கணவன் மனைவி புரிதல் மேற்கோள் – கணவன் மனைவி அன்பு -கணவன் மனைவி தத்துவம்

கணவன் மனைவி அன்பு

கணவன் மனைவி புரிதல் மேற்கோள்

கணவன் மனைவி அன்பு – கணவனோ மனைவியோ ஒருவருக்கு ஒருவர் கட்டாயத் தேவை இல்லை என்ற நிலைமை உருவாகிவிட்டது. ஒருவருக்கொருவர் கொடுக்கக்கூடிய விஷயங்கள் வெவ்வேறு நபர்களிடமிருந்து வெவ்வேறு வடிவத்தில் அவர்களுக்குக் கிடைக்கிறது என்பதை மறுக்க முடியாது. இந்நிலையில் கணவன்- மனைவி ஒருவருக்கு ஒருவர் அந்யோன்யமானவராக ஆக என்ன செய்யலாம் என்பதற்கான சிறுசிறு யுத்திகளாக இவற்றைச் சொல்வேன்.

1. சினிமா பாட்டு புத்தகங்கள் வாங்கி வைத்துக் கொள்ளுங்கள். கட்டிலில் படுத்தபடி கணவரும் மனைவியும் அதை ராகம் போட்டுப் பாடுங்கள். ‘நிலவு தூங்கும் நேரம் நினைவு தூங்கிடாது இரவு தூங்கினாலும் உறவு தூங்கிடாது’ என்று மனம்விட்டுப் பாடுங்கள். இதில் யாராவது ஒருவர் பாடுவதில் திறமையானவராக இருக்கலாம். அவர் அதிக ராகமாகப் பாடி மற்றவருக்கு தாழ்வுமனப்பான்மையை உருவாக்கிவிடக் கூடாது. ஒரு மனிதனுக்கு அவன் இசைக்குரலைக் கேட்கப் பிடிக்கும். அதற்கொரு ரசிகர் இருந்தால் இன்னும் பிடிக்கும். இதுதான் இதற்குப் பின்னால் உள்ள உளவியல். கணவரும் மனைவியும் இப்படி ஒத்திசைவோடு பாடும்போது நிச்சயம் மனம் ஒன்றிணையும். இருவருக்கும் அது ஒரு நல்ல பொழுதுபோக்காகவும் அமையும். மனம் ஒருவரை ஒருவர் தேடும்.

கணவன் மனைவி அன்பு

2. இணை பதற்றப்படும் சின்ன விஷயங்கள் பற்றியும் தெரிந்துகொண்டு அதைச் செய்யாமல் இருங்கள். ‘உன் உணர்வுகளை இப்படி மதிக்கிறேன்’ என்பதை வெளிக்காட்டியும் விடுங்கள். உங்கள் ஹேர்கிளிப்பை ஏதேச்சையாக கட்டிலில் போடுவது, கணவருக்குப் பிடிக்காமல் இருக்கலாம். போட்டாலும் அவர் ஒன்றும் சொல்லப் போவதில்லை. ஆனால் மனதுக்குள் ஏதோ சிறிய நெருடலை உணரக்கூடும். அதைச் செய்யாதீர்கள். ‘நான் உனக்குப் பிடிக்காததை செய்யவில்லை பார்’ என்பதை அவருக்கு தெரியும்படி உணர்த்தியும்விடுங்கள். கட்டிலில் ஹேர்கிளிப்பைப் போடுங்கள். அதன் பிறகு, ‘ச்சே இப்படியே வருது’ என்று ஹேர்கிளிப்பை எடுத்து அதற்குரிய இடத்தில்  வையுங்கள். அதேபோல கணவரும் பிரஷ் செய்தபடியே பெட்ரூமுக்குள் போய், ‘ச்சே உனக்குப் பிடிக்காதுல்ல. அப்படியே வருது பாரு’ என்று திரும்ப வாருங்கள். ‘நம் உணர்வை மதிக்கிறார்’ என்ற மனநிலை மிகுந்த நெருக்கத்தைக் கொடுக்கும்.

