செரிமானக் கோளாறு நீங்க வேணுமா? இத செய்யுங்க போதும்- Digestion problem sariyaga
Digestion problem sariyaga- நாம் உண்ணக்கூடிய உணவு சரியாக செரிமானம் ஆகவில்லை என்றால், உடலில் பல வகையான பிரச்சனை ஏற்பட வாய்ப்புண்டு. தண்ணீரை் அதிகம் குடிக்காமல் இருத்தல், நொறுக்குத்தீனிகள் அதிகம் உட்கொள்ளுதல், உடல் உழைப்பு இல்லாத வேலை ஆகிய காரணங்களால் செரிமானம் சார்ந்த பிரச்சனைகள் ஏற்படுகிறது.
நம் உண்ணக்கூடிய உணவு செரிமானம் ஆகவில்லையென்றால், மலச்சிக்கல், உடல் கனமாக இருத்தல், தலைவலி, பசியின்மை போன்ற பிரச்சனைகள் ஏற்படும்.
நார்ச்சத்து
நார்ச்சத்து நிறைந்த பழங்கள், காய்கறிகள், பருப்பு வகைகள் ஆகியவற்றைச் சாப்பிட வேண்டும். நார்ச்சத்து மிக்க பொருட்களைச் சாப்பிடுவதன் மூலம் செரிமானக் கோளாறு நீங்கும். செரிமானக் கோளாறைச் சரிசெய்யக் கூடிய மிக எளிமையான வழியைக் காண்போம்.
சீரகம்
சீரகத்தை நீரில் போட்டு கொதிக்க வைத்துக்கொள்ளவும். தண்ணீர் நன்றாக கொதித்தப்பிறகு அந்த நீரை வடிகட்டிக் குடிக்கவும் . இந்த தண்ணீரைக் குடித்து வந்தால் செரிமானம் சார்ந்த பிரச்சனை நீங்கும்.
இதையும் படிக்கலாமே –
சிறுநீரக கற்கள் கரைய வேண்டுமா? இந்த ஐந்து பொருட்கள் போதும்-Kidney stone karaiya
ஓமம்
ஓமத்தை நீரில் போட்டு கொதிக்க வைத்துக்கொள்ளவும். தண்ணீர் நன்றாக கொதித்தப்பிறகு அந்த நீரை வடிகட்டிக் குடிக்கவும் . இந்த தண்ணீரைக் குடித்து வந்தால் செரிமானம் சார்ந்த பிரச்சனை நீங்கும்
இஞ்சி
இஞ்சியைச் சிறு சிறு துண்டாக நறுக்கிக்கொள்ளவும். இஞ்சியை நீரில் போட்டு நன்றாக கொதிக்க வைக்கவும். பின்னர், அந்த தண்ணீரை வடிகட்டி குடித்து வந்தால் செரிமானம் சார்ந்த பிரச்சனை நீங்கும்.
சாதம் வடித்த கஞ்சி
சாதம் வடித்த கஞ்சியை எடுத்துக்கொள்ளவும். அந்த கஞ்சியில் மஞ்சள் தூள் மற்றும் பெருங்காயம் கலந்துக்கொள்ளவும். இதனை சாப்பிட்டு வந்தால் செரிமானம் சார்ந்த பிரச்சனை நீங்கும்.
தயிர்
தயிரை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். தயிரை உணவில் சேர்த்துக்கொள்வதன் மூலம் உடல் உஷ்ணம் குறையும். தயிரில் உள்ள பாக்டீரியாக்கள் உணவை எளிதில் சீரணம் அடையச் செய்யும். செரிமானம் சார்ந்த பிரச்சனைகள் முழுவதும் நீங்கும்.
தண்ணீர்
அதிகளவு தண்ணீர் குடிக்க வேண்டும். தண்ணீர் குடித்தால் உடல் புத்துணர்வாக இருக்கும். செரிமானம் நன்றாக நடக்கும். செரிமானம் மற்றும் வயிறு சார்ந்த பிரச்சனை நீங்கும்.
சுடத்தண்ணீர்
ஒவ்வொரு முறை உணவு உண்டப்பின்பும் சுடத்தண்ணீர் குடிக்க வேண்டும். சுடத்தண்ணீர் குடிப்பதன் மூலம் செரிமானம் நன்றாக நடக்கும். செரிமானம் சார்ந்த பிரச்சனைகள் நீங்கும்.
முழு தானியங்கள்
முழு தானியங்களில் நார்ச்சத்து நிறைந்து காணப்படுகிறது.அதனால்தான் அவை செரிமானத்திற்கு நல்லது. பழுப்பு அரிசி, முழு கோதுமை ரொட்டி மற்றும் பிற முழு தானியங்கள் செரிமானத்திற்கு நன்மை பயக்கும்.
வாழைப்பழம்
வாழைப்பழத்தில் பொட்டாசியம் நிறைந்துள்ளது. வாழைப்பழம் செரிமான பிரச்சனைகளுக்கு தடுக்கிறது. செரிமான பிரச்சனைகளை தடுக்க தினமும் ஒரு வாழைப்பழம் சாப்பிட்டால் போதும். வாழைப்பழங்கள் இரைப்பை குடல் பிரச்சனைகளை திறம்பட குணப்படுத்தும்.
கிவிப்பழம்
கிவிப்பழங்கள் செரிமான ஆரோக்கியத்திற்கு நல்லது. எனவே செரிமான பிரச்சனைகளுக்கு, நீங்கள் சர்க்கரை குறைவாகவும் நார்ச்சத்து அதிகமாகவும் உள்ள கிவிப்பழங்களை உட்கொள்ள வேண்டும். அதிக ஊட்டச்சத்துக்களையும், தினசரி வைட்டமின் சியையும் உள்ளடக்கியது. கிவிப்பழத்தைச் சாப்பிட்டால் செரிமானம் சார்ந்த பிரச்சனைகள் குணமாகும்.
Pingback: சிறுநீரக கற்கள் கரைய வேண்டுமா? இந்த ஐந்து பொருட்கள் போதும்-Kidney stone karaiya