மன பயம் நீங்கி தைரியம் உண்டாக – How to come out from depression in Tamil
நாம் யார், நம்முடைய குணம் என்ன என்பதை நமக்கே உணர்த்துவதற்காக தான் நெருக்கடிகள் ஏற்படுவதாக சான்றோர்கள் பலர் சொல்வதுண்டு. அப்படி பயம், பதற்றம் ஏற்படும் போது என்ன செய்ய வேண்டும் என காஞ்சி மகாபெரியவா வழிகாட்டி உள்ளார்.பிரச்சனை என்று வந்தால் மனதில் பதற்றமும், பயமும் அனைவருக்கும் வருவது சகஜமான ஒன்று தான். ஆனால் பிரச்சனைகள், நெருக்கடியான சூழ்நிலைகள் வரும் தான் நாம் நிதானத்தை கடைவிடாமல் இருக்க வேண்டும் என பெரியவர்கள் சொல்லுவார்கள்.
ஹனுமான் காயத்ரி மந்திரம் :
“ஓம் அஞ்சனிசுதாய வித்மஹி
வாயுபுத்ராய தீமஹி
தன்னோ மாருதித் ப்ரசோதயாத்”
மிகவும் சக்தி வாய்ந்த ஹனுமான் காயத்ரி மந்திரத்தை சொல்லி ஆஞ்சநேயரை வழிபட்டு வந்தால் மனதில் உள்ள பயங்கள், குழப்பங்கள் நீங்கி தெளிவும், தைரியமும் பிறக்கும்.
பயம், பதற்றம் போக்கும் மந்திரம் :
அந்த பக்தர்களிடம் பேச துவங்கி மகாபெரியவா, “தைரியம் மற்றும் நிதானத்திற்கு பெயர் பெற்றவர் ஆஞ்சநேயர். ஸ்ரீராம பிரானே, சீதையை மீட்கும் மிகப் பெரிய பொறுப்பை அத்தனை பேர் இருந்தும் அனுமானிடம் தானே கொடுத்தார். ஸ்ரீராமனே கொடுக்கும் போது நாமெல்லாம் எம்மாத்திரம்? சனிக்கிழமையில் ஆஞ்சநேயர் கோவிலுக்கு சென்று, உன் மன குழப்பங்கள், பாரங்கள், பிரச்சனைகள் அனைத்தையும் அவரிடம் ஒப்படைத்து விட்டு, மன தைரியத்தை கொடுக்கும் படி அவரிடம் வேண்டிக் கொள். அப்படி வேண்டிக் கொள்ளும் போது இந்த ஒரு மந்திரத்தையும் தவறாமல் ஜபம் செய். பயம் நீங்கி, தைரியம் தானாக வந்து விடும்” என்றார்.
ஆஞ்சநேயர் வழிபாடு :
இதை கேட்டு சிரித்த மகா பெரியவா, ” உனக்கு ஆஞ்சநேயர் கோவிலுக்கு செல்லும் பழக்கம் உண்டா?” என கேட்டார். உண்டு என்றார் அந்த பக்தர்கள். அப்படி போகும் போது என்ன வேண்டிக் கொள்வார் என மகா பெரியவா கேட்க, என்னுடைய குடும்பம் நன்றாக இருக்க வேண்டும், நான் நன்றாக இருக்க வேண்டும் என வேண்டிக்கொள்வேன் என்றார் பக்தர்கள். என்றாவது எனக்கு மன தைரியத்தை கொடு என ஆஞ்சநேயரிடம் கேட்டிருக்கிறாயா? என மகாபெரியவா கேட்டதும், சற்றே யோசித்து நின்றார் பக்தர்கள்.
மகாபெரியவா காட்டிய வழி :
அப்படி காஞ்சி மகாபெரியவரை சந்திக்க வந்த பக்தர்கள் ஒருவருக்கும் பயம், பதற்றம் இருந்தது. மடத்தில் ஒருநாள் மகா பெரியவா அனைவருக்கும் ஆசி வழங்கிக் கொண்டிருந்த போது அங்கு வந்த இளைஞர் ஒருவர், மகா பெரியவாவை வணங்கி விட்டு, கண்ணீர் விட்டு அழ துவங்கி விட்டார். அவரிடம் என்ன பிரச்சனை என விசாரித்தார் மகா பெரியவா. அதற்கு பதிலளித்த அந்த இளைஞர், “சாமி, எனக்கு 35 வயதாகிறது. திருமணமாகி குழந்தையும் உள்ளது. ஆனால் என் மனம் காரணமே இல்லாமல் பயப்படுகிறது. அடிக்கடி பதற்றம் ஆகி விடுகிறேன். நாளை நடக்க போவதை நினைத்து இன்றே கவலைப்பட துவங்கி விடுகிறேன். இதனால் இன்றைய சந்தோஷங்களை அனுபவிக்க முடியாமல் தவற விட்டு விடுகிறேன். வாழ்நாள் முழுவதும் எனக்கு இந்த பிரச்சனை இருந்து கொண்டே இருக்குமா? இந்த பயம், பதற்றம் நீங்குவதற்கு நீங்கள் தான் ஒரு வழி சொல்ல வேண்டும்” என்று கேட்டார்.
பயம், பதற்றம் நீங்க வழி :
ஒவ்வொருவருக்கும் உடல் தைரியத்தை விட மன தைரியம் மிக மிக முக்கியமான ஒன்றாகும். மன தைரியம், தெளிவு இருந்தால் எந்த காரியத்தையும் சுலபமாக செய்து முடித்து விடலாம் என பெரியவர்கள் சொல்வார்கள். ஆனால் இந்த மன தைரியம் அனைவரிடமும், அனைத்து நேரங்களிலும் இருக்கிறதா என கேட்டால் இல்லை என்று தான் சொல்ல வேண்டும். நெருக்கடியான சூழ்நிலைகள், கஷ்டங்கள், துன்பங்கள் வரும் போது மனதில் பதற்றமும், பயமும் தானாக வந்து விடுகிறது. இது மனித இயல்பு தான் என்றாலும், சிலருக்கு காரணமே இல்லாமல் எப்போதும் மனதில் ஒரு விதமான பயம், பதற்றம் இருந்து கொண்டே இருக்கும். இன்னும் சிலர் எதற்கெடுத்தாலும் பதற்றமாகி விடுவார்கள். பயப்படுவார்கள்.
இதையும் படிக்கலாமே
Self confidence tamil motivational quotes -Motivational quotes in Tamil