எலும்பை வலிமை அடைய செய்யும் ஆற்றலை உடையது முருங்கைக்கீரை – Murungai Keerai Benefits
Murungai Keerai Benefits – கீரைகள் உடல் பலத்தை அதிகரிக்கச் செய்யக் கூடியது. கீரையை அதிகளவு சாப்பிட்டு வந்தால் நோயானது நம்மை அண்டாது. மிக எளிமையாக நம் வீட்டிலேயே வளரக்கூடிய கீரைகளுள் ஒன்றுதான் முருங்கை. முருங்கை கீரை, முருங்கை பூ, முருங்கைக்காய், முருங்கை பட்டை என அனைத்துமே மருத்துவ குணம் கொண்டது. ஒரு முருங்கை கிளையை நட்டு வைத்தால் போதும், பல வருடம் அதன் பயனை நாம் பெறலாம்.
முருங்கை கீரையில் இரும்பு, புரதம், தாமிரம், கொழுப்பு, தாதுக்கள், கால்சியம், பாஸ்பரஸ், வைட்டமின் சி, வைட்டமின் பி , சுண்ணாம்புச் சத்து ஆகிய சத்துகள் நிறைந்து காணப்படுகிறது.
முருங்கை கீரையின் பயன்கள்…
- இதயம் சார்ந்த பிரச்சனைகள் குணமாகும்.
- கண்புரை பிரச்சனைகள் குணமாகும்.
- காசநோயனாது குணமாகும்.
- முதுகு வலியானது குணமாகும்.
- உயர் இரத்த அழுத்தமானது குறையும்.
- காய்ச்சல் குணமாகும்.
- மூட்டு வலியானது குணமாகும்.
- உடல் ஆரோக்கியமாக இருக்கும்.
- தோல் சார்ந்த நோய்கள் குணமாகும்.
- எலும்புகள் வலிமை அடையும்.
- கர்ப்ப பை வலிமை அடையும்.
- தாய்ப்பால் நன்றாக சுரக்கும்.
- முகப்பருக்கள் குணமாகும்.
- உடல் உஷ்ணம் குறையும்.
- வாயு பிடிப்பு குணமாகும்.
- முடி உதிர்வு குறையும்.
- இள நரை பிரச்சனை சரியாகும்.
- முடி கரு கரு என அடர்த்தியாக வளரும்.
முருங்கைக்கீரையின் நன்மைகள்…
கர்ப்பிணி பெண்கள் முருங்கை கீரை உண்பதன் மூலம், வயிற்றில் உள்ள குழந்தை ஆரோக்கியமாக இருக்கும். மேலும், சுகப்பிரசவம் நடப்பதற்கான வாய்ப்பும் உண்டு.
முருங்கை கீரையை அதிகளவு சாப்பிட்டு வந்தால், முடி உதிர்வு, இள நரை ஆகிய பிரச்சனைகள் தீர்ந்து முடி கரு கரு என்று அடர்த்தியாக வளரும்.
முருங்கைக்கீரை சூப்பை குடித்து வந்தால், காய்ச்சல், கை, கால் வலி , மூட்டு வலி, ஆஸ்துமா, மார்புச்சளி, தலைவலி ஆகிய பிரச்சனைகள் தீரும்.உடலானது ஆரோக்கியமாகவும், சுறுசுறுப்பாகவும் இருக்கும்.
ஒரு கையளவு முருங்கை இணுக்குடன், மிளகு, சீரகம், சோம்பு, உப்பு, தண்ணீர் சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும். அந்த சூப் கொதித்தவுடன் வடிகட்டி பருகினால் உடல் ஆரோக்கியமாக இருக்கும்.
முருங்கைக்கீரை சூப் வயிறு தொடர்பான செரிமான பிரச்சனை, மலச்சிக்கல், வயிற்றுவலி, வயிற்று புண் ஆகியவற்றை குணப்படுத்துகிறது.
முருங்கைக் காயுடன் சிறிதளவு ஓமம், பெருங்காயம்,மிளகு, தண்ணீர், உப்பு சேர்த்து கொதிக்க விடவும். நன்கு கொதித்தவுடன் அதனை வடிகட்டி மிதமான சூட்டோடு குடித்தால் வயிறு சார்ந்த பிரச்சனை தீரும்.
