12 ராசி அதிபதிகள் – 12 Rasi Athipathigal in Tamil
12 ராசிகளில் ஒவ்வொருவருக்கும் அதிபதிகள் உள்ளனர். இந்த இறைவன் ஒவ்வொருவரும் ஒருவருக்கொருவர் நட்பு, விரோதம் அல்லது நடுநிலையானவர்கள். (12 ராசி அதிபதிகள் – 12 Rasi Athipathigal in Tamil) அதன்படி, சூரியன், வெள்ளி, புதன், சந்திரன், சனி, வியாழன் மற்றும் செவ்வாய் ஆகிய கிரகங்கள். ஒரு கிரகமானது அதன் சொந்த வீட்டில் (ஆட்சி வீடு) இருந்தால், அந்த கிரகத்துக்கு சக்தி மூன்று மடங்காக இருக்கும். அதேபோல், ஒருசில கிரகங்களுக்கு வீடுகள் நீச வீடாகவும், உச்ச வீடாகவும் இருக்கும். அதாவது, உச்ச வீட்டில் இருக்கும்போது அந்த கிரகம் ஐந்து மடங்கு சக்தியுடன் உச்ச பலமாக இருக்கும். அதுவே, நீச வீட்டில் இருக்கும்போது கிரகம் பலம் இழந்து காணப்படும். சரி வாங்க, 12 ராசிகளுக்கு உண்டான ராசி அதிபதிகள் பற்றி பார்க்கலாம்.
12 ராசி அதிபதிகள்
மேஷம் ராசி அதிபதி
மேஷம் ராசி அதிபதி -செவ்வாய்
ரிஷபம் ராசி அதிபதி
ரிஷபம் ராசி அதிபதி – சுக்கிரன்
மிதுனம் ராசி அதிபதி
மிதுனம் ராசி அதிபதி – புதன்
கடகம் ராசி அதிபதி
கடகம் ராசி அதிபதி – சந்திரன்
சிம்மம் ராசி அதிபதி
சிம்மம் ராசி அதிபதி – சூரியன்
கன்னி ராசி அதிபதி
கன்னி ராசி அதிபதி – புதன்
துலாம் ராசி அதிபதி
துலாம் ராசி அதிபதி – சுக்கிரன்
விருச்சிகம் ராசி அதிபதி
விருச்சிகம் ராசி அதிபதி – செவ்வாய்
தனுசு ராசி அதிபதி
தனுசு ராசி அதிபதி – குரு
மகரம் ராசி அதிபதி
மகரம் ராசி அதிபதி – சனி
கும்பம் ராசி அதிபதி
கும்பம் ராசி அதிபதி – சனி
மீனம் ராசி அதிபதி
மீனம் ராசி அதிபதி – குரு
ராசி அதிபதியின் நிலை மற்றும் அதற்கு உரிய தெய்வங்கள்
சூரியன்- இவர் உடல், திறமை, தொழில், எண்ணம் மற்றும் ஆற்றலுக்குக் காரணகாரகன் ஆவார். இவருக்கு உரிய தெய்வம் சிவன் மற்றும் சூரியன்.
சந்திரன்- இவர் சமயோஜிதபுத்தி, கற்பனாசக்தி, உடல், எண்ணம் மற்றும் மனோகாரகன் ஆவார். இவருக்கு உரிய தெய்வம் அம்பிகை.
செவ்வாய்- இவர் சுறுசுறுப்பு, ஆற்றல் மற்றும் திறமைகளுக்குக் காரணகாரகன் ஆவார். இவருக்கு உரிய தெய்வம் முருகப்பெருமான்.
புதன்- இவர் கலைகள், கற்பனாசக்தி மற்றும் புத்திகாரகன் ஆவார். இவருக்குரிய தெய்வம் மகாவிஷ்ணு.
குரு – இவர் கலைகள், ஆற்றல் மற்றும் புத்திகாரகன் ஆவார். இவருக்கு உரிய தெய்வம் தட்சிணாமூர்த்தி.
சுக்கிரன்- இவர் ஞானம், செல்வம், திறமை மற்றும் சுகபோககாரகன் ஆவார். இவருக்கு உரிய தெய்வம் மகாலட்சுமி.
சனி – இவர் நேர்மை மற்றும் மந்தகாரகன் ஆவார். இவருக்குரிய தெய்வம் விநாயகர்.
நாமும் நம் ராசிக்கான அதிபதிக்குரிய தெய்வத்தை வழிபட்டு வந்தால் நம் வாழ்க்கையில் ஏற்படும் துன்பத்தை குறைத்து அருள் புரிவார்.
இதையும் படிக்கலாமே
12 ராசிக்கான அதிர்ஷ்ட கல் – எந்த ராசிக்காரர்கள் எந்த ராசிக்கல் அணிய வேண்டும்? – Rasi kal in Tamil