வாய் துர்நாற்றத்தைப் போக்க வீட்டு வைத்தியம் –வாய் துர்நாற்றம்
வாய் துர்நாற்றத்தால் மக்கள் பெரிதும் அவதிப்பட வாய்ப்புண்டு. வாய் துர்நாற்றம் இருந்தால், மற்றவர் பக்கத்தில் செல்வதற்குக் கூட தயக்கமாக இருக்கும். மேலும், சகஜமாக பேசுவதும் பாதிக்கப்படும். வாய் துர்நாற்றம் வருவதற்கான காரணத்தையும், அவற்றை குணப்படுத்தும் வழிமுறைகளைப் பற்றியும் காண்போம்.
வாய் துர்நாற்றம் வருவதற்கான காரணங்கள்…
குடல் சார்ந்த பிரச்சனைகள், செரிமான சிக்கல் மற்றும் வாய்ப்புண், குடல்புண், பல் சார்ந்த , ஈறு சார்ந்த பிரச்சனைகள் ஆகியவற்றால் வாய் துர்நாற்றம் வருகிறது.
இலவங்கப் பட்டை மற்றும் ஏலக்காயை வாயில் போட வேண்டும். சிறிது நேரம் அவற்றை வாயில் வைத்திருந்தால், வாய் துர்நாற்றம் குணமாகும்.
வாய் துர்நாற்றத்தைப் போக்க செய்ய வேண்டியவை…
ஒவ்வொரு முறை பல் துலக்கும் போதும் பற்களை மட்டும் இன்றி, நாக்கு மற்றும் ஈறுகளை நன்றாக சுத்தப்படுத்த வேண்டும்.
காலையில் எழுந்தவுடன் பல் துலக்கிவிட்டு, தண்ணீரைக் குடிக்க வேண்டும். இதன் மூலம் வயிறு சுத்தமாகும். குடல் புண் சரியாகும்.
தினசரி உணவில் பெருமளவு வெங்காயம் மற்றும் பூண்டைச் சேர்த்துக்கொள்வதைத் தவிர்க்க வேண்டும்.
புதினா இலைகளைச் சேகரித்துக்கொள்ளவும். அவற்றை, வாயில் போட்டு மென்னு தின்றால், வாய் துர்நாற்றம் குணமாகும்.
புதினா சாறு மற்றும் எலுமிச்சை சாறு இவற்றைக்கொண்டு வாயைக் கொப்பளித்து வந்தால், வாய் துர்நாற்றம் குணமாகும்.
நீரில் எலுமிச்சை சாறு மற்றும் உப்பைக் கலந்துக்கொள்ளவும். இவற்றைக் கொண்டு வாயைக் கொப்பளித்தால், வாய் துர்நாற்றம் குணமாகும்.
கொத்தமல்லி கீரையை வாயில் போட்டு மென்றால், வாய் துர்நாற்றம் குணமாகும்.
இதையும் படிக்கலாமே
இரண்டே நாளில் நகசுத்தியைக் குணமாக்க வேண்டுமா?-நகசுத்தி வீட்டு வைத்தியம் -Naga Suthi