வாய்ப்புண் குணமாக இயற்கை வைத்தியம்- வாய் புண் குணமாக மருந்து-வாய் புண் குணமாக பாட்டி வைத்தியம்

வாய் புண் குணமாக பாட்டி வைத்தியம்

வாய் புண் குணமாக பாட்டி வைத்தியம்- குறைவான  நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் ஊட்டச்சத்து குறைப்பட்டால் வாய்ப்புண் வருகிறது. மேலும், செரிமானம் சார்ந்த கோளாறு, மன அழுத்தம், காரமான உணவுகளை அதிகம்  உட்கொள்ளுதல் போன்றவற்றால் வாய்ப்புண் தோன்றுகிறது. வாய்ப்புண்ணை வீட்டு வைத்தியத்தின் மூலம் குணப்படுத்துவது எப்படி? என்பதைப் பற்றிக் காண்போம்.

வாய் புண் ஏற்படக் காரணம்

வாய்ப்புண் ஏற்பட  காரணம், மலச்சிக்கல், உடற்சூடு, வைட்டமின் சி, பி12, வைட்டமின் சத்து போன்ற ஊட்டச்சத்துக் குறைபாடுகள், நோய் எதிர்ப்புச் சக்தி குறைவு, வீரியம் மிக்க மருந்துகள் மற்றும் மாத்திரைகளை உட்கொள்ளுதல், உணவு ஒவ்வாமை போன்றவை காரணமாக அமைகின்றன.

வாய் புண் குணமாக பாட்டி வைத்தியம் -வாய் புண் குணமாக மருந்து

வாய்ப்புண் வர பல காரணங்கள் உள்ளன. மலச்சிக்கல், பித்த அஜீரணம், உடற்சூடு, வைட்டமின் சி, பி12, வைட்டமின் சத்து ஆகிய ஊட்டச்சத்துக் குறைபாடுகள், நோய் எதிர்ப்புச் சக்தி குறைவு, மாத்திரைகளை உட்கொள்ளுதல், உணவு ஒவ்வாமை ஆகிய காரணங்களால் வாய்ப்புண் வருகிறது.

தேங்காய் எண்ணெயை வாயில் ஊற்றிக்கொள்ளவும். தேங்காய் எண்ணெயை வாயில் வைத்துக்கொண்டு, வாயை நன்றாக கொப்பளிக்க வேண்டும். இவ்வாறு செய்வதன் ஈறுகள் வலிமையடையும். வாய்ப்புண் குணமாகும். வாயிலிருக்கும் தொற்றுகள் வெளியேறும்.

மணத்தக்காளி இலையைப் பறித்துக்கொள்ளவும். மணத்தக்காளி இலையை நெய்யில் வதக்கிக்கொள்ளவும். இந்த மணத்தக்காளி துவையலைச் சாப்பிட்டு வந்தால், வாய்ப்புண் குணமாகும்.

வாய்ப்புண் குணமாக இயற்கை வைத்தியம்

மணத்தக்காளி இலையைச் சாப்பிட்டு வந்தால் வாய்ப்புண் குணமாகும்.

கோவாக்காயை நன்றாக அரைத்துக்கொள்ளவும். அதனை, மோருடன் கலந்து சாப்பிட்டால் வாய்ப்புண் குணமாகும்.

கோவாக்காயை உணவில் சேர்த்துக்கொண்டால், வாய்ப்புண் குணமாகும்.

கொய்யா இலைகளை வெறும் வாயில் போட்டுக்கொள்ளவும். இதனை, நன்றாக மென்றுத்தின்றால், வாய்ப்புண் குணமாகும்.

வாழைப்பூவை உணவில் சேர்த்துக்கொண்டால், வாய்ப்புண் குணமாகும்.

புதினா சாறைப் பருகி வந்தால் வாய்ப்புண் குணமாகும்.

தயிர் மற்றும் மோரை உணவில் சேர்த்துக்கொண்டால், வாய்ப்புண் குணமாகும்.

இளநீர் பருகி வந்தால் வாய்ப்புண் குணமாகும்.

காரமான உணவைச் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும்.

வாய்ப்புண் குணமாக பழங்கள்

கீரை, பீர்க்கங்காய், புடலங்காய், நெல்லிக்காய் போன்றவற்றை உணவில் சேர்த்துக்கொள்ளலாம். வெள்ளைப் பூசணிக்காய் அல்லது அகத்திக்கீரையைச் சாப்பிட்டால், உடனடி நிவாரணம் கிடைக்கும்.

உதடு புண் குணமாக மருந்து

ஆன்ட்டிசெப்டிக் திரவத்தைப் பயன்படுத்தி வாய் கொப்பளித்தால் உதடு புண் சீக்கிரத்தில் குணமாகும். ஸ்டீராய்டு மற்றும் வலி மரத்துப் போகச் செய்யும் களிம்புகளை உதடுபுண்ணில் தடவலாம்.

இதையும் படிக்கலாமே

எலும்பு முறிவை சரி செய்யக்கூடிய எளிய வைத்தியம்…   

மஞ்சள் காமாலை நோய்  உள்ளவர்கள் தவிர்க்க வேண்டிய உணவுகள்-Jaundice

Share this post

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top