மஞ்சள் கரிசலாங்கண்ணி- வெள்ளை கரிசலாங்கண்ணி- Karisalankanni Benefits
மஞ்சள் கரிசலாங்கண்ணி- வெள்ளை கரிசலாங்கண்ணி- Karisalankanni Benefits
மஞ்சள் கரிசலாங்கண்ணி- வெள்ளை கரிசலாங்கண்ணி- Karisalankanni Benefits- கரிசலாங்கண்ணி ஒரு மூலிகைத் தாவரமாகும். கரிசலாங்கண்ணி கீரையில் இரு வகைகள் உண்டு. அவை, மஞ்சள் பூவை உடைய கரிசலாங்கண்ணி செடி, வெள்ளை பூவை உடைய கரிசலாங்கண்ணி செடி. இவை இரண்டுமே மருத்துவ குணத்தைக் கொண்டுள்ளது. பல நோய்களை விரட்டியடிக்கும் கரிசலாங்கண்ணியின் மருத்துவ குணத்தை அறிவோம்.
மஞ்சள் கரிசலாங்கண்ணி
மஞ்சள் கரிசலாங்கண்ணி சிறுநீரகம் தொடர்பான பிரச்சினைகளை சரிச்செய்கிறது. சிறுநீர் கடுப்பு, சிறுநீரில் ரத்தம் வடிதல், அடிக்கடி சிறுநீர் வெளியேறுதல் போன்ற பல்வேறு வகையான சிறுநீரகப் பிரச்சினைகளுக்கு கரிசலாங்கண்ணி கீரை தீர்வு அளிக்கிறது.
வெள்ளை கரிசலாங்கண்ணி
வெள்ளை கரிசலாங்கண்ணி பல கொடிய வியாதிகளில் இருந்து நம்மைப் பாதுகாக்கிறது. காமாலை முதல் அனைத்து வகையான நோய்களையும் குணப்படுத்தக்கூடியது.
கரிசலாங்கண்ணியின் பயன்கள் – Karisalankanni Benefits
- கல்லீரல், மண்ணீரல் சார்ந்த நோய்களைப் போக்கக் கூடியது.
- தோல் சார்ந்த பிரச்சனைகளைத் தீர்க்க கூடியது.
- தலைமுடியை நன்றாக வளரச் செய்யக்கூடியது.
- காது வலியைக் குணமாக்கும்.
- தேள் விஷத்தை முறிக்கும் தன்மையைக் கொண்டது.
- மூல நோயைக் குணமாக்கும்.
- இருமலை போக்கும்.
- உடல் உஷ்ணம் குறையும்.
- கண் எரிச்சல் குணமாகும்.
- காது வலி குணமாகும்.
- சளி குணமாகும்.
- இரத்த சோகையானது குணமாகும்.
- காமாலையை குணமாக்கும்.
- சிறுநீரக பிரச்சனை சரியாகும்.
- ஆஸ்துமா குணமாகும்.
- மலச்சிக்கலையைக் குணமாக்கும்.
- உடல் எடையைக் குறைக்கும்.
- கை, கால் வீக்கமானது குறையும்.
கரிசலாங்கண்ணியின் நன்மைகள் -Karisalankanni Benefits
கல்லீரல், மண்ணீரல் நோய்கள்
கரிசலாங்கண்ணி வேரைக் காய வைத்து பொடியாக்கிக்கொள்ளவும். இந்த பொடியை சாப்பிட்டு வந்தால் கல்லீரல், மண்ணீரல் சார்ந்த நோய்கள் அனைத்தும் குணமாகும்.
தோல் சார்ந்த நோய்கள்
கரிசலாங்கண்ணி வேரைச் சேகரித்துக்கொள்ளவும். பின்பு, அதனை, காய வைத்து பொடியாக்கிக்கொள்ளவும். இந்த பொடியைச் சாப்பிட்டு வந்தால் தோல் சார்ந்த அனைத்து பிரச்சனைகளும் குணமாகும்.
தலைமுடி அடர்த்தியாக
ஒரு கைப்பிடியளவு கரிசலாங்கண்ணி இலையைப் பறித்து சுத்தம் செய்துக்கொள்ளவும். பின்னர், அதனை அரைத்து கொள்ளவும். அதில் நல்லெண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெயுடன் காய்ச்சி தலைக்கு தேய்த்தால் தலைமுடி அடர்த்தியாக வளரும்.
காது வலி
கரிசலாங்கண்ணி இலையைப் பறித்துக்கொள்ளவும். அதனை நன்றாக அரைத்து சாறு எடுத்துக்கொள்ளவும். இந்த சாறை காதில் விட்டால் காது வலியானது குணமாகும்.
தேள் கடி
கரிசலாங்கண்ணி கீரையை அரைத்துக்கொள்ளவும். அதனை தேள் கடித்த இடத்தில் வைத்து கட்டு கட்ட வேண்டும். இவ்வாறு கட்டினால் தேள் கடி விஷமானது குறையும்.
மூல நோய்
கரிசலாங்கண்ணி இலையைப் பறித்து நன்றாக வேக வைக்க வேண்டும். அதனை, வெந்நீரில் போட்டு ஆவி பிடித்து வந்தால் மூல நோயானது குணமாகும்.
இருமல்
கரிசலாங்கண்ணி இலையை அரைத்து சாறு எடுத்துக்கொள்ளவும். அத்துடன் நல்லெண்ணெய் சேர்த்து பக்குவமாக கரிசலாங்கண்ணி தைலத்தை காய்ச்சி கொள்ள வேண்டும். இந்த தைலமானது இருமலை போக்க வல்லது. இருமலானது முற்றிலும் குணமாகும்.
