நீர் சுருக்கு பிரச்சனை இனி வரவே வராது- Neer surukku home remedies
நீர் கடுப்பு வரக் காரணம்
வெயிலில் அலைவதாலும், நெடுந்தூரம் பயணம் மேற்கொள்வதாலும், போதிய அளவு தண்ணீர் குடிக்காத காரணத்தாலும் உடல் உஷ்ணம் ஏற்படுகிறது. உடல் உஷ்ணத்தால் தலை வலி, வயிற்று வலி, முடி உதிர்தல், தோல் வறட்சி, முகப்பரு போன்ற பிரச்சனைகள் வரக்கூடிய வாய்ப்புள்ளது.
கஞ்சி
சோறு வடித்த கஞ்சியில் அரைத்த நீர்முள்ளி இலைகளைக் கலந்து, வடிகட்டி குடித்தால் நீர் சுருக்கு குணமாகும்.
இளநீர்
இளநீரில் வெந்தயத்தை ஊற வைத்து, அந்த தண்ணீரைக் குடித்து வந்தால் நீர் சுருக்கு குணமாகும்.
சீரக பொடி
சீரக பொடி மற்றும் கற்கண்டை வெதுவெதுப்பான தண்ணீரில் கலந்து குடித்து வந்தால் நீர் சுருக்கு குணமாகும்.
உளுந்து
உளுந்தை ஊற வைத்து, மறுநாள் காலையில் இந்த தண்ணீரை வடிகட்டி பருகி வந்தால், நீர் சுருக்கு குணமாகும்.
பார்லி கஞ்சி
பார்லி கஞ்சியைக் குடித்து வந்தால் சிறுநீர் எரிச்சல் குறைந்து, நீர் சுருக்கு குணமாகும்.
இதையும் படிக்கலாமே –
குழந்தையின் விக்கல் வரக் காரணம் என்ன? Reason for baby hiccups…