ஈறு வீக்கத்திற்கான காரணம் – ஈறு வீக்கத்திற்கான பாட்டி வைத்தியம்
ஈறு வீக்கத்திற்கான காரணம் – ஈறு வீக்கத்திற்கான பாட்டி வைத்தியம் – ஈறுகளில் வீக்கம் வந்தால் அதன் வலியைத் தாங்க முடியாது. உணவைச் சாப்பிட முடியாது. தண்ணீரைக் கூட அருந்துவதற்கு சிரமாக இருக்கும்.
ஈறு வீக்கத்திற்கான காரணம்
பல்லை சரியாக பராமரிக்காவிட்டாலும், குளிர்ச்சியான பொருளை அதிகம் சாப்பிடுவதாலும், மது மற்றும் புகை பழக்கத்தாலும் ஈறு வீக்கம் ஏற்படுகிறது. ஈறு வீக்கமானது ஊட்டச் சத்து குறைபாடு, தொற்று நோய் மற்றும் கர்ப்ப காலத்திலும் ஏற்படும். இது அல்லாமல் புகைபிடித்தல், தவறான முறையில் பல் கட்டுதல், தவறான முறையில் பல் விளக்குதல் என பல காரணங்கள் உள்ளன. நல்ல அனுபவம் வாய்ந்த பல் மருத்துவரிடம், பரிசோதனை செய்து பல்லை பராமரிப்பது மிக அவசியமான ஒன்றாகும்.
ஈறு வீக்கம் குறைய
வெதுவெதுப்பான நீரில் ஒரு துணியை நனைத்து , பிழிந்து முகத்தில் ஈறு வலி இருக்கும் பகுதியில் ஒத்தடம் கொடுக்க வேண்டும். ஐஸ் கட்டியை துணியில் சுற்றி வீக்கம் இருக்கும் பகுதியில் வைக்க வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் வீக்கம் குறையும். மேலும், வலி குறையும்.
ஈறு வீக்கத்தைத் தடுக்கக்கூடிய வழிமுறைகள் -ஈறு வீக்கத்திற்கான பாட்டி வைத்தியம்
ஈறு வீக்கத்திற்கான பாட்டி வைத்தியம் – கடுகு எண்ணெய்
ஒரு கிண்ணத்தில் கடுகு எண்ணெயை எடுத்துக்கொள்ள வேண்டும். அத்துடன், மஞ்சள் தூள் மற்றும் உப்பு கலந்துக்கொள்ளவும். இதனை, ஈறுகளில் தடவி, 10 நிமிடம் ஊற வைக்க வேண்டும். பின்னர் வாயைக் கொப்பளித்தால் ஈறு வீக்கம் குறையும்.
ஈறு வீக்கத்திற்கான பாட்டி வைத்தியம் – சோற்றுக் கற்றாழை
சோற்றுக் கற்றாழை சாறை எடுத்துக்கொள்ள வேண்டும். பின்னர், இதனை ஈறுகளில் தடவ வேண்டும். சிறிது நேரம் ஊற வைக்க வேண்டும். பின்னர் வாய் கொப்பளித்தால் ஈறு வீக்கமானது குறையும்.
ஈறு வீக்கத்திற்கான பாட்டி வைத்தியம் – விளக்கெண்ணெய்
ஒரு கிண்ணத்தில் விளக்கெண்ணெயை எடுத்துக்கொள்ள வேண்டும். அத்துடன், பச்சை கற்பூரத்தை கலந்துக்கொள்ளவும். பின்னர், இதனை ஈறுகளில் தடவி ஊற வைத்து பின்னர் வெதுவெதுப்பான தண்ணீரால் வாயைக் கொப்பளிக்க வேண்டும். இவவாறு செய்வதன் மூலம் ஈறு வீக்கமானது குறையும்.
ஈறு வீக்கத்திற்கான பாட்டி வைத்தியம் – பேக்கிங் சோடா
வாயை வெதுவெதுப்பான நீரால் நன்றாக கழுவ வேண்டும். பின்னர் மஞ்சளுடன் பேக்கிங் சோடா கலந்துக்கொள்ளவும். இதனை, ஈறுகளில் தடவி மசாஜ் செய்ய வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் ஈறு வீக்கமானது குறையும்.
ஈறு வீக்கத்திற்கான பாட்டி வைத்தியம் – புதினா
வெதுவெதுப்பான தண்ணீரை எடுத்துக்கொள்ள வேண்டும். அத்துடன், புதினா எண்ணெயைக் கலந்துக்கொள்ள வேண்டும். பின்னர், வாயை நன்றாக கொப்பளித்தால் ஈறு வீக்கமானது குறையும்.
ஈறு வீக்கத்திற்கான பாட்டி வைத்தியம் – இஞ்சி
இஞ்சியை அரைத்துக்கொள்ள வேண்டும். அத்துடன் உப்பு சேர்த்து ஈறுகளில் தடவி, ஊற வைக்க வேண்டும். பின்னர் வாயைக் கொப்பளித்தால் ஈறு வீக்கமானது குறையும்.
ஈறு வீக்கத்திற்கான பாட்டி வைத்தியம் -கிராம்பு
கிராம்பை வாயில் போட்டுக்கொள்ளவும். அதனை, நன்றாக மென்று வந்தால் ஈறு வீக்கமானது குறையும்.
ஈறு வீக்கத்திற்கான பாட்டி வைத்தியம் – மிளகு
மிளகு மற்றும் கிராம்பை எண்ணெயில் கலந்துக்கொள்ள வேண்டும். இதனை, ஈறுகளில் தடவி வந்தால், ஈறு வீக்கமானது குறையும்.
ஈறு வீக்கத்திற்கான பாட்டி வைத்தியம் – உப்பு
தினமும் காலையில் வெதுவெதுப்பான தண்ணீரில் உப்பு கலந்து வாயைக் கொப்பளிக்க வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் ஈறு சார்ந்த எந்த பிரச்சனையும் வராது.
ஈறு வீக்கத்திற்கான பாட்டி வைத்தியம் – எலுமிச்சை
பல் துலக்கியபின் எலுமிச்சை சாறைத் தண்ணீரில் கலந்து வாயைக் கொப்பளிக்க வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் ஈறு வீக்கம் குறையும்.
ஈறு வீக்கத்திற்கான பாட்டி வைத்தியம் – ஆயில் புல்லிங்
தேங்காய் எண்ணெய் அல்லது நல்லெண்ணெயைக் கொண்டு வாயைக் கொப்பளிக்க வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் ஈறு வீக்கம் குணமாகும். ஆயில் புல்லிங் செய்வாதல் வாயில் உள்ள நச்சுகள் முழுவதுமாக வெளியேறும்.
இதையும் படிக்கலாமே –
1.கால் வெடிப்பு குணமாக -பித்த வெடிப்பு சரியாக-பாத வெடிப்பு Cream – Patha Vedippu kunamaga