பல்லி சொல்லும் பலன் :வீட்டில் பல்லி கத்தினால் என்ன பலன் – Palli Sollum Palan in Tamil
Palli sollum palan -கடவுளின் செய்தியாளன், கடவுளின் தூதுவனான பல்லி மூலம் கடவுள் நமக்கு நடவிருக்கும் நன்மை, தீமைகளை முன்கூட்டியே கூறுவார். அதையறிந்து முறையாக செயல்பட்டால், நன்மையின் பலன்களையும், தீமைகள் நம்மை அண்டாமலும் நாம் நம்மை காத்துக்கொள்ளலாம். பல்லி எழுப்பக்கூடிய சத்தத்தை வைத்து கூட நல்லது மற்றும் கெட்டதைக் கணிப்பர்.
பல்லி எழுப்பக்கூடிய சத்தங்களின் வகைகளும், பலன்களும்…
பல்லியானது ஒரு முறை சத்தம் எழுப்பினால் துன்பம் உண்டாகும்.
பல்லியானது இரண்டு முறை சத்தம் எழுப்பினால் தனலாபம் கிடைக்கும்.
பல்லியானது மூன்று முறை சத்தம் எழுப்பினால் மரணம் செய்தி வரும்.
பல்லியானது நான்கு முறை சத்தம் எழுப்பினால் சௌபாக்கியம் உண்டாகும்.
பல்லியானது ஐந்து முறை சத்தம் எழுப்பினால்
பல்லியானது ஆறு முறை சத்தம் எழுப்பினால் பீடை உண்டாகும்.
பல்லியானது ஏழு மற்றும் எட்டு முறை சத்தம் எழுப்பினால் அகமகிழ்வு உண்டாகும்.
நம் அனைவரது வீட்டிலும் பல்லி நிச்சயமாக இருக்கும். எதிர்பராத விதமாக பல்லி நம் மீது விழுவதும் உண்டு. அதனால், பயம் கொள்ளத் தேவையில்லை. பல்லி எழுப்பக்கூடிய சத்தத்தை வைத்து கூட நல்லது மற்றும் கெட்டதைக் கணிப்பர். எந்த திசையில் இருந்து பல்லி சத்தம் எழுப்பினால் என்ன பலன் என்பதைப் பற்றிக் காண்போம்.
வடக்கு திசையில் பல்லி சத்தமிட்டால் என்ன பலன் தெரியுமா?
பல்லியானது வாயு மூலையான வடக்கு திசையிலிருந்து சத்தமிட்டால் சுப செய்திகள் வீட்டை நோக்கி வரும். சுப நிகழ்ச்சிகள் வீட்டில் நடக்கும்.
கிழக்கு திசையில் பல்லி சத்தமிட்டால் என்ன பலன் தெரியுமா?
பல்லியானது கிழக்கு திசையிலிருந்து சத்தமிட்டால் நல்லது கிடையாது. இதனால், நம் மனதில் தேவையற்ற பயம் வரக்கூடும். கெட்ட செய்திகள் வரும். குடும்பத்தில் குடும்ப தலைவனுக்கோ, தலைவிக்கோ தேவையற்ற மனக்கவலை உண்டாகும்.
வடகிழக்கு திசையில் பல்லி சத்தமிட்டால் என்ன பலன் தெரியுமா?
பல்லியானது வடகிழக்கு திசையிலிருந்து சத்தமிட்டால் பண இழப்பு ஏற்பட வாய்ப்புண்டு. தொழில் செய்யும் இடத்தில் இடையூறு ஏற்பட வாய்ப்புண்டு. வெளியூர் பயணங்களால் சிக்கல் ஏற்பட வாய்ப்புண்டு. விபத்து ஏற்பட வாய்ப்புண்டு. எனவே, முன்னெச்சரிக்கையாக இருப்பது நல்லது.
வடமேற்கு திசையில் பல்லி சத்தமிட்டால் என்ன பலன் தெரியுமா?
வடமேற்கு திசையில் இருந்து பல்லி சத்தமிட்டால் இறையருள் கிடைக்கும். பணவரவு அதிகரிக்கும். உறவினர் வருகையால் நற்செய்தி உண்டாகும். வீட்டில் மகிழ்ச்சி பெருகும்.
தென்கிழக்கு திசையில் பல்லி சத்தமிட்டால் என்ன பலன் தெரியுமா?
தென்கிழக்கு திசையில் பல்லி சத்தமிட்டால் புதியதாக வீட்டிற்கு வரும் பெண்களால் குடும்பத் தகராறு உண்டாகும். குடும்பத்தில் பிரச்சனை உண்டாகும். பெண்களுக்கு உடல்நலபாதிப்பு உண்டாகும்.
