இரண்டே நாளில் வயிறு புண் சரியாக இதை பண்ணுங்க…
வயிறு புண் வர காரணம்
காலை உணவைத் தவிர்த்தல், தாமதமாக உணவு உண்ணல், காரம், புளிப்பு உணவுகளை அதிகம் சாப்பிடுதல் ஆகிய காரணங்களால் வயிற்றுப்புண் வருகிறது. வயிற்றில் வலி மற்றும் எரிச்சல் ஆகியவை வயிற்றுப்புண்ணின் அறிகுறியாகும்.
வயிறு புண் குணமாக
அதிமதுரம்
அரிசி வடித்த கஞ்சியில் அதிமதுரத்தைக் கலந்து குடித்து வந்தால் வயிற்றுப்புண் குணமாகும்.
அதிமதுரம், சுக்கு, ஓமம் ஆகியவற்றை அரைத்து பொடியாக்கி நீரில் போட்டு குடித்து வந்தால் வயிற்றுப்புண் குணமாகும்.
தேங்காய்ப்பால்
தேங்காயை அரைத்து பால் எடுத்து அதை வடிகட்டி குடித்து வந்தால் வயிற்றுப்புண் குணமாகும்.
கரும்பு சாறு
கரும்பு சாறில் சுக்கு கலந்து குடித்து வந்தால் வயிற்றுப்புண் மற்றும் வயிற்று எரிச்சல் குணமாகும்.
மாதுளை
மாதுளைப் பழச்சாறை தினமும் பருகி வந்தால் வயிற்றுப்புண் மற்றும் வயிற்று எரிச்சல் குணமாகும்.
கீரை
மணத்தக்காளி கீரை மற்றும் மணத்தக்காளி வற்றலைச் சாப்பிட்டு வந்தால் வயிற்றுப்புண் குணமாகும்.
அகத்தி கீரையைக் கூட்டாகவும், குழம்பாகவும் செய்து சாப்பிட்டு வந்தால் வயிற்றுப்புண் மற்றும் வயிற்று எரிச்சல் குணமாகும்.
மோர்
மோர் மற்றும் தயிரை உணவில் சேர்த்துக்கொண்டால் வயிற்றுப்புண் குணமாகும்.
மோரில் சீரகம், மிளகு, கறிவேப்பிலை, மஞ்சள் கலந்து குடித்தால்வயிற்றுப்புண் மற்றும் வயிற்று எரிச்சல் குணமாகும்.
அருகம்புல் சாறு
அருகம் புல்லை அரைத்து, சாறு எடுத்து வடிகட்டி, காலையில் வெறும் வயிற்றில் குடித்தால்வயிற்றுப்புண் மற்றும் வயிற்று எரிச்சல் குணமாகும்.
நார்ச்சத்து
நார்ச்சத்து அதிகம் உள்ள பழங்கள் மற்றும் காய்கறிகளைச் சாப்பிட்டு வந்தால், வயிற்றுப்புண் மற்றும் வயிற்று எரிச்சல் குணமாகும்.
அதிகளவு நீரைப் பருகி வந்தால் வயிற்றுப்புண் குணமாகும்.