குழந்தையின் அழுகைக்கான காரணம் என்ன? Reason for baby crying…

குழந்தையின் அழுகைக்கான காரணம்

கள்ளம் கபடம் இல்லாத குழந்தை அழுவதைப் பார்த்தாலே அனைவரது மனமும் கரையும். குழந்தையின் அழுகையைச் சமாதானம் செய்து அழுகையை நிறுத்தச் செய்வர்.

குழந்தையின் பாஷையே அழுகைதான். குழந்தை அழுவதற்கு பெரும்பாலும் மூன்று காரணங்கள் தான். பசியால் அழும். உறக்கத்திற்காக அழும். சிறுநீர் மற்றும் மலம் கழித்துவிட்டால் அழும்.

உறங்கிக்கொண்டிருக்கும் குழந்தை பசியின் காரணமாக அழுவும். அதன் பசியினை உடனே போக்க வேண்டும். குழந்தை பசியால் அழும் போது கட்டயமாக பால் கொடுக்க வேண்டும்.

உறங்கிக்கொண்டிருக்கும் குழந்தை சிறுநீர் மற்றும் மலம் கழித்துவிட்டால் குளிர் தாங்காமல் அழுவும். அப்போது குழந்தையைச் சுத்தம் செய்துவிட்டு, பின்னர் உறங்க வைக்க வேண்டும்.

சில குழந்தைகள் உறக்கத்திற்காக அழும். அப்போது குழந்தையைத் தாலாட்டி, பாடல் பாடி உறங்க வைக்க வேண்டும். குழந்தையைத் தோள் மீது போட்டு உறங்க வைக்கலாம். குழந்தையின் தலையை மெதுவாக நீவி விட்டால் குழந்தை உறங்கும்.

இதையும் படிக்கலாமே –

குழந்தையின் அழுகை நிறுத்துவது எப்படி?-How to control baby crying

Share this post

1 thought on “குழந்தையின் அழுகைக்கான காரணம் என்ன? Reason for baby crying…”

  1. Pingback: குழந்தைளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க இதை மட்டும் செஞ்சி கொடுங்க போதும்…

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top