3. கணவருக்கும் மனைவிக்கும் ஒருவரிடம் ஒருவர் அவரவர் சிறுவயது, பள்ளி, கல்லூரி அனுபவங்களை பகிர்ந்து கொள்ள ஆசையிருக்கும். பல நேரம் சொன்ன சம்பவங்களையே திரும்ப திரும்ப சொல்லிக் கொண்டிருப்போம். நமக்கும் தெரியும், பார்டனர் இதை ஏற்கெனவே நம்மிடம் பகிர்ந்திருக்கிறார் என்று. இருந்தாலும் துணை அதைச் சொல்ல ஆசைப்படும்போது ஆர்வமாகக் கேட்கத்தான் வேண்டும். உதாரணமாக, மனைவி  ‘சின்ன வயசுல ஸ்கூல்ல டான்ஸ் ஆடுறதுக்கு வெள்ளை கலர் ஃபிராக் எல்லோரும் வாங்குனோம். என் பிரெண்ட் ஒரு பொண்ணு மட்டும் வாங்கவே இல்ல. அவ என்னவிட பெரிய பிள்ளையா இருப்பா. நா என்ன செய்தேன்… என் அக்காகிட்ட இருந்த டிரெஸை வாங்கிக் கொடுத்தேன். அவ அதப் போட்டு ஆடிட்டு ‘ரொம்ப தேங்ஸு’ன்னு சொன்னா. அவ அப்பா அம்மாகூட என்ன உச்சி முகர்ந்தாங்க’ என்று சொல்கிறார். மனைவிக்கு அவருடைய பெருமையைச் சொல்ல ஆசை. இதை அவர் நிச்சயம் குறிப்பிட்ட மாதத்துக்கு ஒருமுறை சொல்லிக்கொண்டேதான் இருப்பார். ஒவ்வொருமுறை சொல்லும் போதும் அதை ஆர்வத்துடனே கணவர் கேட்க வேண்டும். அக்காட்சியை கண்முன்னே நினைத்து ரசிக்க வேண்டும். மாறாக மனைவி சொல்லும்போதே, ‘இத நீ நூறு தடவ சொல்லிட்ட. போயேன்…’ என்று முறிப்பீர்களானால் நீங்கள் ஒரு சுவாரஸ்யமில்லாத மனிதராக மனைவியின் கண்களுக்குத் தெரிய வாய்ப்பிருக்கிறது.

கணவன் மனைவி அன்பு

4. சின்னச் சின்ன விஷயங்களில் உங்களுக்கு இருக்கும் பயத்தை இணையிடம் பகிர்ந்துகொள்ளுங்கள். ‘நாளைக்கு எனக்கு மீட்டிங் இருக்கு. பாஸ் வேற கத்துவார். ஒருமாதிரி இருக்கு’ என்று துணையிடம் கூச்சமில்லாமல் கவலைப்படுங்கள். அந்தப் பக்கமிருந்து ஆறுதல் கிடைக்கும். ஏற்றுக்கொள்ளுங்கள். மறுநாள் குறிப்பிட்ட மீட்டிங் முடிந்த நேரத்தில் மனைவி கணவருக்கு போன் போட்டு, ‘என்னப்பா ஃப்ரீயா..? எப்படி சமாளிச்சீங்க? எனக்கு நீங்க எப்படி செய்தியோனு தோணிட்டே இருந்துச்சு. நானும் லைட்டா கலங்கிட்டேன்’ என்று அக்கறையோடு கேளுங்கள்.

5. ஒரு வயதுக் குழந்தையை மடியில் போட்டு எப்படி கூச்சமில்லாமல் கொஞ்சுவீர்கள்… அப்படி உங்கள் துணையை உங்கள் மடியில் தூக்கிப் போட்டு கொஞ்சுங்கள். கொஞ்சுவதென்றால் அன்பான வார்த்தைகளை ஆங்காங்கே பன்னீர் தெளிப்பது போல் தெளிப்பது இல்லை. அப்படியே அருவி மாதிரி கொட்ட வேண்டும். ‘என் கண்ணு, என் செல்லம், என் புஜ்ஜு, கண்ணே பாப்பா கனிமுத்து பாப்பா’ என்று பொழிய வேண்டும். ‘ஏன் திடீர்னு கொஞ்சல்’ என்று துணை கேட்டால், ‘தோணுச்சு. அது ஒரு ஃபீல்’ என்று சொல்லுங்கள்.

