தீக்காய எரிச்சல் குணமாக இதை செய்யுங்கள் போதும்…
சமையலறையில் வேலை செய்யும் போதோ, சுடு தண்ணீரை எடுத்து செல்லும் போதோ, சட்டையை அயர்ன் செய்யும் போதோ எதிர்பராத விதமாக தீக்காயம் ஏற்பட வாய்ப்புண்டு. தீக்காயம் ஏற்பட்ட உடன் பதட்டத்தைப் போக்கி, காயத்தைக் குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும்.
கற்றாழை
பின்னர், கற்றாழை ஜெல்லை எடுத்து தீக்காயத்தின் மீது தடவினால் தீக்காய எரிச்சலானது குறையும்.
செய்யக்கூடாதவை
சிலர் தீக்காயம் ஏற்பட்ட இடத்தில் தேங்காய் எண்ணெய், ஐஸ் கட்டி, டூத் பேஸ்ட், முட்டையின் வெள்ளைக்கரு, வெண்ணெய் முதலியவற்றை வைப்பர். இதனால், காயம் பெரிதாக வாய்ப்புண்டு. எனவே, இவற்றை அவசியம் செய்யக்கூடாது.
தீ காயம் ஏற்பட்ட இடத்தைச் கதிரவன் வெளிச்சம் படாதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.
தீக்காய எரிச்சல் குணமாக
களிம்பு
தீக்காயம் ஏற்பட்ட இடத்தில் களிம்பை 5 முதல் 15 நிமிடத்திற்கு தடவினால் எரிச்சல் குறையும்.
ஆன்ட்டிபயாட்டிக் கிரீம்
தீக்காயம் ஏற்பட்ட இடத்தில் ஆன்ட்டிபயாட்டிக் கிரீமைத் தடவி ஒரு துணியால் மூடி வைக்க வேண்டும்.
இதையும் படிக்கலாமே
அரிப்பு முழுவதுமாக நீங்க செய்ய வேண்டியவை என்ன?-Itching remedies