்த்துவார். அந்த வகையில் கடவுளின் செய்தியாளான பல்லி மூலம் நமக்கு நடவிருக்கும் நன்மை, தீமைகளைச் சுட்டிக்காட்டுவார்.

பல்லிக்கு தெய்வீக சக்திகள் இருக்கின்றன.  காஞ்சிபுரம் ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோவிலிலும் மற்றும் திருச்சி ஸ்ரீரங்கநாதர் கோவிலிலும் பல்லியின் உருவங்கள் இடம்பெற்றுள்ளது. இங்கு வரும் பக்தர்கள் பல்லியை தெய்வமாக வணங்குகின்றனர். அங்கு இருக்கும் பல்லியைத் தொட்டு வணங்கினால், நமது தோஷங்கள் அனைத்தும் நிவர்த்தியாகும். பல்லி என்பது நவகிரகங்களில் கேது பகவானை குறிக்கிறது. மேலும், பல்லியானது, பெருமாளின் அம்சமாக உள்ளது. பல்லி சத்தமிடுவது முதல் அது நம் உடலில் எங்கே வந்து விழுகிறது என்பது வரை அதன் செயல்கள் ஒவ்வொன்றும் பல முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது.

பல்லி தலையில் விழுந்தால் என்ன பலன் தெரியுமா?

Palli Vilum Palan in Tamil

பல்லி தலையில் விழுந்தால் கெட்ட சகுனம் ஆகும். தலையின் இடதுபக்கம் பல்லி விழுந்தால் துன்பம் உண்டாகும் அல்லது மரணச் செய்தியானது வரும். தலையின் வலது பக்கம் பல்லி விழுந்தால் கலகம் ஏற்படும்.

பல்லி உச்சந்தலையில் விழுந்தால் என்ன பலன் தெரியுமா?

பல்லி தலையில் விழுந்தால் கெட்ட நேரத்தை சமாளிக்க பல்லி சொல்லும் எச்சரிக்கையாக உள்ளது. தலையில் பல்லி விழுந்தால் மற்றவர்களின் கடும் எதிர்ப்பு, மன நிம்மதி இழத்தல் நடக்கக் கூடும். தலையில் பல்லி விழுந்தால் அவரின் உறவினரோ அல்லது தெரிந்தவரோ மரணம் ஏற்படலாம்.

பல்லி நெற்றியில் விழுந்தால் என்ன பலன் தெரியுமா?

நெற்றியின் இடது பக்கம் பல்லி விழுந்தால் புகழ் உண்டாகும். வலது பக்கம் விழுந்தால் மங்கலம் வீடு தேடி வரும். நெற்றி மீது பல்லி விழுவது நல்ல சகுணமாக பார்க்கப்படுகின்றது.

பல்லி தொடையில் விழுந்தால் என்ன பலன் தெரியுமா?

தொடையின் இடது பகுதியில் பல்லி விழுந்தால் துன்பம் நேரும். தொடையின் வலது பகுதியில் பல்லி விழுந்தால் துக்கம் உண்டாகும். தொடையில் பல்லி விழுந்தால் மன சஞ்சலம் ஏற்படும்.

பல்லி முதுகில் விழுந்தால் என்ன பலன் தெரியுமா?

முதுகின்  இடது பகுதியில் பல்லி விழுந்தால் கவலை உண்டாகும். முதுகின்  வலது பகுதியில் பல்லி விழுந்தால் நஷ்டம் உண்டாகும்.

பல்லி தோளில் விழுந்தால் என்ன பலன் தெரியுமா?

தோளின்  இடது பகுதியில் பல்லி விழுந்தால் பேரின்ப செய்தி கேட்க நேரிடும். தோளின்  வலது பகுதியில் பல்லி விழுந்தால் வெற்றி உண்டாகும்.

பல்லி மணிகட்டில் விழுந்தால் என்ன பலன் தெரியுமா?

Palli Vilum Palan in Tamil

மணிகட்டின் இடது பகுதியில் பல்லி விழுந்தால் புகழ் உண்டாகும். மணிகட்டின்  வலது பகுதியில் பல்லி விழுந்தால் துன்பம் உண்டாகும்.

பல்லி கணுக்காலில் விழுந்தால் என்ன பலன் தெரியுமா?

