இரத்த அழுத்தம் குறைய இதை சாப்பிடுங்க போதும்-Blood pressure

இரத்த அழுத்தம் குறைய

Blood pressureஎண்ணெய் பொருட்கள், உப்பு, சர்க்கரை அதிகம் உட்கொள்வதால் இரத்தத்தில் கொலஸ்ட்ரால் அதிகமாகச் சேரத் தொடங்குகிறது. இதயத்திற்கு செல்லக்கூடிய இரத்த நாளங்களில் அடைப்பு ஏற்படுகிறது. இதன் காரணமாக உயர் இரத்த அழுத்தமானது தொடங்குகிறது. சரியான ஊட்டச்சத்து மிக்க உணவுகளை உட்கொண்டால் இரத்த அழுத்தத்தைக் குறைக்கலாம்.

ஓட்ஸ்

காலை உணவாக ஒட்ஸை எடுத்துக்கொண்டால் இரத்த அழுத்தம் சீராக இருக்கும். ஓட்ஸில் நார்ச்சத்து அதிகமாக உள்ளது. கொழுப்பு சத்து குறைவாக உள்ளது. உப்பு குறைவாக உள்ளது. காலையில் மணமணக்க எண்ணெய் ஊற்றி, தோசையைச் சாப்பிடுவதற்குப் பதிலாக ஓட்ஸைச் சாப்பிட்டு வந்தால் இரத்த அழுத்தம் குறையும்.

மாதுளை

தினமும் காலையில் மாதுளைப் பழத்தைச் சாப்பிட வேண்டும். மாதுளை பழச்சாறைச் சாப்பிட்டு வந்தால், உயர் இரத்த அழுத்த பிரச்சனை சரியாகும். மாதுளை இரத்த ஓட்டத்தைச் சீராக வைக்க உதவுகிறது. இரத்தத்தில் உள்ள நச்சுகளை வெளியேற்றுகிறது.

பூண்டு

அடிக்கடி உணவில் பூண்டைச் சேர்த்துக்கொள்ள வேண்டும். பூண்டை உணவில் சேர்த்துக்கொள்வதன் மூலம் இரத்த நாளங்கள் விரிவடையும். இதன் மூலம் இரத்த நாளங்களில் உள்ள கொழுப்பு கரைந்து வெளியேறும். இரத்த அழுத்தம் ஏற்படாமல் தடுக்கும்.

பீட்ரூட்

பீட்ரூட்டை உணவில் அதிகளவு சேர்த்துக்கொள்ள வேண்டும். பீட்ரூட்டை அரைத்து சாறாகவோ பருகலாம். இதனால் இரத்த ஓட்டம் சீராகும். புதிய இரத்த உற்பத்திக்கு உறுதுணையாக இருக்கும். இரத்த அழுத்தம் ஏற்படாமல் தடுக்கும்.

 உடலுக்கும், மனதிற்கும் ஓய்வு கொடுத்து வந்தால் இரத்த அழுத்தமானது குறையும். உடல் மற்றும் மனதைப் பதட்டத்திற்கு உள்ளாக்கமல் சீராக வைத்துக்கொள்ள வேண்டும்.

வெந்தயம்

வெந்தயத்தை ஊற வைத்துக்கொள்ளவும். அந்த தண்ணீரை தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால் ரத்த அழுத்தம் குறையும். இந்த வெந்தய நீரில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. காலையில் எழுந்தவுடன் டீ, காபி போன்றவற்றைத் தவிர்த்து இதனைக் குடித்து வந்தால் உடல் புத்துணர்வாக இருக்கும்.

தேங்காய் தண்ணீர்

இரத்த அழுத்தம் குறைய தேங்காய் நீரை பருக வேண்டும். தேங்காய்களில் இருந்து உடலுக்குப் புத்துணர்ச்சியூட்டுகின்றன. மேலும், அவற்றில் ஏராளமான எலக்ட்ரோலைட்டுகள் மற்றும் வைட்டமின்கள் உள்ளன, தேங்காய் நீர் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. இரத்த அழுத்த உள்ளவர்கள் தேங்காய் தண்ணீர் குடிப்பது மிகவும் நல்லது ஆகும்.

பூசணி விதைகள்

பூசணி விதைகள் அளவில் சிறியதாக இருக்கலாம், ஆனால் அதில் ஊட்டச்சத்து நிறைந்துள்ளது. பூசணி விதைகளில் உள்ள அதிக மெக்னீசியம் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துகிறது. எனவே, உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு பூசணி விதைகளைச் சாப்பிட்டால் இரத்த அழுத்தம் குறையும்.

சால்மன் மீன்

சால்மன்மீன் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தக்கூடியது. சால்மன் மீனில் கொழுப்பு குறைவாக உள்ளது, மேலும் இதில் ஏராளமான புரத உள்ளது. அதிக மெக்னீசியம் உள்ளது, இது உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு நன்மை பயக்கும்.

பருப்பு வகைகள்

பருப்பு வகைகள் மிகவும் சுவையாகவும் சத்தாகவும் இருப்பதோடு இரத்த அழுத்தத்தைக் குறைப்பதாகவும் உள்ளது. கிட்னி பீன்ஸ், கொண்டைக்கடலை, சோயாபீன்ஸ் போன்றவை இரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் வைக்கும். இதில் உள்ள உயர் பொட்டாசியம் உயர் இரத்த அழுத்த நோயாளிகளுக்கு சிறந்தது.

இதையும் படிக்கலாமே-

இரத்த அழுத்தம் குறைய இதை செய்தால் போதும்-Blood pressure

Share this post

2 thoughts on “இரத்த அழுத்தம் குறைய இதை சாப்பிடுங்க போதும்-Blood pressure”

  1. Pingback: இரத்த அழுத்தம் குறைய இதை செய்தால் போதும்-Blood pressure

  2. Pingback: செரிமானக் கோளாறு நீங்க வேணுமா? இத செய்யுங்க போதும்- Digestion problem sariyaga

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top