ஒரு கைப்பிடியளவு முருங்கை இலையை எடுத்துகொள்ளவும். அதனை நெய்யில் வதக்கி சாப்பிட்டால் இரத்த சோகை பிரச்சனை வாராது. மேலும், உடலானது அழகு பெறும். உடலில் பலம் பெருகும். பல்லானது உறுதி தன்மை அடையும். தோல் சார்ந்த நோய்கள் சரியாகும்.
ஒரு கைப்பிடியளவு முருங்கை கீரையைப் பறித்து அதனை சுத்தம் செய்து அரைத்து கொள்ளவும். அதனை, வடிகட்டிவிட்டு அந்த சாறை பருகி வந்தால் எலும்புகள் வலிமை அடையும். கர்ப்ப பை வலிமை அடையும். தாய்ப்பால் அதிகளவு கிடைக்கும்.
முருங்கை சாறுடன் எலுமிச்சை சாறு கலந்து முகத்தில் தடவினால் முகப்பருக்கள் மறையும்.
முருங்கை கீரை அதிகளவு சாப்பிட்டு வந்தால் உடல் உஷ்ணம் குறையும்.
முருங்கை எண்ணெயானது வாயுப் பிடிப்பு மற்றும் மூட்டு வலியைக் குணப்படுத்துகிறது.
முருங்கைக்காய் அதிகளவு உண்டால் இதயம் வலிமை அடையும். இதயம் சார்ந்த பிரச்சனைகள் நீங்கும்.
முருங்கை வேர் சாறானது காசநோய் மற்றும் முதுகுவலியை குணமாக்கும்.
முருங்கை இலையை விழுதாக அரைத்து சிறிய உருண்டையாக்கி சாப்பிட்டு வந்தால் உயர் இரத்த அழுத்தமானது குறையும்.
முருங்கை இலையைப் பறித்து, அதனை நன்றாக சுத்தம் செய்து விட்டு, அதனை அரைக்கவும். பின்பு அதனை வடிகட்டி, அந்த சாறுடன் தேன் கலந்து சாப்பிட்டால் கண்புரை பிரச்சனை சரியாகும்.
முருங்கை கீரையின் மருத்துவ குணத்தைப் பற்றி அறிந்து, அதனை சரியான முறையில் பயன்படுத்தினால் நிச்சயம் நன்மை பயக்கும்.
Murungai Keerai Soup Benefits in Tamil
தினமும் முருங்கைக்கீரை சூப்பை குடித்து வருவதால் உடலில் ரத்தசோகை ஏற்படாது. இதனால் உடலில் ரத்த சோகை ஏற்படாமல் இருக்க தினமும் முருங்கைக்கீரை சூப் குடித்து வரலாம்.
முருங்கை இலை சூப் ரத்தத்தை சுத்தம் செய்வதுடன், எலும்புகளையும் வலுப்படுத்தும். கர்ப்பப் பையை வலுப்படுத்தும். தாய்ப்பால் சுரப்பதை அதிகப்படுத்தும் . முருங்கை இலைச்சாற்றுடன் எலுமிச்சை சாறு கலந்து தடவ முகப்பருக்கள் மறையும்.
ஆஸ்துமா, மார்சளி, சைனஸ் போன்ற சுவாசக் கோளாறுகளுக்கு முருங்கை இலை ரசம் அல்லது சூப் மிகவும் நல்ல பலன் தரும். மஞ்சள் காமாலையை குணப்படுத்தும். தலைவலி, இடுப்பு வலி ,வாத மூட்டு வலி, உடல் வலி, பித்தம், கை கால் அசதி யாவும் நீங்கும்.
இவை வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வாக உள்ளன. மேலும் இதில் நோய் எதிர்ப்பு சக்தி மிகுந்து காணப்படுவதால், சாதாரண தலைவலி, இருமல் ஏற்படும் போது முருங்கைக்கீரையில் செய்த சூப் சாப்பிட்டால் அவை பறந்து போகும்.
