ஆறு மாத குழந்தைக்கு உடல் எடை அதிகரிக்கச் சாப்பிட வேண்டிய சத்து மாவு -Cerelac for 6 months baby
குழந்தைகளுக்கு ஆறு மாதம் வரை தாய்ப்பால் மட்டுமே கொடுக்க வேண்டும். அதன் பின்னர் திட உணவுகளைக் குழந்தைகளுக்குக் கொடுக்க வேண்டும். சத்து நிறைந்த எளிதில் செரிமானம் அடையகூடிய உணவுகளை குழந்தைகளுக்குக் கொடுக்க வேண்டும். திட உணவைக் கொடுக்க ஆரம்பித்தாலும், அத்துடன் இணை உணவாகத் தாய்ப்பாலையும் கொடுக்க வேண்டும்.
சத்து உணவு செய்யும் முறை…
ஒரு பாத்திரத்தில் ஒரு டம்ளர் அரிசியைக் கொட்டிக் கொள்ள வேண்டும்.
அதனை நன்றாக கழுவி, பின்னர் உலர வைக்க வேண்டும்.
`பிறகு, அரிசியை வறுக்க வேண்டும்.
பின்னர், அரிசியை ஆற வைத்து, மிக்சியில் போட்டுக்கொள்ள வேண்டும்.
அத்துடன் பொட்டுகடலை, சீரகம் போட்டு நன்றாக அரைத்து கொள்ள வேண்டும். பின்னர், இதனை சல்லடையால் சலித்து ஒரு பாத்திரத்தில் கொட்டி வைத்துக்கொள்ள வேண்டும்.
தேவையான நேரத்தில் ஒரு தேக்கரண்டி இந்த மாவை எடுத்துக்கொண்டு, தண்ணீரில் போட்டு கிளறி சாப்பிடும் பதம் வந்தவுடன் இறக்கிக்கொள்ள வேண்டும்.
இது குழந்தைக்கு மிகவும் சத்தான உணவாகும். இதன் மூலம் குழந்தைகள் எடை அதிகரிப்பு மற்றும் ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.
இதையும் படிக்கலாமே –
குழந்தையின் விக்கல் வரக் காரணம் என்ன? Reason for baby hiccups…
Pingback: குழந்தை சாப்பிட வேண்டிய காய்கறிகள்-Vegetables for babies