ஏழு மாத குழந்தை சாப்பிட வேண்டிய பழங்கள்-Fruits for babies
குழந்தைகளுக்கு ஆறு மாதம் வரை தாய்ப்பால் மட்டுமே கொடுக்க வேண்டும். அதன் பின்னர் திட உணவுகளைக் குழந்தைகளுக்குக் கொடுக்க வேண்டும். சத்து நிறைந்த எளிதில் செரிமானம் அடையகூடிய உணவுகளை குழந்தைகளுக்குக் கொடுக்க வேண்டும். திட உணவைக் கொடுக்க ஆரம்பித்தாலும், அத்துடன் இணை உணவாகத் தாய்ப்பாலையும் கொடுக்க வேண்டும். குழந்தைகள் சாப்பிட வேண்டிய பழத்தைப் பற்றி காணலாம்.
பழத்தைக் கொடுக்கும் முறை
ஏழு மாத குழந்தைக்கு பழத்தை நறுக்கியோ, பழச்சாறாகவோ கொடுக்கக்கூடாது. பழத்தை வேக வைத்து கூழாக்கி கொடுக்க வேண்டும். பழத்தைக் கூழாக்கிக்கொடுக்கும் போது அதில் சர்க்கரை சேர்க்கக்கூடாது. பழத்தில் உள்ள சர்க்கரையே போதுமானது ஆகும்.
கிவி பழம்
கிவி பழத்தை வேக வைத்து தோல் நீக்கி, மசித்து குழந்தைகளுக்கு கொடுக்கலாம். குழந்தைகளுக்குக் கிவி பழத்தைக் கொடுத்து வந்தால், குழந்தையின் மூளை வளர்ச்சி நன்றாக இருக்கும். குழந்தைகளுக்கு வரக்கூடிய சளி, மூச்சுத்திணறல் போன்றவற்றைக் கிவி பழம் குணப்படுத்தும். கிவி பழத்தில் ஒமேகா 3, போலேட், கொழுப்பு அமிலம் ஆகிய சத்துகள் நிறைந்துள்ளது.
ஸ்டாபெரி பழம்
ஸ்டாபெரி பழத்தை வேக வைத்து தோல் நீக்கி, மசித்து குழந்தைகளுக்கு கொடுக்கலாம். ஸ்டாபெரி பழத்தில் வைட்டமின் சி, போலிக் அமிலம், பாஸ்பரஸ், கால்சியம், இரும்பு முதலிய எண்ணற்ற சத்துகள் உள்ளது. குழந்தைகளுக்கு கிவி பழத்தைக் கொடுத்து வந்தால்,
ஆப்பிள்
ஆப்பிளை நன்றாக வேக வைத்து தோல் நீக்கி, மசித்து குழந்தைகளுக்கு கொடுக்கலாம். ஆப்பிள் சாப்பிடுவதன் மூலம் குழந்தையின் உடல் எடை அதிகரிக்கும். ஆப்பிள் பழத்தில் இரும்பு, புரோட்டீன், கொழுப்பு, பாஸ்பேட், சர்க்கரை, பொட்டாசியம், சோடியம், பெக்டின், உயிர்ச் சத்துக்கள் பி1, பி2, சி, முதலியன அடங்கியுள்ளன.
வாழைப்பழம்
வாழைப்பழத்தை நன்றாக மசித்து குழந்தைகளுக்கு கொடுக்கலாம். வாழைப்பழத்தைக் குழந்தைகளுக்குக் கொடுத்து வந்தால் குழந்தையின் உடல் எடை அதிகரிக்கும். வாழைப்பழத்தில் வைட்டமின் ஏ, பி2, சுண்ணாம்புச்சத்து உள்ளது.