மணமணக்கும் புதினா துவையல் செய்யும் முறை-pudina thuvayal
புதினா துவையல் அனைவரும் விரும்பி உண்ணக்கூடிய பதார்த்தம் ஆகும். காலை சிற்றுண்டிகளுக்கும், மதிய உணவிற்கும் பதார்த்தமாக இந்த புதினா துவையல் இருக்கும். சத்து நிறைந்த இந்த புதினா துவையலைச் செய்யும் முறையைக் காணலாம்.
புதினா துவையல்
தேவையான பொருட்கள்
புதினா இலைகள் – ஒரு கிண்ணம்
உளுத்தம் பருப்பு –2 தேக்கரண்டி
சிவப்பு மிளகாய் – 10
புளி – ஒரு சிறிய உருண்டை அளவு
வெல்லம் – 1 சிறிய துண்டு
தேங்காய்– 2 தேக்கரண்டி
உப்பு – 1/2
புதினா துவையல் செய்யும் முறை
ஒரு வாணலில் உளுத்தம் பருப்புகளையும், சிவப்பு மிளகாய்களையும் போட்டுக்கொள்ளவும். பொன்னிறமாக வரும் வரை அவற்றை வறுக்க வேண்டும்.
பிறகு , அதில் புளியைப் போட்டுக்கொள்ளவும். பின்னர், சுத்தம் செய்த புதினா இலைகளைப் போட்டுக்கொள்ளவும். புதினா இலைகள் வதங்கும் வரை மிதமான வெப்பத்தில் வதக்க வேண்டும்.
பின்பு , அடுப்பிலிருந்து புதினா வாணலை இறக்கி அதை ஆற விடவும். பின்னர், தேங்காய் ,வெல்லம் மற்றும் உப்பு சேர்த்து, சிறிது நீர் விட்டு மிக்ஸியில் போட்டு நன்கு அரைக்கவும். இந்த முறையில் புதினா துவையலை செய்யும் போது, துவையல் மிகவும் ருசியாக இருக்கும்.
இதில் மிளகாய், புளி மற்றும் உப்பு ஆகிய மூன்றையும் சரியான விதத்தில் சேர்க்கும் போது துவையல் மிகவும் நன்றாக இருக்கும். தேங்காய் மற்றும் வெல்லத்தை சேர்ப்பதால் புதினா துவையல் சுவையாக இருக்கும்.
மணமணக்கும் இந்த புதினா துவையலைச் சாப்பிட்டு வந்தால், வயிறு சார்ந்த பிரச்சனைகள் குணமாகும்.
இதையும் படிக்கலாமே –
பிரியாணி சுவையில் தக்காளி சாதம் செய்யும் முறை…-thakkali sadam seivathu eppadi