குழந்தை சாப்பிட வேண்டிய காய்கறிகள்-Vegetables for babies
Vegetables for babies- ஏழு மாத குழந்தைக்கு என்னென்னக் காய்கறிகளைக் கொடுக்க வேண்டும் என குழம்பும் தாய்மார்களே! குழந்தைகளுக்கு ஆறு மாதம் வரை தாய்ப்பால் மட்டுமே கொடுக்க வேண்டும். அதன் பின்னர் திட உணவுகளைக் குழந்தைகளுக்குக் கொடுக்க வேண்டும். சத்து நிறைந்த எளிதில் செரிமானம் அடையகூடிய உணவுகளை குழந்தைகளுக்குக் கொடுக்க வேண்டும். திட உணவைக் கொடுக்க ஆரம்பித்தாலும், அத்துடன் இணை உணவாகத் தாய்ப்பாலையும் கொடுக்க வேண்டும். குழந்தைகள் சாப்பிட வேண்டிய காய்கறிகளைப் பற்றி காணலாம்.
குழந்தைகளுக்கு காய்கறிகளைக் கொடுக்கும் முறை
ஏழு மாத குழந்தைக்கு காய்கறியை நன்றாக வேக வைத்து, மசித்து கொடுக்க வேண்டும். காய்கறிகளை அவசியம் குழந்தைகளுக்குப் பழக்கப்படுத்த வேண்டும். காய்கறிகளைப் பழக்கப்படுத்தவில்லை என்றால், பின்னாளில் அவர்கள் காய்கறியை வேண்டாம் என்று ஓதுக்குவார்கள். குழந்தைக்குச் சரியான ஊட்டச்சத்து காய்கறிகளில் தான் உள்ளது.
உருளைக்கிழங்கு
உருளைக்கிழங்கை சிறு சிறு துண்டாக நறுக்கிக்கொள்ளவும். பின்னர், நன்றாக கழுவி கொள்ளவும். அதனை, வேக வைத்து தோல் நீக்கிக்கொள்ளவும். பிறகு நன்றாக மசித்து குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டும். உருளைக்கிழங்கைக் குழந்தைக்குக் கொடுப்பதன் மூலம் குழந்தையின் உடல் எடை அதிகரிக்கும்.
கேரட்
கேரட்டை தோல் சீவிக்கொள்ளவும். பின்னர், சிறு சிறு துண்டாக நறுக்கிக்கொள்ளவும். பிறகு கேரட்டை நன்றாக வேக வைத்துக்கொள்ளவும். பின்னர், மசித்து குழந்தைகளுக்கு கொடுக்கலாம். கேரட்டைக் குழந்தைக்குக் கொடுப்பதன் மூலம் குழந்தையின் அறிவுத்திறன் பெருகும். கேரட் சாப்பிடுவதால் கண்கள், பற்கள், தோல், இதயம், சிறுநீரகம் மற்றும் கல்லீரல் ஆகியவற்றிற்கு பல ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கிறது.
பீட்ரூட்
பீட்ரூட்டை தோல் சீவிக்கொள்ளவும். பின்னர், சிறிய துண்டாக நறுக்கிக்கொள்ளவும். பின்னர், வேக வைத்து குழந்தைக்கு கொடுக்கலாம். பீட்ரூட்டைக் குழந்தைக்குக் கொடுப்பதன் மூலம் உடலில் உள்ள நச்சுகள் வெளியேறும். புதிய இரத்த உற்பத்தியாக உறுதுணையாக இருக்கும்.
ப்ரோக்கோலி
ப்ரோக்கோலி உள்ள தாதுக்கள் இதயம், தசைகள், கண்கள் மற்றும் நோயெதிர்ப்பு அமைப்புக்கு நல்லது. ப்ரோக்கோலியை வேகவைத்து கொடுக்கலாம். உடல் ஆரோக்கியத்தை அதிகரிக்க ப்ரோக்கோலியை உணவில் சேர்க்கவும்.
இனிப்பு உருளைக்கிழங்கு
இனிப்பு உருளைக்கிழங்கைக் குழந்தைகள் அதன் இனிப்பு தன்மைக்காக அதிகம் விரும்புவார்கள். இதில் வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்துள்ளன. இனிப்பு உருளைக்கிழங்கில் உள்ள வைட்டமின் டி குழந்தைகளின் எலும்புகள் மற்றும் பற்களின் வளர்ச்சிக்கு உதவுகிறது. இனிப்பு உருளைக்கிழங்கு சளி மற்றும் காய்ச்சல் போன்ற பொதுவான தொற்றுநோய்களுக்கு எதிராக நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.
இதையும் படிக்கலாமே-
ஆறு மாத குழந்தைக்கு உடல் எடை அதிகரிக்கச் சாப்பிட வேண்டிய சத்து மாவு -Cerelac for 6 months baby
Pingback: ஏழு மாத குழந்தை சாப்பிட வேண்டிய பழங்கள்-Fruits for babies