கணுகாலின் இடது பகுதியில் பல்லி விழுந்தால் வெளியூர் செல்லும் வாய்ப்பு உண்டாகும். கணுகாலின் வலது பகுதியில் பல்லி விழுந்தால் செலவு உண்டாகும்.

பல்லி புருவத்தில் விழுந்தால் என்ன பலன் தெரியுமா?

பல்லி புருவத்தில் விழுந்தால் உயர் பதவி உள்ளவரிடமிருந்து உதவி கிடைக்கும். புருவங்களில் பல்லி விழுவது என்பது மிகப்பெரிய பதவி உங்களுக்கு கிடைக்க வாய்ப்பு உள்ளது என்பதைக் குறிக்கும். ஏற்கனவே அதிகாரம்மிக்க பதவிகளில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும்.

பல்லி கண்ணில் விழுந்தால் என்ன பலன் தெரியுமா?

கண்ணின் இடது பகுதியில் பல்லி விழுந்தால் நல்லது நடக்கும் மற்றும் அன்பு பெருகும். கண்ணின்  வலது பகுதியில் பல்லி விழுந்தால் தோல்வி மற்றும் மன அழுத்தம் உண்டாகும்.

பல்லி கைவிரலில் விழுந்தால் என்ன பலன் தெரியுமா?

கைவிரலில் வலது  பகுதியில் பல்லி விழுந்தால் பரிசு பெற வாய்ப்பு உள்ளது. கைவிரலில் இடது பகுதியில் பல்லி விழுந்தால் கவலை உண்டாகும்.

பல்லி கழுத்தில்  விழுந்தால் என்ன பலன் தெரியுமா?

கழுத்தின் வலது  பகுதியில் பல்லி விழுந்தால் பகை தொடரும். கழுத்தின் இடது பகுதியில் பல்லி விழுந்தால் வெற்றி உண்டாகும்

பல்லி மார்பில்  விழுந்தால் என்ன பலன் தெரியுமா?

Palli Vilum Palan in Tamil

மார்பு பகுதியில் பல்லி விழுந்தால் நன்மை கிடைக்கும்.

பல்லி உதட்டில் விழுந்தால் என்ன பலன் தெரியுமா?

பல்லி மேல் உதட்டில் விழுந்தால் எதிர்ப்பு வரும். பல்லி கீழ் உதட்டில் விழுந்தால் லாபம் கிடைக்கும்.

தலைமுடியில் பல்லி விழுவது அதிர்ஷ்டத்தின் அறிகுறி

தலை முடியில் பட்டு பல்லி ஓடுவது என்பது அதிர்ஷ்டத்தின் அறிகுறி உள்ளது. சில நேரங்களில் நமக்கு நன்மைகள் கிடைக்கவில்லை என்றால் கூட நமக்கு நடக்கவிருக்கும் தீமைகளில், அல்லது கெட்டது ஏதோ ஒன்று நம்பி விட்டு விலகும் என்று நம்பபடுகிறது. பல்லி தலை முடியில் பட்டு, உடனடியாக விலகிச் செல்வது என்பது உங்களுக்கு வரவிருந்த தீமை அல்லது துரதிர்ஷ்டம் நம்மை பாதிக்காமல் விலகிச் சென்று விட்டது என்பதை குறிக்கும்.

பல்லி பாதத்தில் விழுந்தால் என்ன பலன் தெரியுமா?

பாதத்தின்  வலது  பகுதியில் பல்லி விழுந்தால் நோயால் அவதி ஏற்படும். பாதத்தின் இடது பகுதியில் பல்லி விழுந்தால் கெட்டது நடக்கும்.

Palli Vilum Palan in Tamil

பல்லி விழும் பலன் அட்டவணை 2023 – Palli Vilum Palan Table

பல்லி விழும் பலன்கள்

மேலும் தகவல்கள்

  1. பல்லி விழும் பலன் எத்தனை நாட்கள் இருக்கும் தெரியுமா?

பல்லியானது நம் மேலே விழுந்த நாளிலிருந்து ஏழு நாட்கள் வரை அதன் பலன்  இருக்கும்.

2. பல்லி விழும் பலன் உண்மையா?

பல்லி தரையில் விழுந்தால் அதற்கு நேரடி அதிர்ச்சி உண்டாகும். நம் உடலின் மீது பல்லி விழுந்தால் அதற்கு அதிர்ச்சி குறைவு, நாம் அதிர்ச்சி அடைகிறோம். எனவே, அந்த அதிர்ச்சியின் மூலம் நமக்கு வரவிருக்கும் நன்மை, தீமைகளை நம்மால் உணர முடியும். எனவே, பல்லி விழும் பலன் உண்மை ஆகும்.

