குழந்தை வாந்தியைக் கட்டுபடுத்துவது எப்படி? How to control baby vomit…
உணவு ஒவ்வாமை, வயிற்றில் வைரஸ் தொற்று, வயிற்றில் புண் ஆகிய காரணங்களால் குழந்தை வாந்தி எடுக்கிறது. குழந்தைகள் எடுக்கக்கூடிய வாந்தியைக் கட்டுப்படுத்தக்கூடிய சில வழிகளைக் காண்போம்.
ஜாதிக்காய்
ஜாதிக்காய் மற்றும் சீரகத்தை நீரில் கலந்து வடிகட்டி குழந்தைகளைக் குடிக்கச் செய்தால் வாந்தி கட்டுக்குள் வரும்.
சீரகம்
வறுத்த சீரகத்தை நீரில் கொதிக்க வைத்து, பின்னர் அதனை வடிகட்டி குடித்து வர செய்தால் வாந்தி உணர்வு குறையும்.
சீரக பொடி மற்றும் ஏலக்காய் பொடியை நீரில் கொதிக்க வைத்து, பின்னர் வடிகட்டி அத்துடன் தேன் கலந்து குடித்தால் வாந்தி கட்டுக்குள் வரும்.
இலவங்கப்பட்டை
இலவங்கப்பட்டையை நீரில் கொதிக்க வைத்து, பின்னர் அதனை வடிகட்டி குடித்து வர செய்தால் வாந்தி உணர்வு குறையும்.
புதினா இலை
புதினா இலைகளை நீரில் போட்டு, கொதிக்க வைத்து வடிகட்ட வேண்டும். பின்னர் அதில் எலுமிச்சை சாறு மற்றும் தேன் கலந்து குடிக்கச் செய்தால் வாந்தி உணர்வு குறையும்.
இஞ்சி
இஞ்சியை நீரில் போட்டு கொதிக்க வைத்து வடிகட்டி குடிக்கச் செய்தால், வாந்தி உணர்வு கட்டுக்குள் வரும்.
இதையும் படிக்கலாமே
குழந்தையின் விக்கல் வரக் காரணம் என்ன? Reason for baby hiccups…