கை, கால், இடுப்பு பகுதியில் உள்ள கருமை நீங்க இதை செய்யுங்கள் போதும்-Karumai neenga
Karumai neenga- பெரும்பாலும் வெயிலில் அலைவதாலும், ஊட்டச்சத்து குறைப்பட்டாலும், ஆடைகளை இறுக்கமாக அணிவதாலும் இடுப்பு மற்றும் கை, கால்களில் கருமை ஏற்படுகிறது. கருமை நீங்க சில எளிய முறையை காணலாம்.
எலுமிச்சைப் பழம்
நன்றாக பழுத்த எலுமிச்சைப் பழத்தை இரண்டாக்கி சாறு பிழிந்து எடுத்துக்கொள்ளவும். அதனை கை, கால்களில் கருமையாக உள்ள இடத்தில் தடவ வேண்டும். சிறிது நேரம் ஊற வைக்க வேண்டும். பின்னர், சோப்பு போட்டு குளித்தால் கருமை நீங்கும்.
தேங்காய் எண்ணெய
இறுக்கமான ஆடை அணிவதால், சிலருக்கு இடுப்பு பகுதியில் கருமை தோன்றும். அவர்கள் கருமை உள்ள இடத்தில் தேங்காய் எண்ணெயைத் தடவி மசாஜ் செய்தால் கருமை நீங்கும். மேலும், இறுக்கமான ஆடை அணிவதைத் தவிர்க்க வேண்டும்.
ஆரஞ்சு பழத்தோல்
ஆரஞ்சு பழத்தோலை வெயிலில் நன்றாக காய வைக்க வேண்டும். பின்னர், பொடியாக்கி அதனை பாலுடன் கலந்து சருமத்தில் தடவ வேண்டும். இந்த பொடியை சருமத்தில் தடவி வந்தால் வெயிலினால் ஏற்பட்ட கருமை நீங்கும்.
பாதாம் பருப்பு
பாதாம் பருப்பை ஊற வைத்து, தோல் நீக்கிக்கொள்ளவும். பின்னர், அதனை அரைத்து தயிருடன் கலந்து கொள்ள வேண்டும். அத்துடன் அரைத்த திராட்சை மற்றும் தேனைக் கலந்து தடவினால் கருமை நீங்கும்.
கற்றாழை
கற்றாழையைச் சுத்தம் செய்து சாறை எடுத்துக்கொள்ளவும். கற்றாழை சாசை ரோஸ் வாட்டர் உடன் சேர்த்து கலந்து, கருமையான இடத்தில் தடவி 15 நிமிடம் ஊறவைத்து, பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இவ்வாறு செய்தால் கருமை நீங்கும்.
முட்டை
முட்டையின் வெள்ளைக்கருவுடன் தயிரை கலந்துக்கொள்ளவும். கருமையான இடத்தில் அவற்றை தடவினால் கருமை நீங்கும்.
Pingback: அழகான புருவம் பெற இதை செய்தால் போதும்-Adarthiyana puruvam pera