கணவன் மனைவி அன்பு

கணவன் மனைவி அன்பு

ஒருவர் ஏதாவது ஒரு விஷயத்தை சொல்லத் தொடங்கும்போது, மற்றவர் காதுகொடுத்து கேட்க வேண்டும். தன் பேச்சுக்கு மதிப்புள்ள இடத்தில் நம்பிக்கை பலப்படும்.

தாம்பத்தியத்தில் ஒருவருக்கு விருப்பம் இல்லாதபோது, மற்றவர் தொந்தரவு செய்ய வேண்டாம். இருவருக்கும் தேவையான ஒன்று என்பதால், மற்ற பிரச்னைகளை மறந்து இதற்கும

ஒரே மாதிரியான வாழ்க்கை முறை போரடிக்க செய்யும். பிடித்த இடங்களுக்குச் செல்ல திட்டமிடுங்கள். உங்கள் வாழ்வின் ஸ்டைலையும் அவ்வப்போது மாற்றிக்கொள்ளுங்கள்..

கணவன் மனைவி தத்துவம்

கணவன் மனைவி அன்பு

கணவன் மனைவி உறவு எப்படி இருக்க

வேண்டும்❓

கணவன் பால் எனில் அதில் கலக்கப் படும் தண்ணீரைப் போல் இருந்திட வேண்டும் மனைவி.

பாலில் எவ்வளவு தான் தண்ணீர் கலந்தாலும், தண்ணீரை தனியே பிரித்துக் காட்டும் குணம் பாலுக்கில்லை.

பாலை தனியே காட்டும் குணம் தண்ணீருக்கு இல்லை.

தண்ணீர் கலந்த பாலை அடுப்பில் வைக்கையில்,

தண்ணீர் நீராவியாகப் பிரிந்து செல்ல,

அதை தாங்காத முடியாத பால்

கோபத்தில் பொங்கி எழுந்து மேலே வரும்.

பொங்கி வரும் பாலில் சிறிது தண்ணீர் தெளிக்க தன்னை விட்டுச் சென்ற தண்ணீர் தன்னிடம் திரும்பியதும்,

பால் கோபம் தணிந்து பாத்திரத்தில் அடங்கும்.

ஒரு வேளை அப்படி தண்ணீர் தெளிக்கப்படவில்லை எனில்,

பால் பொங்கி ஊற்றி அடுப்பையே அணைத்துவிடும்.

கணவனும் மனைவியும் ஒருவருக்குள் ஒருவர் அடங்கி இருக்கும் வரையில் தான் குடும்பம் எனும் நெருப்பு அணையாமல் இருக்கும்.

கணவன் மனைவி ஒற்றுமைக்கு எளிய வழிபாடு

கணவன் மனைவி அன்பு

தினமும் அதிகாலையில் கிழக்கு முகமாக அமர்ந்து ”ஓம் சௌம் பார்வதி தேவி நமஹ” என்று ஆத்மார்த்தமாக சொல்லி வாருங்கள். பூஜையறையில் அமர்ந்து சொல்லி வாருங்கள். 54 முறை அல்லது 108 முறை ஜபித்து வாருங்கள். இதேபோல், ”ஓம் க்லீம் ஸ்ரீ ரதி தேவி சமேத ஸ்ரீ காமதேவாய நமஹ” என்று மூன்று முறை ஜபித்து, பெண்கள் குங்குமத்தை இட்டுக்கொண்டு வாருங்கள். தம்பதி ஒற்றுமை மேலோங்கும். குடும்பத்தில் நிம்மதி பரவும். பிரிந்த தம்பதி விரைவில் ஒன்று சேருவார்கள் என்கிறார் மணிகண்ட குருக்கள்.

அதேபோல், கணவன் மனைவி ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டாகத் திகழும் அர்த்தநாரீஸ்வரரை மனதால் வணங்குங்கள்.

