கல்யாண முருங்கையின் மருத்துவக் குணங்கள் – Kalyana Murungai
Kalyana Murungai- முருங்கைக்காய் என்றாலே அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடிய ஒரு பொருளாகும். அது, வெறும் சுவைக்கு மட்டும் இன்றி, மருத்துவ குணங்களையும் அறிந்து அதனை உணவில் பயன்படுத்தி வருகின்றனர். கல்யாண முருங்கையின் மருத்துவக்குணத்தைப் பற்றி அறிவோம்.
கல்யாண முருங்கை பயன்கள்
மாதவிடாய் சார்ந்த பிரச்சனை
கல்யாண முருங்கை இலையைப் (kalyana murungai leaf) பறித்துக்கொள்ளவும். அதனை, நன்றாக கசக்கி சாறெடுத்துக்கொள்ளவும். இந்த சாறை தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். இவ்வாறு குடித்து வந்தால், மாதவிடாய் சார்ந்த பிரச்சனை குணமாகும்.
குழந்தை பாக்கியம்
கல்யாண முருங்கை மரத்து இலைகளைப்(kalyana murungai leaf) பிழிந்து சாறு எடுத்துக்கொள்ளவும். தினமும் காலையில் வெறும் வயிற்றில் இதனை, குடிக்க வேண்டும். இவ்வாறு, குடித்து வந்தால், பெண்களுக்குக் குழந்தை பாக்கியம் கிடைக்கும். கருமுட்டையானது வளர்ச்சியடையும்.
தாய்ப்பால் சுரக்க
கல்யாண முருங்கை மரத்து இலையை(kalyana murungai leaf) நறுக்கிக்கொள்ளவும். அத்துடன், வெங்காயம், தேங்காய் மற்றும் நெய் சேர்த்து வதக்கிக்கொள்ள வேண்டும். பின்னர், இதனை, அரைத்து சாப்பிட்டு வந்தால், தாய்ப்பால் சுரக்கும்.
முள்ளு முருங்கை
தோல்சார்ந்த நோய்கள்
கல்யாண முருங்கை மரத்து இலையுடன் (kalyana murungai leaf) கஸ்தூரி மஞ்சள் சேர்த்துக்கொள்ளவும். பின்னர், இதனை அரைத்து தோல் மீது தடவ வேண்டும். இவ்வாறு, தொடர்ந்து தடவி வந்தால், தோல் சார்ந்த நோய்கள் குணமாகும்.
சளி
கல்யாண முருங்கை மரத்து இலையுடன்(kalyana murungai leaf)கல் உப்பை சேர்த்துக்கொள்ளவும். பின்னர், இதனை நன்றாக அரைத்துக்கொள்ள வேண்டும். தினமும் சாப்பிட்டு வந்தால், சளி தொல்லை தீரும்.
உடல் பருமன்
கல்யாண முருங்கை மரத்து இலையைப்(kalyana murungai leaf) பறித்துக்கொள்ளவும். அதனை, நன்றாக அரைத்துக்கொள்ளவும். பின்னர், இதனை வடிகட்டி சாறு எடுத்துக்கொள்ளவும். இந்த சாறை தினமும் வெறும் வயிற்றில் பருகி வந்தால், உடல் பருமன் குறையும்.
இதையும் படிக்கலாமே
மூக்கிரட்டை கீரையின் மருத்துவ குணங்கள்-Mookirattai keerai benefits