அமுக்கரா கிழங்கின் மருத்துவப் பயன்கள் – Amukkara Kizhanku
Amukkara Kizhanku-அமுக்கரா கிழங்கு மனிதனின் உடல் மற்றும் மனதை ஆரோக்கியமாக வைக்க உதவுகிறது. அமுக்கரா கிழங்கு கசப்பு சுவையுடையது. ஆனால், அதில் எண்ணற்ற மருத்துவக்குணங்கள் அடங்கியுள்ளது. உடலுக்கு வலிமையைச் சேர்க்க உதவுகிறது. சோர்வை நீக்கி, புத்துணர்வாக இருக்க உதவுகிறது. அமுக்கிரா கிழங்கில் உள்ள மருத்துவக் குணத்தைப் பற்றி காண்போம்.
இடுப்பு வலி – Amukkara Kizhanku
அமுக்கிரா கிழங்கை பச்சையாக எடுத்துக்கொள்ளவும். அந்த கிழங்கில் பசுவின் பால்விட்டு அரைத்துக்கொள்ளவும். பின்னர், அதனைக கொதிக்க வைத்துக்கொள்ளவும். இந்த பாலை பருகி வந்தால் தீராத இடுப்பு வலி கூட குணமாகும்.
உடல் வலிமை – Amukkara Kizhanku
அமுக்கிரா கிழங்கை பொடி செய்துக்கொள்ளவும். அதனை, நெய்யுடன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் உடல் வலிமையாக இருக்கும். உடல் சோர்வு நீங்கும்.
வீக்கம் – Amukkara Kizhanku
அமுக்கிரா கிழங்கு மற்றும் சுக்கை அரைத்துக்கொள்ளவும். அதனை, தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்துக்கொள்ளவும். கெட்டி பதம் வந்தப்பிறகு, அதனை சேகரித்துக்கொள்ளவும். அதனை வீக்கத்தின் மீது தடவ வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் வீக்கமானது குறையும்.
உடல் எடை குறைய – Amukkara Kizhanku
அமுக்கிரா கிழங்கை பாலில் வேக வைத்துக்கொள்ளவும். பின்னர், அந்த கிழங்கை உலர்த்திக்கொள்ளவும். பின் பொடி செய்து, தேனில் கலந்து சாப்பிட்டு வந்தால் உடல் எடை குறையும்.
நரம்புத் தளர்ச்சி – Amukkara Kizhanku
அமுக்கிரா கிழங்கு பொடியை எடுத்துக்கொள்ளவும். அத்துடன் கற்கண்டு சேர்த்து, காலையும் மாலையும் சாப்பிட்டு வந்தால், நரம்பு தளர்ச்சியானது குணமாகும்.
Pingback: வெங்காயத் தாளின் மருத்துவக் குணங்கள்… -Onion leaf benefits