கண்டங்கத்திரியில் இவ்வளவு மருத்துவ குணங்களா? இது தெரியாமப் போச்சே-Kandankathri
முட்கள் நிறைந்த கண்டங்கத்திரி முழு செடியுமே மருத்துவக் குணம் வாய்ந்த செடியாகும். இதன் காய் கத்திரிக்காய் போல் காணப்படும். கண்டங்கத்திரியின் காய் மஞ்சள் நிறத்தில் காணப்படும். கண்டங்கத்திரியில் பல மருத்துவ குணங்கள் நிறைந்து காணப்படுகிறது.
சுவாசக் கோளாறு
கண்டங்கத்திரி செடியில் உள்ள முட்களை நீக்கிக்கொள்ளவும். முழு செடியையும் காய வைத்து, பொடியாக்கிக் கொள்ளவும். அதனை தேனில் கலந்து சாப்பிட்டால், சுவாசக்கோளாறு நீங்கும்.
தலைவலி
கண்டங்கத்திரி இலையை அரைத்துக்கொள்ளவும். அதை நெற்றியில் பற்று போட்டால், தலைவலி குணமாகும். இனி தலைவலி பிரச்சனையை வராது.
சைனஸ்
கண்டங்கத்திரி பழத்தை சிறு சிறு துண்டாக நறுக்கிக்கொள்ளவும். அத்துடன் துளசி, வெற்றிலை ஆகியவற்றை நல்லெண்ணெயில் போட்டுக்கொள்ளவும். பின்னர், இவற்றை நன்றாக காய்ச்சி, தலைக்குத் தடவினால் சைனஸ் குணமாகும்.
சிறுநீர் எரிச்சல்
கண்டங்கத்திரியை அரைத்துக்கொள்ளவும். அதனை வடிகட்டி , அத்துடன் தேன் கலந்து சாப்பிட்டு வந்தால், சிறுநீர் கழிக்கும்போது ஏற்படும் எரிச்சல் குணமாகும். சிறுநீரகம் சார்ந்த பிரச்சனைகள் நீங்கும்.
பல் ஈறு
கண்டங்கத்திரி செடியை எரித்துக்கொள்ளவும். அந்த சாம்பலால் பல் துலக்கினால், ஈறுகள் வலிமை பெறும். பல் சார்ந்த பிரச்சனைகள் தீரும்.
புண் மற்றும் அரிப்பு
கண்டங்கத்திரியின் மலர்களை எடுத்து, நல்லெண்ணெயில் போட்டு காய்ச்சிக்கொள்ளவும். பின்னர், வடிகட்டி ஆசனவாய் பகுதியில் தடவினால் அந்த பகுதியில் உள்ள புண் மற்றும் அரிப்பு குணமாகும்.
வயிறு சார்ந்த கோளாறு
கண்டங்கத்திரி வற்றலானது நுரையீரலில் இருக்கும் நச்சுகளை வெளியேற்றும். வயிறு சார்ந்த பிரச்சனைகளைக் குணப்படுத்தும்.
பசியின்மை
கண்டங்கத்திரி வற்றலை அரைத்துக்கொள்ளவும். அரைத்தப் பொடியைத் தேனில் கலந்து சாப்பிட்டு வந்தால் பசியின்மை குணமாகும்.
தோல் சார்ந்த நோய்கள்
கண்டங்கத்திரி இலையை நல்லெண்ணெயில் காய்ச்சி வடிக்கட்டி, தோல் மீது தடவி வந்தால் தோல் சார்ந்த நோய்கள் குணமாகும். சருமானது பொலிவை பெறும்.
வியர்வை துர்நாற்றம்
கண்டங்கத்திரியின் இலை சாறை தேங்காய் எண்ணெயில் கொதிக்க வைத்துக்கொள்ளவும். பின்னர், உடலில் தடவி வந்தால் வியர்வை துர்நாற்றம் நீங்கும்.
கொழுப்பு அடைப்பு
கண்டங்கத்திரி இரத்தக் குழாய்களில் உண்டாகியிருக்கும் கொழுப்பு அடைப்பைக் குணப்படுத்தும்.
இதையும் படிக்கலாமே –
மன அழுத்தம் குறைய நாம் செய்ய வேண்டியது-Stress relief activities
Pingback: கண்டங்கத்திரி குழம்பு, கண்டங்கத்திரி தீயல், கண்டங்கத்திரி ரசம் போதும் சளி, இருமல், சுவாசக்கோள
Pingback: இந்த உணவுகள் போதும் பித்தம் சார்ந்த பிரச்சனை பறந்தோடும்-Pitham