முதுகு வலி பிரச்சனை வராமல் இருக்க இதை செய்யுங்கள் போதும்-Back pain
நாம் நேராக நிற்பதற்கும், ஓடி ஆடி வேலை செய்வதற்கும், குனிந்து நிமிர்வதற்கு உறுதுணையாகவும், உதவியாகவும் இருப்பது முதுகு எலும்பு. அதிகப்படியான வேலை, முதுகு எலும்பு தேய்மானம் ஆகியவற்றால் முதுகு வலி ஏற்படுகிறது. முதுகு வலியைப் போக்கக்கூடிய மிக எளிமையான வழிகளைக் காண்போம்.
நடு மற்றும் மேல் முதுகு வலி குணமாக
நடு மற்றும் மேல் முதுகு வலி குணமாக நாம் செய்ய வேண்டியவைக் குறித்து காணலாம்.
உடற்பயிற்சி
முதுகுத்தசைகளை வலிமைப்படுத்தக்கூடிய மிக எளிமையான உடற்பயிற்சியைச் செய்ய வேண்டும்.
பயணம்
முதுகு வலி உள்ளவர்கள் பேருந்தில் பயணம் செய்யும் போது, கடைசி இருக்கையில் அமர்வதைத் தடுக்க வேண்டும். நடுவிலுள்ள இருக்கையில் அமர வேண்டும்.
நான்கு சக்கர வாகனத்தை ஓட்டும்போது, நேராக நிமிர்ந்து உட்கார்ந்து ஓட்ட வேண்டும்.
இருசக்கர வாகனங்களில் கரடு, முரடான பாதையில் செல்வதைத் தவிர்க்க வேண்டும்.
உறங்கும் முறை
முதுகு வலி உள்ளவர்கள் கயிற்று கட்டிலில் உறங்குவதைத் தவிர்க்க வேண்டும். சரியான மெத்தையில் ஒருபுறமாக ஒருகளித்து உறங்க வேண்டும்.
எடை
அதிக எடையுள்ள பொருட்களைத் தூக்கக் கூடாது. முதுகை அதிகமாக வளைப்பதைத் தவிர்க்க வேண்டும்.
தரையைக் குனிந்து துடைப்பதற்கு பதிலாக, நீளமான குச்சியைக் கொண்டு நின்று கொண்டு தரையைச் சுத்தம் செய்ய வேண்டும்.
உட்காரும் முறை வேலை செய்யும் போது முதுகை நேராக வைத்து உட்கார வேண்டும். நாற்காலியில் அமரும் போது முதுகுக்குத் தலையணை வைத்து உட்காருவது
இதையும் படிக்கலாமே –
நீர் சுருக்கு பிரச்சனை இனி வரவே வராது- Neer surukku home remedies