முருங்கைக் கீரை இரும்புச் சத்து, வைட்டமின், மினரல்களை உள்ளடக்கியது. இளம் முருங்கை இலைகளை சிறிதளவு எடுத்து, அதோடு சிறிதளவு நெய் ஊற்றி தாளித்து சமைத்து, சாம்பார் அல்லது ரசத்துடன் சேர்த்து சாப்பிட்டால் நெய்யோடு முருங்கை இலை சேர்ந்து உடலுக்கு நல்ல வலு தரும். உடலில் வலி ஏற்படும் போதும், உடல் நிலை சரியில்லை என நீங்கள் நினைக்கும் போதும் முருங்கைக்கீரையில் செய்த சூப்பை குடிக்கலாம்
முருங்கை பிசின் பயன்கள்
நாம் உடற்பயிற்சி கூடங்களுக்குச் சென்று உடலைத் தேற்றக்கூடிய ஒரு சூழல் உண்டு. இது எதுவுமே செய்யத்தேவையில்லை அதிகாலை ஒருமணிநேரம் நடைப்பயிற்சி செய்து இந்த முருங்கை பிசினை ஊறவைத்து அப்படியே சாப்பிட்டுவிட்டு, பழ உணவை காலை உணவாக சாப்பிட்டு வந்தீர்கள் என்றால் ஒரு அற்புதமான உடற்கட்டு, உடற்வாகு கிடைக்கும்.
முருங்கை பிசினை இடித்து தூள் செய்து பாலில் கலந்து சிறிது கற்கண்டு சேர்த்து சாப்பிட்டு வர ஆண்மை அதிகரிக்கும். முகம் பொலிவு பெரும்.
பச்சைப் பிசினை காதில் ஒரு சொட்டு விட்டால் போதும், காது வலி உடனே நின்று விடும். இந்த மரத்தின் வேர் மற்றும் பிசின் சம்பந்தப்பட்ட டானிக்குகளை அல்லது லேகியங்களை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் நரை சீக்கிரம் வராமல் தள்ளிப்போகும். மேலும் இந்தப் பூவுக்கு தாது விருத்தி செய்யும் குணம் உண்டு.
முருங்கை கீரை பொரியல்
தேவையான பொருட்கள்
- 1 தேக்கரண்டி கடலை எண்ணெய்
- 1 தேக்கரண்டி கடுகு விதைகள்
- 1 தேக்கரண்டி உளுத்தம் பருப்பு
- 2 காய்ந்த சிவப்பு மிளகாய்
- 2 நடுத்தர வெங்காயம், நறுக்கியது
- 2 கப் முருங்கை இலைகள் (முருங்கை இலைகள்)
- 1/2 தேக்கரண்டி உப்பு
- 2 குவியல் தேக்கரண்டி துருவிய தேங்காய்
முருங்கை கீரை பொரியல்
ஒரு கடாயில் ஒரு தேக்கரண்டி எண்ணெயை சூடாக்கி, எண்ணெய் காய்ந்ததும், கடுகு, காய்ந்த மிளகாய் மற்றும் உளுத்தம்பருப்பு சேர்க்கவும். அது துளிர்விட்டு, பருப்பு பொன்னிறமாக மாறும் வரை காத்திருக்கவும்.பொடியாக நறுக்கிய வெங்காயம் மற்றும் உப்பு சேர்க்கவும். வெங்காயம் மென்மையாகவும் சிறிது பழுப்பு நிறமாகவும் இருக்கும் வரை வதக்கவும்.சுத்தம் செய்து கழுவி உலர்த்திய முருங்கை இலைகளைச் சேர்க்கவும். அனைத்து ஈரப்பதமும் வெளியேறி, கலவை முற்றிலும் வறண்டு போகும் வரை மிதமான தீயில் வதக்கவும்.துருவிய தேங்காய் சேர்த்து ஒரு நிமிடம் சிறிது வதக்கவும். வெப்பத்தை அகற்றவும்.சாதம் அல்லது ரொட்டியுடன் சூடாக பரிமாறவும்.