விழுதுகள் – Tamil kavithai
ஊரின் எல்லையில் ஊர்காவலன் எல்லைச்சாமி்…
எல்லைச்சாமியின் கோவிலைச் சிறப்புப்படுத்தும் வகையில் ஆங்கொரு ஆலமரம்…
பல விழுதுகளைக் கொண்டு,
கம்பீரமாய் வீற்றிருந்தது அரசரைப்போல…
தன்னைநாடிவரும பறவைகளுக்கு இடமளித்தது
தன் விழுதுகளில்…
மயில்தோகையைப் போல இலைகள்…
கிளியின் மூக்கு போல பழங்கள்…
பாம்பைப்போல விழுதுகள்…
விழுதைப் பிடித்து விளையாடும் சிறுவர்கள்…
ஆனந்த நாட்களாய் சென்றன…
ஆழியில் சூல்கொண்ட காற்று…
எந்தன் மரத்தைத் தாக்க வந்ததோ…
கையில் வேல்கொண்டு
நெஞ்சில் வீரத்தைக்கொண்டு தனியொருவனாய்
பகைவரை வெட்டிச்சாய்க்கும்
மறவனைப்போல…
பல புயல்களின் கோரதாண்டவத்தை
எதிர்த்து நின்ற ஆலமரம்…
இன்று சாய்ந்தது எதிர்பாராத பெருங்காற்றுடன்
கூடிய மழையால்…
இன்றளவும் ஆலமரம் நின்ற இடமும், அதன் நினைவும்,
எங்கள் நெஞ்சங்களில்…
ஆ. கீர்த்திகா., M.A.,M.phil.,N.E.T.,