உடல் குளிர்ச்சி
கரிசலாங்கண்ணி தைலத்தை தலைக்கு தேய்த்துக்கொள்ளவும். சிறிது நேரம் ஊற வைத்து குளித்து வந்தால் உடல் குளிர்ச்சியாகும். மேலும், கண் எரிச்சல் குறையும். காது வலியானது குணமடையும்.
சளி
கரிசலாங்கண்ணி இலை சாறை எடுத்துக்கொள்ளவும். அத்துடன், தேன் கலந்து குழந்தைகளுக்கு கொடுத்தால் சளி குணமாகும்.
இரத்த சோகை
கரிசலாங்கண்ணி சாறை தினந்தோறும் சாப்பிட வேண்டும். இவ்வாறு சாப்பிட்டு வந்தால் இரத்த சோகையானது குணமாகும். கரிசலாங்கண்ணி கீரையை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொண்டால் எந்தவித நோயும் நம்மை நெருங்காது.
காமாலை
கரிசலாங்கண்ணி இலையைப் பறித்து அதனை நன்றாக சுத்தம் செய்து அரைத்துக் கொள்ள வேண்டும். அரைத்த கரிசலாங்கண்ணி இலையை .இரண்டு சுண்டைக்காய் அளவு எடுத்து கொள்ள வேண்டும். அதனை பாலில் கலந்து வடிக்கட்டிக்கொள்ள வேண்டும். இதனை, காலை, மாலை குடிக்க வேண்டும். சிறுவர்கள் மூன்று நாட்களும், பெரியவர்கள் ஏழு நாட்களும் பருக வேண்டும். இந்த மருந்து சாப்பிடும் போது உப்பில்லாத பத்திய சாப்பாடு இருக்க வேண்டியது அவசியம். இவ்வாறு செய்தால் மஞ்சள் காமாலை நோய் குணமாகும்.
சிறுநீரக கோளாறு
கரிசலாங்கண்ணி கீரையை அதிகளவு சாப்பிட வேண்டும். அவ்வாறு சாப்பிட்டு வந்தால் சிறுநீரக தொடர்பான எந்த பிரச்சனையும் வாராது. சிறுநீரக கோளாறு முற்றிலும் குணமாகும்.
ஆஸ்துமா
கரிசலாங்கண்ணி சூரணத்தை திப்பிலிச் சூரணத்தோடு சேர்த்து தேனில் கலந்து சாப்பிட வே்ண்டும். இவ்வாறு சாப்பிட்டு வந்தால் ஆஸ்துமா தொல்லை குறையும். கரிசலாங்கண்ணி சாறுடன் எள் மற்றும் நெய் சேர்த்துக் கொள்ளவும். அத்துடன் அதிமதுரம், திப்பிலி கலந்து நன்றாக சுண்டக் காய்ச்ச வேண்டும். பிறகு அதனை வடிக்கட்டி கொள்ள வேண்டும். இதனை தினமும் 5 மில்லி காலை, மாலை சாப்பிட்டு வந்தால் ஆஸ்துமா, சளி, இருமல் ஆகிய அனைத்து பிரச்சனைகளும் குணமாகும்.
சிவப்பு அணுக்களின் எண்ணிக்கை
கரிசலாங்கண்ணி கீரையை சாப்பிட்டு வந்தால் இரத்தததில் சிவப்பு அணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கச் செய்கிறது. இரத்த உற்பத்தி அதிகரிக்கும்.
மலச்சிக்கல்
கரிசலாங்கண்ணி கீரையை பொரியலாகவும், கூட்டாகவும் , கடைச்சலாகவும் செய்து அடிக்கடி சாப்பிட வேண்டும். இவ்வாறு, சாப்பிடுவதன் மூலம் உடலில் உள்ள கெட்ட நீரானது வெளியேறும். மேலும், மலச்சிக்கல் சரியாகும். வயிறு சார்ந்த பிரச்சனைகள் அனைத்தும் குணமாகும்.
உடல் எடை
கரிசலாங்கண்ணி கீரையைத் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடல் எடையானது குறையும். தேவையற்ற கொழுப்புகள் அனைத்தும் கரையும்.
பாத வீக்கம்
மஞ்சள் கரிசலாங்கண்ணி இலையுடன் வேப்பிலை, கீழாநெல்லி, துளசி சேர்த்து நன்றாக மென்று சாப்பிட வேண்டும். காலை, மாலை இருவேளையும் வெறும் வயிற்றில் இவ்வாறு சாப்பிட வேண்டும். இவ்வாறு செய்தால் உடல் எடைக் குறையும். மேலும், கை, கால் , பாத வீக்கமானது குறையும். நீர்க்கட்டிகள் அனைத்தும் கரைந்து வெளியேறும். சிறுநீரகத்தில் உள்ள நச்சுகள் வெளியேறும்.
கரிசலாங்கண்ணி தாவரத்தின் மருத்துவ குணத்தைப் பற்றி அறிந்து, அதனை சரியான முறையில் பயன்படுத்தினால் நிச்சயம் நன்மை பயக்கும்.
இதையும் படிக்கலாமே –
1.பொன்னாங்கண்ணி கீரையின் மருத்துவக் குணங்கள் – Ponnanganni Keerai Benefits
2. சிறுகீரையின் மருத்துவக்குணங்கள் – Sirukeerai Benefits
3.தொட்டால் சிணுங்கியின் மருத்துவப் பயன்கள்- Thotta Chinungi Plant
மஞ்சள் கரிசலாங்கண்ணி- வெள்ளை கரிசலாங்கண்ணி- Karisalankanni Benefits Read More »