தென்மேற்கு திசையில் பல்லி சத்தமிட்டால் என்ன பலன் தெரியுமா?
தென்மேற்கு திசையில் பல்லி சத்தமிட்டால் வீட்டிற்கு உறவினர் வருவார்கள். அவர்களால், குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும்.
தெற்கு திசையில் பல்லி சத்தமிட்டால் என்ன பலன் தெரியுமா?
தெற்கு திசையில் பல்லி சத்தமிட்டால் வீட்டில் சுப நிகழ்ச்சி குறித்த பேச்சு தொடங்கும். சுப நிகழ்ச்சிகள் உண்டாகும். நன்மை தரக்கூடிய விஷயம் நடக்கும்.
தெற்கு மற்றும் வடக்கில் இரண்டு பல்லிகள் சத்தமிட்டால் என்ன பலன் தெரியுமா?
தெற்கு மற்றும் வடக்கில் இரண்டு பல்லிகள் சத்தமிட்டால் தொழிலில் நஷ்டம் உண்டாகும். வீட்டில் உள்ள ஆண்களுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட வாய்ப்புண்டு. பணவிரயம் ஆகும்.
செவ்வாய், வெள்ளி, பௌர்ணமி, அமாவாசை நாளில் பல்லி சத்தமிட்டால் என்ன பலன் தெரியுமா?
செவ்வாய், வெள்ளி, பௌர்ணமி, அமாவாசை நாளில் பல்லி சத்தமிட்டால் நன்மை உண்டாகும். பல்லி சத்தம் இட்ட இடத்திற்குச் சென்று, இஷ்ட தெய்வத்தை மனதில் நினைத்து மலர்களைத் தூவி வணங்கினால் நாம் நினைத்த காரியம் அனைத்தும் நடக்கும். வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும். எடுத்த காரியம் கைகூடும்.
வீட்டின் தரையில் இருந்து பல்லி சத்தமிட்டால் என்ன பலன் தெரியுமா?
வீட்டின் தரையில் இருந்து பல்லி சத்தமிட்டால் வீட்டில் ஐஸ்வர்யம் பெருகும். காரியசித்தி உண்டாகும். தொழிலில் லாபம் பெருகும்.
வீட்டின் மேற்கூரையில் இருந்து பல்லி சத்தமிட்டால் என்ன பலன் தெரியுமா?
வீட்டின் மேற்கூரையில் இருந்து பல்லி சத்தமிட்டால் பயணம் மேற்கொள்ள வாய்ப்புண்டு. காரியத்தடை உண்டாகும். தொழிலில் லாபம் பெருகும்.
பல்லி சொல்லும் பலன் அட்டவணை…
கிழக்கு திசை | |
ஞாயிற்றுக்கிழமை | பயம் |
திங்கள்கிழமை | தன லாபம் |
செவ்வாய்கிழமை | சம்பத்து |
புதன்கிழமை | சந்தோஷம் |
வியாழன்கிழமை | கெட்ட சகுனம் |
வெள்ளிக்கிழமை | சுப செய்தி |
சனிக்கிழமை | நற்செய்தி |
தென் கிழக்கு திசை | |
ஞாயிற்றுக்கிழமை | தீமை |
திங்கள்கிழமை | கலகம் |
செவ்வாய்கிழமை | லாபம் |
புதன்கிழமை | தனலாபம் |
வியாழன்கிழமை | புகழ் |
வெள்ளிக்கிழமை | லட்சுமி கடாட்சம் |
சனிக்கிழமை | பொருட்கள் |
தெற்கு திசை | |
ஞாயிற்றுக்கிழமை | சுகம் |
திங்கள்கிழமை | பகை |
செவ்வாய்கிழமை | விசனம் |
புதன்கிழமை | துன்பம் |
வியாழன்கிழமை | தனலாபம் |
வெள்ளிக்கிழமை | வரவு |
சனிக்கிழமை | பதவி உயர்வு |
தென்மேற்கு திசை | |
ஞாயிற்றுக்கிழமை | வரவு |
திங்கள்கிழமை | விரோதம் |
செவ்வாய்கிழமை | எதிரிகள் |
புதன்கிழமை | கஷ்டம் |
வியாழன்கிழமை | காரியச்சித்தி |
வெள்ளிக்கிழமை | பணவரவு |
சனிக்கிழமை | ரோகம் |
மேற்கு திசை | |
ஞாயிற்றுக்கிழமை | சண்டை |
திங்கள்கிழமை | ராஜ தரிசனம் |
செவ்வாய்கிழமை | அனுகூலம் |
புதன்கிழமை | பயணம் |
வியாழன்கிழமை | நஷ்டம் |