அர்த்தநாரீஸ்வர மந்திரம் :

ஓம் ஹும் ஜும் சஹ
அர்த்தநாரீஸ்வர ரூபே
ஹ்ரீம் ஸ்வாஹா

இந்த மந்திரத்தை கணவன் அல்லது மனைவி இருவருமே சொல்லி வரலாம். விரைவில் தம்பதி இடையே இருந்து வந்த பிணக்குகள் தீரும். புரிந்துகொண்டு விட்டுக்கொடுப்பார்கள். ஒருவரை ஒருவர் அனுசரித்துச் செல்வார்கள்.

கணவன் மனைவி அன்பு

பெண்கள் ஜபிக்க வேண்டிய மந்திரம் :
ஓம் க்லீம் காமதேவாய
ரதிநாதாய
மோகனாய
மம பதிம் மே வசமாநாய நமஹ
ஓம் க்லீம் காமதேவாய வித்மஹே
புஷ்பபாணாய தீமஹி
தந்நோ அநங்க ப்ரசோதயாத்

இந்த மந்திரத்தை தினமும் சொல்லி வாருங்கள். தாலிச்சரடில் குங்குமம் இட்டுக்கொண்டு அம்பாளுக்கு குங்கும அர்ச்சனை செய்யுங்கள்.
விரைவில் தம்பதி ஒற்றுமை அதிகரிக்கும். குடும்பத்தில் இதுவரை இருந்த குழப்பங்களும் பிணக்குகளும் நீங்கும்.

கணவன் மனைவி புரிதல் அவசியம்

கணவன் மனைவி அன்பு

குடும்ப வாழ்க்கையில், பொருளாதார ரீதியாக ஒரு திட்டமிடல் மனதுக்குள் ஒடிக்கொண்டே இருக்கும். அதேபோல, பரஸ்பரம் ஒருவரை ஒருவர் எப்படி ஈர்க்க வேண்டும் என்ற திட்டமிடலும் ஒடிக்கொண்டே இருக்க வேண்டும்.

ஒரு காலத்தில் பெண்ணை அடிமையாக வீட்டுக்குள்ளே வைத்திருந்த சமூகநிலை இருந்தது. பின்னர், ஆணைக் கண்காணிக்கும் சமூகநிலை இருந்தது. ஒழுக்கம் ஒழுக்கம் என்றதொரு வெற்றுக் கற்பிதம் சமூகத்தில் இருந்தது. இவற்றால் ஆண், பெண் திருமணம் செய்துகொண்டாலே, பிடித்திருக்கிறதோ பிடிக்கவில்லையோ பிரியத்தோடு இருப்பதாகக் காட்டிக்கொண்டார்கள்.

கணவன் மனைவி அன்பு

ஆனால் இக்காலத்தில் இந்த சமூகநிலைகள் அனைத்திலும் மாற்றம் நேர்ந்திருக்கிறது. பெண் வீட்டை விட்டு வெளியே வந்து சுதந்திரமாக சிந்திக்க ஆரம்பித்துவிட்டாள். ஆணை சமூகம் கண்காணிப்பதில்லை. தனிமனித சுதந்திரத்தின் அவசியம் பற்றிய விழிப்பு உணர்வு எங்கும் பரவிக் கொண்டிருக்கிறது.

இந்த மாற்றநிலையில் கணவன் மனைவி உறவு என்பதை இருவருமே பராமரித்தால் மட்டுமே அது உயிர்ப்போடு நீடிக்கும். தொடர்ச்சியாக ஒருவரை ஒருவர் ஈர்க்க ஒரு உழைப்பும் அக்கறையும் தேவைப்படுகிறது.

அந்தப் பராமரிப்பு பற்றி கணவனும் மனைவியும் யோசிக்க ஆரம்பித்தாலே நல்ல நண்பர்களாக, ஒருவருக்கொருவர் சுவாரஸ்யமிக்க துணையாக இருக்கலாம்.

இதையும் படிக்கலாமே

மிகவும் முக்கியமான திருமண பொருத்தம் – Thirumana Porutham Tamil – Marriage Porutham in Tamil

Share this post

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top