குழந்தையைப் பராமரிப்பது எப்படி?…

குழந்தையைப் பராமரிப்பது

குழந்தையைப் பராமரிப்பது ஒவ்வொரு தாயின் முதன்மை கடமையாகும். தன்னை நம்பி இந்த உலகத்திற்கு வந்த ஜீவனைப் பராமரிக்கத் தன் முழு நேரத்தையும் செலவிடுவாள் தாய்.

குழந்தையைப் பராமரிப்பது

குழந்தை பசியால் அழுதால் உடனே உணவு கொடுக்க வேண்டும்.

குழந்தையை நன்றாக உறங்க வைக்க வேண்டும்.

குழந்தை உறங்கும் இடம்  காற்றோட்டமாகவும், மிதமான வெப்ப நிலையும் இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.

குழந்தை சிறுநீர் மற்றும் மலம் கழித்துவிட்டால், சுத்தம் செய்து புதிய காய்ந்த ஆடையை உடுத்திவிட வேண்டும்.

குழந்தையை வெந்நீரால் நன்றாக துடைத்து, காய்ந்த ஆடைகளை அணிவிக்க வேண்டும்.

டையப்பர் அணிவதால் தோல் சிவந்து போகும். அதனால், தேங்காய் எண்ணெயைத் தடவ வேண்டும்.

கை, கால், கழுத்தில் கூர்மையாக அணிகலனை அணிவிக்கக் கூடாது.

குளிர்காலத்தில் குழந்தையை கதகதப்பாக வைத்திருக்க வேண்டும். குழந்தையின் கை, கால்களை முடி வைக்க வேண்டும்.

குழந்தையை கொசு, எறும்பு கடிக்காதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.

கைகளை நன்றாக கழுவிய பின்னரே, குழந்தையைத் தூக்க வேண்டும்.

குழந்தையை குளிர்ந்த நீரால் குளிக்க வைக்கக் கூடாது. வெந்நீரால் குளிக்க வைக்க வேண்டும்.

சமையலறையில் இருந்து வந்த உடன் குழந்தையைத் தூக்க கூடாது. கைகளில் ஏதாவது மிளகாய் காரம், மிளகாய் தூள் காரம் இருக்கும். எனவே, கைகளை நன்றாக கழுவிய பின்னரே, குழந்தையைத் தூக்க வேண்டும்.

இதையும் படிக்கலாமே –

ஏழு மாத குழந்தை சாப்பிட வேண்டிய பழங்கள்-Fruits for babies

Share this post

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top