மூக்கிரட்டை கீரையின் மருத்துவ குணங்கள் – Mookirattai keerai benefits
mookirattai keerai benefits – சாரணைக் கொடி, சாரணத்தி என்று அழைக்கப்படும் மூக்கிரட்டை கீரையில் மருத்துவ குணங்கள் நிறைந்து காணப்படுகிறது. நிலத்தைப் பற்றிக்கொண்டு, படர்ந்து வளரக்கூடிய தாவரங்களில் ஒன்றுதான் மூக்கிரட்டை கீரை. மூக்கிரட்டையில் அமினோ அமிலங்கள், வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் போன்றவை உள்ளன. மூக்கிரட்டையின் மலர்கள் வெண்மையாகவும், தண்டுகள் பச்சையாகவும் இருக்கும். மூக்கிரட்டையில் உள்ள மருத்துவக்குணங்களைக் காண்போம்.
பார்வை திறன் – Mookirattai keerai benefits
மூக்கிரட்டை இலைகள், பொன்னாங்கன்னி இலைகள் மற்றும் கீழாநெல்லி இலைகள் ஆகியவற்றை எடுத்துக்கொள்ளவும். , அவற்றை நன்கு சுத்தம் செய்து கொண்டு அரைத்துக்கொள்ளவும். அரைத்த விழுதை, மோரில் கலந்து தினமும் சாப்பிட வேண்டும். இவ்வாறு சாப்பிடுவதன் மூலம் பார்வை குறைபாடு அனைத்தும் குணமாகும். பார்வை தெளிவாகும்.
உடல் எடை குறைய – Mookirattai keerai benefits
மூக்கிரட்டை இலையைப் பறித்து சுத்தம் செய்து கொள்ளவும். பின்னர், சிறுகுறிஞ்சான், நெருஞ்சில், மிளகு, சீரகம், திப்பிலி ஆகியவற்றை எடுத்துக் கொள்ளவும். இவற்றை பொடியாக்கிக் கொள்ளவும். இதனை தினமும் காலையிலும், மாலையிலும் தேனில் கலந்து சாப்பிட வேண்டும். இவ்வாறு சாப்பிடுவதன் மூலம் உடல் எடையானது குறையும். உடலானது வலிமையாக இருக்கும்.
மலச்சிக்கல் – Mookirattai keerai benefits
மூக்கிரட்டை செடியை எடுத்துக்கொள்ளவும். அத்துடன் சமூலம் எனும் முழுச் செடியையும் எடுத்துக்கொள்ளவும். இரண்டையும் உலர்த்திக்கொள்ளவும். பின்னர், பொடியாக்கி காலையிலும், மாலையிலும் தேனில் கலந்து சாப்பிட்டு வர மலச்சிக்கல் பிரச்சனை குணமாகும். வயிறு சார்ந்த பிரச்சனை குணமாகும்.
இரத்த சோகை – Mookirattai keerai benefits
மூக்கிரட்டை வேரைச் சேகரித்துக்கொள்ளவும். அதனை, நீரில் போட்டு, கொதிக்க வைத்துக்கொள்ளவும். பின்னர், அந்த நீரை ஆற வைத்து பருகினால் இரத்த சோகை குணமாகும்.
சளி – Mookirattai keerai benefits
மூக்கிரட்டை வேரைச் சேகரித்துக்கொள்ளவும். அதனை, நீரில் போட்டு, கொதிக்க வைத்துக்கொள்ளவும். பின்னர், அந்த நீரை ஆற வைத்து பருகினால் இரத்த சோகை குணமாகும்.
நச்சுகளை வெளியேற்றும் – Mookirattai keerai benefits
மூக்கிரட்டை செடியானது , கல்லீரல் மற்றும் சிறுநீரகத்தில் உள்ள கழிவுகளை வெளியேற்றும் தன்மையைக் கொண்டது. சிறுநீரகம் சார்ந்த பிரச்சனைகளைக் குணப்படுத்தக்கூடியது. கல்லீரலில் உள்ள கிருமிகளை வெளியேற்றும்.
புற்றுநோய் – Mookirattai keerai benefits
மூக்கிரட்டையானது புற்றுநோய் செல்களை வளரவிடாமல் தடுக்கிறது. புற்றுநோயைக் குணப்படுத்தும் தன்மையைக் கொண்டது.
சுவாச கோளாறு – Mookirattai keerai benefits
மூக்கிரட்டை இலைகளை சுத்தம் செய்துக்கொள்ளவும். அதனை முறையாக சமைத்து சாப்பிட்டு வந்தால், சுவாச சார்ந்த பாதிப்புகள் குணமாகும்.
வயிற்றுப்போக்கு – Mookirattai keerai benefits
மூக்கிரட்டை வேரை சற்று இடித்து, விளக்கெண்ணையில் இட்டு காய்ச்ச வேண்டும். இதனை, காலையில் வெறும் வயிற்றில் பருகி வந்தால் வயிற்றுப் போக்கு ஏற்படும். உடலில் உள்ள நச்சுகள் வெளியேறும்.
மூச்சுத் திணறல் – Mookirattai keerai benefits
மூக்கிரட்டை வேரைச் சேகரித்துக்கொள்ளவும். அதனை, நீரில் போட்டு, கொதிக்க வைத்துக்கொள்ளவும். அதில் மிளகுத்தூள் சேர்த்து சாப்பிட்டு வந்தால் மூச்சுத் திணறல் குணமாகும்.
Pingback: இலுப்பை மரத்தின் மருத்துவ பயன்கள்...Madhuca tree benefits..