பற்கள் பளிச்சிட, பல் கறை நீங்க-Teeth Whitening at Home

பற்கள் பளிச்சிட

பற்கள் பளிச்சிட, பல் கறை – Teeth Whitening at Home முத்துப்போன்ற வெண்மையானப் பற்களைப் பெற வேண்டுமானால், பற்களை முறையாக பராமரிக்க வேண்டும். காலையில் எழுந்ததும் பல் துலக்க வேண்டும். ஆயில் புல்லிங் செய்ய வேண்டும். ஒவ்வொரு முறை உணவிற்குப் பின்னரும் வாயைக் கொப்பளிக்க வேண்டும். இரவு சாப்பிட்ட உடன் பல் துலக்க வேண்டும். பல் கறை வருவதற்கானக் காரணத்தையும், பல் கறையைக் குணப்படுத்தும் வழிகளையும் காண்போம்.

பல் கறை வரக் காரணம்

பற்களைச் சுத்தமாகப் பராமரிக்கத் தவறும் போது பற்கள் நிறமாறுகின்றன. எனாமலில் பற்கறை ஏற்படுவதால் பல்லின் நிறம் மாறுகிறது. புகைப்பழக்கம், வெற்றிலை, பாக்கு, புகையிலை போடுவது, பான்மசாலா/குட்காவைப் பயன்படுத்துவது போன்ற பழக்கங்கள் காரணமாக பல் கறை ஏற்படுகிறது.

பற்களில் படிந்துள்ள கறையைப் போக்கக்கூடிய வழிமுறைகள் – Teeth Whitening at Home in Tamil

பற்கள் பளிச்சிட

எலுமிச்சை -Teeth Whitening at Home in Tamil

தண்ணீரில் எலுமிச்சை சாறை கலந்துக்கொள்ளவும். அந்நீரால் வாயை நன்றாக கொப்பளிக்க வேண்டும். இவ்வாறு செய்து வந்தால் பற்கள் வெண்மையாகும். பற்களில் உள்ள நச்சுகள் வெளியேறும். பற்கள் பொலிவு பெறும்.

எலுமிச்சை சாறை எடுத்துக்கொள்ளவும். அத்துடன் கல் உப்பு மற்றும் டூத் பேஸ்ட்டை கலந்துக்கொள்ளவும். இதனை பற்களில் தடவி ஊற வைக்க வேண்டும். பின்னர் பல் துலக்கி வந்தால் பற்கள் வெண்மையாகும். இந்த முறையை வாரத்திற்கு இரண்டு தடவை மட்டும் செய்ய வேண்டும்.

எலுமிச்சைப் பழத்தோலை உலர்த்திக்கொள்ளவும். பின்னர், இதனை பொடி செய்து, பற்பொடியாக உபயோகித்து வந்தால் பற்கள் வெண்மையாகும். பற்பசையின் மேல், சிறிது உப்பு கலந்து தேய்க்க வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் பற்கள் பளபளக்கும்.

எலுமிச்சைத் பழத்தோலை உலர்த்தி பொடியாக்கிக்கொள்ளவும். இத்துடன், சிறிது உப்பு, இரண்டு துளி கடுகு எண்ணெய் சேர்த்துக்கொள்ளவும். இதனைக் கொண்டு பல் துலக்கி வந்தால், பற்கள் வெண்மையாகும்.

ஆயில் புல்லிங் – Teeth Whitening at Home in Tamil

பற்கள் பளிச்சிட

சூரிய காந்தி எண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெயை வாயில் ஊற்றிக்கொள்ளவும். பின்னர், வாயை நன்றாக கொப்பளிக்க வேண்டும். இவ்வாறு செய்தால் வாயில் தேங்கியுள்ள நச்சுகள் வெளியேறும். பற்கள் வெண்மையாகும்.

சாம்பல் பொடி – Teeth Whitening at Home in Tamil

சாம்பல் பொடியைக் கொண்டு பல் துலக்க வேண்டும். இவ்வாறு செய்து வந்தால் பற்கள் வெண்மையாகும். பற்களில் உள்ள கறைகள் முழுவதுமாக நீங்கும்.

வைட்டமின் சி – Teeth Whitening at Home in Tamil

வைட்டமின் சி நிறைந்த பழங்களை அதிகமாகச் சாப்பிட வேண்டும். ஆரஞ்சு, எலுமிச்சை, வாழைப்பழம் இந்த பழத்தோல்களைப் பற்களின் மீது மெதுவாக தேய்க்க வேண்டும். பின்னர், ஈறுகளுக்கு மசாஜ் செய்தால் பற்கள் வெண்மையாகும்.

ஆப்பிள் சிடார் வினிகர் – Teeth Whitening at Home in Tamil

ஆப்பிள் சிடார் வினிகரைத் தண்ணீரில் கலந்துக்கொள்ளவும். பின்னர், அதனைக் கொண்டு வாயைக் கொப்பளிக்க வேண்டும். இவ்வாறு செய்து வந்தால் பற்கள் வெண்மையாகும்.

டூத் பேஸ்ட் – Teeth Whitening at Home in Tamil

ஒரு கிண்ணத்தில் டூத் பேஸ்டுடன் உப்பைப் போட்டுக்கொள்ளவும். பின்னர், அதில், அரைத்த பூண்டு, எலுமிச்சை சாறு, மஞ்சள் ஆகியவற்றை கலந்துக்கொள்ளவும். அதனைக் கொண்டு பல் துலக்க வேண்டும். இவ்வாறு செய்து வந்தால் பற்கள் வெண்மையாகும்.

ஒரு கிண்ணத்தில் உப்பு, மஞ்சள் மற்றும் கடுகு எண்ணெய் எடுத்துக்கொள்ளவும். இவற்றுடன் டூத் பேஸ்ட் கலந்துக்கொள்ளவும். இதனைக்கொண்டு பல் துலக்கி வந்தால், பற்கள் வெண்மையாகும்.

ஒரு கிண்ணத்தில் அரைத்த இஞ்சி, எலுமிச்சை, உப்பு எடுத்துக்கொள்ளவும். அத்துடன், டூத் பேஸ்டு கலந்துக்கொள்ளவும். இதனை கொண்டு பல் துலக்கி வந்தால், பற்கள் வெண்மையாகும்.

இதையும் படிக்கலாமே

தும்பையின் மருத்துவக்குணங்கள் -Spiny Gourd 

Share this post

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top