நிம்மதியான ஆழ்ந்த உறக்கத்துக்கு சில வழிகள் – இரவில் நல்ல தூக்கம் வர-தூக்கம் வர எளிய வழிகள்
இரவில் நல்ல தூக்கம் வர – பகல் எல்லாம் வேலை செய்த உடலுக்கும், கண்களுக்கும், மூளைக்கும் ஓய்வு என்பது மிக அவசியமான ஒன்றாகும். ஆனால் இன்று பெரும்பாலனோர் உறக்கம் இன்றி அவதிப்படுகின்றனர். அதற்கான காரணம் என்ன? அதற்கு என்ன தீர்வு ? அதைப் பற்றி காணலாம்.
உறக்கம் வராமல் இருப்பதற்கான காரணங்கள்…
அடுத்த நாள் வேலையைப் பற்றி சிந்தித்துக் கொண்டிருப்பதாலும், செரிமானம் அடையாத உணவை உட்கொள்வதாலும், மன அழுத்தம் ஆகியவற்றாலும் உறக்கமானது பாதிக்கப்படுகிறது.
நிம்மதியாக உறங்க சில வழிமுறைகள்… (இரவில் நல்ல தூக்கம் வர )
உங்களுக்கு பிடித்த இனிமையான பாடல்களை கேட்கலாம். இதனால் உங்கள் மனம் அமைதியாகும். உங்கள் மனதில் ஏதேனும் அழுத்தம் இருந்தாலும் இசையை கேட்கும் போது மனம் ரிலாக்ஸ் ஆகும். இதன் மூலம் மனமும் புத்துணர்ச்சி ஆகும் இரவில் நல்ல ஆழ்ந்த தூக்கம் வர வழிவகுக்கும்.
உறக்கத்திற்கு இரண்டு மணி நேரத்திற்கு முன்னதாக டீ, காபி அருந்த வேண்டாம்.
இரவில் அதிக உணவை உட்கொள்ளக் கூடாது. எளிதில் செரிமானம் அடையக்கூடிய உணவை உட்கொள்ள வேண்டும்.
பகலில் உறங்கும் பழக்கத்தைத் தவிர்க்க வேண்டும்.
உறங்க செல்வதற்கு முன் இனிமையான பாடல்களை கேட்கலாம். அவை, மனதிற்கு அமைதியைக் கொடுக்கும். ஆழ்ந்த உறக்கத்திற்கு வழிவகுக்கும்.
உறங்குவதற்கு முன்னதாக குளித்து விட்டு உறங்கினால் உறக்கம் நன்றாக வரும். உடலானது புத்துணர்ச்சி பெறும்.
உறங்க போகும் நேரத்தில் மொபைல் போன், மடிக்கணினி, தொலைக்காட்சி பார்ப்பதைத் தவிர்க்க வேண்டும்.
உறங்குவதற்கு 2 மணி நேரம் அல்லது 3 மணி நேரம் முன்னதாக இரவு உணவை உட்கொள்ள வேண்டும்.
உறங்குவதற்கு முன் நண்பர் மற்றும் உறவினர் உடன் மனம் விட்டு பேசினால், உறக்கம் நன்றாக வரும்.
உறங்குவதற்கு முன்னர் பால் மற்றும் பழகலவையை உண்டால், ஆழ்ந்த உறக்கம் வரும்.
தியானம், மூச்சுப் பயிற்சி, யோகா செய்துவிட்டு உறங்க சென்றால், ஆழ்ந்த உறக்கம் வரும்.
இரவில் நீண்ட நேரம் பயமூட்டும் த்ரில்லர் படங்களையும், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளையும் பார்ப்பதைத் தவிர்க்க வேண்டும்.
தளர்வான, காய்ந்த ஆடைகளை உடுத்திக் கொண்டால் ஆழ்ந்த உறக்கம் வரும்.
இரவு நேரத்தில் தயிர், முட்டை, மாமிசம் போன்ற உணவுகளைத் தவிர்க்க வேண்டும்.