3. பல்லியை மிதித்தால் என்ன பலன் தெரியுமா?

பல்லியை தெரியாமல் மிதித்து விட்டாலோ, தவறுதலாக கொன்று விட்டாலோ தோஷம் ஏற்பட வாய்ப்புண்டு. பல்லியானது வணங்கத்தக்க தெய்வீக சக்தி கொண்ட உயிரினமாக கருதப்படுகிறது. நவக்கிரகங்களில் கேதுவின் அவதாரமாகவும், விஷ்ணுவின் அவதாரமாகவும் பல்லி கருதப்படுகிறது.

4. கோவிலில் பல்லி சொல்லும் பலன் என்ன தெரியுமா?

கோவிலில் இறைவனை வணங்கும்போது  பல்லிகள் சத்தமிட்டால் நமது வேண்டுதல் நிறைவேறும் என்று நம்பிக்கை உண்டு. கடவுளின் செய்தியாளன், கடவுளின் தூதுவனான பல்லியின் மூலம் கடவுள் நம்மிடம் பேச விரும்புவார். நமது வேண்டுதல் நிறைவேறும் என்றும், நாம் தொடங்விருக்கும் செயல் வெற்றி அடையும் என்றும் பல்லிகள் கோவிலில் பலன் சொல்லும்.

5. பல்லி காலில் ஏறினால் என்ன பலன் என்ன தெரியுமா?

பல்லி  வலது காலில் உள்ள பாதத்தில் ஏறினால் நமது உடல் ஆரோக்கியத்தின் மீது மிகுந்த கவனம் கொள்ள வேண்டும் என்பதைக் குறிக்கும்.

இடது காலில் பல்லி ஏறினால் நமது உடல் ஆரோக்கியத்தின் மீது மிகுந்த கவனம் கொள்ள வேண்டும் என்பதைக் குறிக்கும்.

6. பல்லி விழுந்தால் செய்ய வேண்டிய பரிகாரம் என்ன தெரியுமா?

உடலின் எந்தப் பகுதியில் பல்லி விழுந்தாலும் உடனே குளிக்க வேண்டும். குளித்துவிட்டு அருகில் உள்ள கோவிலுக்குச் சென்று கடவுளை வணங்க வேண்டும். வீட்டில் தீபம் ஏற்றி இறைவனை வழிபட வேண்டும். இவ்வாறு, செய்தால் பல்லி விழுவதால் எந்த தோஷமும் ஏற்படாது.

காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயிலில் உள்ள தங்கம் மற்றும் வெள்ளிப் பல்லி சிலையைத் தொட்டு வணங்கினால் பல்லி விழுந்த தோஷங்கள் அனைத்தும் விலகும்.

7. பல்லி வீட்டில் இறந்து கிடந்தால் என்ன பலன்?

பல்லி வீட்டில் இறந்து கிடந்தால் எதிர்பாராத சில விரயம் உண்டாகும்.

8. பல்லி விழும் பலன் ஆண்களுக்கு மற்றும் பெண்களுக்கு ஒரே மாதிரியாக இருக்குமா?

பல்லி விழும் பலன் ஆண்களுக்கு மற்றும் பெண்களுக்கு ஒரே மாதிரியாக இருக்காது. ஆண்களின் வலது பக்கத்திலும், பெண்களின் இடது பக்கத்திலும் பல்லி விழுவது நல்ல சகுனமாக கருதப்படுகிறது. இதனால் நல்ல பலன்கள் கிடைக்கின்றன. அதே நேரம் பல்லி ஒரு ஆணின் இடது பக்கத்திலோ அல்லது ஒரு பெண்ணின் வலது பக்கத்திலோ பல்லி விழுந்தால், கெட்ட சகுனமாக கருதப்படுகிறது.

ஆண்களுக்கு வலது பக்கத்திலும், பெண்களுக்கு இடது பக்கத்திலும் பல்லி விிழுந்தால் நல்ல பலன்கள் கிடைக்கும்.

இதையும் படிக்கலாமே

பல்லி சொல்லும் பலன் :வீட்டில் பல்லி கத்தினால் என்ன பலன் – Palli Sollum Palan in Tamil

Share this post

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top