சுவையான தக்காளி ஊறுகாய் செய்யும் முறை -Tomato pickle
Tomato pickle- ஊறுகாய் என்றாலே அனைவரும் விரும்பி சாப்பிடுவர். அதிலும் தக்காளி ஊறுகாய் என்றால், சொல்லவேத் தேவையில்லை. தக்காளியில் அயோடின், மெக்னீசியம், பொட்டாசியம், சோடியம், இரும்பு சத்து ஆகியவை உள்ளது. மேலும், தக்காளியில் வைட்டமின் ஏ, வைட்டமின் சி சத்துகளும் உள்ளது. மிக எளிதாக தக்காளி ஊறுகாய் செய்யும் முறையைப் பற்றி காணலாம்.
தேவையான பொருட்கள்
தக்காளி -2 கிலோ
மிளகாய்த்தூள்
உப்பு
நல்லெண்ணெய்
புளி- சிறிய எலுமிச்சை அளவு
கடுகு -ஒரு தேக்கரண்டி
பெருங்காயம்- ஒரு தேக்கரண்டி
தக்காளி ஊறுகாய் செய்யும் முறை -Tomato pickle
செய்முறை
நன்றாக பழுத்த தக்காளியை நான்கு துண்டுகளாக வெட்டிக்கொள்ள வேண்டும். பின்னர், அதனை மிக்ஸியில் போட்டுகொள்ள வேண்டும். அதனை நன்றாக அரைக்க வேண்டும். தக்காளி தோல் தென்படாதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும். அதனுடன், புளியையும் சேர்த்து அரைத்துக்கொள்ள வேண்டும். ஒரு பாத்திரத்தில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு சேர்த்து வெடிக்கவிட வேண்டும். பின்னர், மைய அரைத்து தக்காளி சாறை சேர்க்க வேண்டும்.
நன்றாக கிளறி பெருங்காயம், தனி மிளகாய்த்தூள, கல் உப்பு சேர்க்க வேண்டும்.
தக்காளியின் சாறு முழுவதும் வற்றி கெட்டிப்பதத்துக்கு வரும் வரை காத்திருக்க வேண்டும். சாறு வற்றும் வரை கிளறிக்கொண்டே இருக்க வேண்டும். உப்பு, காரம் தேவையெனில் மீண்டும் சேர்ந்துக்கொள்ள வேண்டும். நன்றாக கெட்டி பதத்துக்கு வந்ததும் இறக்கி ஆறவிட வேண்டும்.
காற்றுபுகாத கண்ணாடி பாட்டிலில் எடுத்து வைக்க வேண்டும். தேவைப்படும் போது அதனை எடுத்து பயன்படுத்த வேண்டும். சாதத்தில் ஒரு டீஸ்பூன் தக்காளி ஊறுகாய் சேர்த்து குழந்தைகளுக்கு மதிய உணவு கலந்து கொடுத்தால் போதும் நன்றாக சாப்பிடுவார்கள்.
Pingback: மணமணக்கும் பாசிப்பயிறு லட்டு செய்யும் முறை…-Green gram ladoo