Filariasis symptoms – யானைக்கால் நோய் -Filariasis Meaning in Tamil
யானைக்கால் நோய் அறிகுறிகள் -Filariasis symptoms
Filariasis symptoms – கைகால், மார்பு அல்லது பிறப்புறுப்புகளில் உண்டாகும் நீர்க்கோர்வையால் அவை இயல்பான அளவைவிடப் பலமடங்கு பெரியதாகும். இதற்குக் காரணம் நிணநீர் மண்டலத்தின் நாளங்கள் தடைபடுவதே. யானைக்கால் நோய் என்பது வெப்பமண்டல நோயாகும், அங்கு தோல் தடிமனாகவும் கடினமாகவும் மாறும். யானைக்கால் நோய் அறிகுறிகள் கைகள் மற்றும் கால்கள் வீக்கம் மற்றும் விரிவாக்கம் ஆகியவை அடங்கும்.
- முற்போக்கான மற்றும் வலியற்ற வீக்கம், ஆரம்பத்தில் முனைகளில், பெரும்பாலும் குறிப்பிடத்தக்க குறைபாடுகளுக்கு வழிவகுக்கிறது
- ‘யானை போன்ற’ அமைப்புடன் அடர்த்தியான மற்றும் நிறமாற்றம் கொண்ட தோல்
- வீக்கம் மற்றும் தோல் மாற்றங்கள் காரணமாக அசௌகரியம் மற்றும் வலி
- பாக்டீரியல் தொற்று, செல்லுலிடிஸ் மற்றும் அல்சரேஷன் ஆகியவற்றுக்கு எளிதில் பாதிக்கப்படுகிறது
யானைக்கால் நோய் வர காரணம்
கியூலெக்ஸ், ஏடிஸ், அனோஃபெலஸ் கொசுக்களால் பரப்பப்படுகின்றன. புருகியா மலாயி என்ற இன்னொரு பாரசைட்டை மன்சோனியா மற்றும் அனஃபெலஸ் கொசுக்கள் பரப்புகின்றன.
யானைக்கால் வீக்கம் குறைய
மனித உடலில் ஓடும் நிணநீர் திரவத்துடன் கலந்து விட்டால் அது உடலின் கீழ்பாகங்களையும் மற்ற சில அவயவங்களை பாதிக்கும். தோலுக்கு அடிபாகம் தடிமனாகி Elephantiasis என்ற யானைக்கால் போல ஆகிவிடும்.
சரியான நேரத்தில் இந்த நோய் உள்ளதை கண்டறிந்தால் குணப்படுத்த மருந்துகள் உள்ளன. மேலும், சுகாதாரமான பழக்கங்களும் மிகவும் அவசியம்.
அல்பெண்டேசோலுடன் (400 மி.கி) நதிக்குருடு உள்ள இடங்களில் ஐவர்மெக்டினும் (150-200 மை.கி/கி.கி) மற்ற இடங்களில் டையீதைல்கார்பமைசினும் (6 மி.கி/கி.கி) அளிக்கப்படும். இவை இரத்த ஓட்டத்தில் இருந்து மைக்ரோஃபிலாரேக்களை அகற்றும்.
யானைக்கால் நோய்க்கு மருந்துகள் இருந்தாலும் கால் வீக்கம் பிறர் கவனத்தை ஈர்க்கும் அருவருப்பான தோற்றத்தை அளிக்கும். எனவே ஃபிலேரியா கொசுக்கள் கடிப்பதைத் தவிர்ப்பதே சிறந்ததாகும்.
யானைக்கால் நோய் சித்த மருத்துவம் – Treatment of Filariasis
கருங்குறுவை சாதத்துடன் மூலிகை சேர்த்து லேகியம் செய்து சாப்பிட்டுவந்தால், யானைக்கால் நோய் மட்டுப்படும். கஞ்சி, இட்லி, தோசைக்கு ஏற்ற ரகம்.
கருங்குறுவை அரிசியை மூலிகைகளுடன் சேர்க்கும்போது, வீரியம் அதிகரிப்பதுடன் கிரியா ஊக்கியாகவும் செயல்படும்.
நோய்வாய்ப்பட்டிருப்பவர்கள் இந்த அரிசியைக் கஞ்சி வைத்துக் குடித்துவந்தால் உடலில் நோய் எதிர்ப்பு ஆற்றல் அதிகமாகி மருத்துவமனை செல்லாமலேயே குணமடையலாம்.
யானைக்கால் நோய் எவ்வாறு பரவுகிறது?
தொற்றுக்கிருமிகளைக் கொண்ட கொசு ஆரோக்கியமான ஒருவரைக் கடிக்கும் போது மைக்ரோஃபிலாரே என்ற நுண்புழுக்கள் நிணநீர் மண்டலத்துக்குள் நுழைகின்றன. இங்கு அவை வளர்ச்சியுற்ற புழுக்களாகி பல ஆண்டுகள் வாழ்கின்றன.
வளர்ச்சியுற்ற பாரசைட்டுகள் மேலும் மைக்ரோஃபிலாரேக்களை உற்பத்தி செய்கின்றன. இவை இரத்த வெளிப்புற ஓட்டத்தில் செல்லும்போது குறிப்பாக இரவு நேரங்களில் கடிக்கும் கொசுக்களால் உறிஞ்சப்படுகின்றன. இதே சுழற்சி இன்னொரு ஆரோக்கியமானவருக்குள் தொடங்குகி/றது.
இதையும் படிக்கலாமே
கழுத்து கருமை முற்றிலும் நீக்க வேண்டுமா? – Neck Black Remove Tips in Tamil
விஷமுறிவு மருந்து- கட்டுவிரியன் பாம்பு வகைகள் – Kattu viriyan