பிரியாணி சுவையில் தக்காளி சாதம் செய்யும் முறை…-thakkali sadam seivathu eppadi
தக்காளி சாதம் என்றாலே அனைவரும் விரும்பி சாப்பிடும் உணவாகும். குக்கரில் தக்காளி சாதம் செய்தால் சுவை கூடுதலாக இருக்கும். எல்லோரும் மிகவும் விரும்பி சாப்பிட்டு மகிழ்வர். தக்காளி சாதம் செய்யும் முறையைப் பற்றி காணலாம்.
பிரியாணி சுவையில் தக்காளி சாதம்
தேவையான பொருட்கள்:
பெரிய தக்காளி – 5
பச்சை மிளகாய் – 3
மிளகாய்த்தூள் – ஒரு தேக்கரண்டி
கரம் மசாலா – கால் தேக்கரண்டி
பட்டை, கிராம்பு – 1
நெய் – ஒரு தேக்கரண்டி
அரிசி – 2 கப்
சமையல் எண்ணெய் – ஒரு தேக்கரண்டி
புதினா தழை – ஒரு கைப்பிடி
மல்லித் தழை – ஒரு கைப்பிடி
இஞ்சி பூண்டு பேஸ்ட் – ஒரு தேக்கரண்டி
தக்காளி சாதம் செய்யும் முறை
சாப்பாட்டு அரிசியை நன்கு சுத்தம் செய்து அலசி ஊற வைத்துக் கொள்ள வேண்டும். அரை மணி நேரம் அரிசியை ஊற வேண்டும். பின்னர், தக்காளி பழங்களை சுத்தம் செய்து நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர்,பச்சை மிளகாய்களை நறுக்கி வைத்துக்கொள்ள வேண்டும். புதினா, கொத்தமல்லி தழைகளை நன்கு தண்ணீரில் கழுவிக்கொள்ள வேண்டும். குக்கரை அடுப்பில் வைத்துக் கொள்ள வேண்டும். குக்கரில் தேவையான அளவிற்கு நெய் மற்றும் எண்ணெய் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
எண்ணெய் காய்ந்தப்பிறகு அதில் பட்டை மற்றும் கிராம்பு சேர்த்து வதக்க வேண்டும். பின்னர் நறுக்கி வைத்துள்ள தக்காளி பழங்களை சேர்த்து வதக்க வேண்டும்.பிறகு, பச்சை மிளகாய்களை சேர்த்துக் கொள்ள வேண்டும். அவை வதங்கியதும் மிளகாய் தூள் மற்றும் கரம் மசாலா சேர்த்து நன்கு வதக்க வேண்டும். பின்னர் நறுக்கி வைத்துள்ள புதினா தழை மற்றும் மல்லித்தழை சேர்த்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் ஊற வைத்துள்ள அரிசியை சேர்த்து நன்கு கலந்து விட்டு கொள்ளுங்கள். 2 கப் அரிசிக்கு இரண்டு கப் தண்ணீர் சேர்த்தல் வேண்டும். தேவையான அளவிற்கு உப்பு போட்டு தண்ணீர் சேர்த்து கொதிக்க விட வேண்டும். அதன் பிறகு குக்கர் மூடியை போட்டு மூட வேண்டும். இரண்டு விசில் வரும் வரை காத்திருக்க வேண்டும். இரண்டே விசிலில் சுவையான அற்புதமான தக்காளி சாதம் தயார். பிரியாணி சுவையில் தக்காளி சாதம் 10 நிமிடத்தில் செய்து விடலாம்.
Pingback: மணமணக்கும் புதினா துவையல் செய்யும் முறை...-pudina thuvayal