வெள்ளிக்கிழமை | சந்தோஷம் |
சனிக்கிழமை | ரோகம் |
வடமேற்கு திசை | |
ஞாயிற்றுக்கிழமை | வஸ்திரம் |
திங்கள்கிழமை | கெட்ட சகுனம் |
செவ்வாய்கிழமை | பயணம் |
புதன்கிழமை | பொருட்கள் பழுது |
வியாழன்கிழமை | நற்செய்தி |
வெள்ளிக்கிழமை | கலகம் |
சனிக்கிழமை | ஸ்திரி |
வடக்கு திசை | |
ஞாயிற்றுக்கிழமை | திரவியம் |
திங்கள்கிழமை | வஸ்திரம் |
செவ்வாய்கிழமை | சத்ரு பயம் |
புதன்கிழமை | கலகம் |
வியாழன்கிழமை | காரியச்சித்தி |
வெள்ளிக்கிழமை | கலகம் |
சனிக்கிழமை | பணவரவு |
வடகிழக்கு திசை | |
ஞாயிற்றுக்கிழமை | லாபம் |
திங்கள்கிழமை | கல்யாணம் |
செவ்வாய்கிழமை | வாகனம் |
புதன்கிழமை | தோல்வி |
வியாழன்கிழமை | போஜனம் |
வெள்ளிக்கிழமை | சத்ரு பயம் |
சனிக்கிழமை | திருடர் பயம் |
பல்லி சொல்லும் பலன் உண்மையா?
பல்லி சொல்லக்கூடிய பலன் உண்மையாகும். பண்டையகாலத்தில் கௌளி சாஸ்திரம் என்ற நூலே இருந்துள்ளது. அந்த புத்தகத்தில் பல்லி சொல்லும் பலன்கள் அனைத்தும் கொடுக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, அது மக்கள் வாழ்வியலில் நடக்கக்கூடிய நன்மை, தீமைகளை முன்கூட்டியே கூறுவதாக அமைந்துள்ளது.
இரவில் பல்லி சொல்லும் பலன் என்ன தெரியுமா?
செவ்வாய், வெள்ளி, பௌர்ணமி, அமாவாசை நாட்களின் இரவில் பல்லி கத்தினால், நமக்கு வெற்றி உணடாகும் என்ற அர்த்தமாகும். மற்ற நாட்களில் பல்லி கத்தினால் நமக்கு மிகுந்த கவனம் தேவை. எந்தவொரு செயலையும் பன்முறை யோசித்து செய்ய வேண்டும்.
கோவிலில் பல்லி சொல்லும் பலன் என்ன தெரியுமா?
கோவிலில் இறைவனை வணங்கும்போது பல்லிகள் சத்தமிட்டால் நமது வேண்டுதல் நிறைவேறும் என்று நம்பிக்கை உண்டு. கடவுளின் செய்தியாளன், கடவுளின் தூதுவனான பல்லியின் மூலம் கடவுள் நம்மிடம் பேச விரும்புவார். நமது வேண்டுதல் நிறைவேறும் என்றும், நாம் தொடங்விருக்கும் செயல் வெற்றி அடையும் என்றும் பல்லிகள் கோவிலில் பலன் சொல்லும்.
பூஜை அறையில் பல்லி சொல்லும் பலன் என்ன தெரியுமா?
வீட்டின் பூஜை அறையில் பல்லி இருந்தால் நம் வீட்டில் செல்வம் செழிப்பு அதிகமாகும். பணவரவு அதிகரிக்கும். தொழிலில் லாபமானது பெருகும்.
தலைக்கு மேல் பல்லி சொல்லும் பலன் என்ன தெரியுமா?
மிகவும் சந்தோஷமான தருணம் ஏற்பட போகிறது என்று அர்த்தம் ஆகும்.
பல்லி வீட்டில் இறந்தால் பலன் என்ன தெரியுமா?
இறந்த பல்லியைப் பார்ப்பது நல்லதல்ல. அப்படி பார்க்க நேர்ந்தால் குலதெய்வத்தை வழிபடுதல் வேண்டும். பிரசாதம் வழங்குதல் போன்ற பரிகார நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இறந்த பல்லியைப் பார்க்க மற்றவர்களை ஒருபோதும் அழைக்க கூடாது. இறந்த பல்லியை உடனடியாக அகற்ற வேண்டும்.
வீட்டில் பல்லி கத்தினால் என்ன பலன் என்ன தெரியுமா?
நமக்கு நடவிருக்கும் நன்மை, தீமைகளை உணர்த்தும் அறிகுறியாகும். வீட்டில் பல்லி கத்துவது என்பது கடவுள் நம்மிடம் உரையாட விரும்புகிறார் என்ற அர்த்தமாகும்.