வயிறு உப்பசம் உங்களை நெருங்கவே நெருங்காது இந்த தூதுவேளை செடியால் -Thuthuvalai Benefits in Tamil
Thuthuvalai Benefits in Tamil-கொடி வகைகளில் ஒன்றான தூதுவேளை தாவரம் மருத்துவ குணம் நிறைந்தாகும். அருகில் இருக்கும் வேலியைப் பற்றிக் கொண்டு மிக வேகமாக வளரக்கூடிய தன்மையைக் கொண்டது. சிங்கவல்லி, அளர்க்கம், அளருகம், தூதுணை, தூதுவளம் ஆகிய பெயர்களைக் கொண்டது தூதுவளை தாவரம். தூதுவளையை மருந்தாக மட்டும் அன்றி, ரசமாகவும், அடையாகவும், துவையலாகவும், சட்னியாகவும் சமைத்து சாப்பிடலாம்.
தூதுவேளையின் பயன்கள்…
- நீரழிவு நோயைக் கட்டுப்படுத்துகிறது.
- இரத்தத்தில் சர்க்கரை அளவை குறைக்கிறது.
- புற்றுநோய் செல்களை வளர விடாமல் தடுக்கிறது.
- உடல் வலியை குணமாக்குகிறது.
- தலைபாரத்தைப் போக்குகிறது.
- நரம்புகளை வலுவடையச் செய்கிறது.
- சளி, இருமலை குணமாக்கும்.
- வயிறு உப்பசத்தை குறைக்கும்.
- ஆஸ்துமாவை சரி செய்யும்.
- காசநோயைக் குணமாக்கும்.
- சுவாச பிரச்சனையைச் சரிசெய்யும்.
- பாம்பு விஷத்தை முறிக்கக்கூடிய தன்மையைக் கொண்டது.
- இரைப்பு நோயைக் குணமாக்கும்.
- காது சார்ந்த பிரச்சனையைச் சரிசெய்கிறது.
- செரிமானம் சார்ந்த பிரச்சனையைச் சரிசெய்கிறது.
- கல்லீரல் சார்ந்த பிரச்சனையைச் சரிசெய்கிறது.
தூதுவேளையின் நன்மைகள்…
நெய்யில் தூதுவேளை இலைகளைக் காய்ச்சி உட்கொண்டால் சளி , இருமல் குணமாகும்.
ஒரு கைப்பிடியளவு தூதுவேளை இலைகளை எடுத்துக் கொள்ளவும். அவற்றை நன்றாக சுத்தம் செய்துவிட்டு, தண்ணீரில் போட்டு கொதிக்கவிடவும். இந்த தண்ணீரைக் குடித்து வந்தால், சளி , இருமல் குணமாகும்.
தூதுவேளை இலைகளைப் பறித்து அதனை நன்றாக அரைத்துக்கொள்ளவும். அந்த இலை சாறுடன் மிளகுத் தூள் சேர்த்து குடித்து வந்தால் சளி, இருமல் குணமாகும்.
மேலும், செரிமான பிரச்சனையும் சரியாகும்.
தூதுவேளை இலைச்சாறுடன் தேன் கலந்து குடித்து வந்தால், நுரையீரல் மற்றும் மூச்சுக்குழாயில் உள்ள சளியானது வெளியேறும்.
ஒரு கைப்பிடியளவு தூதுவேளை இலைகளைப் பறித்து அதனை நறுக்கிக்கொள்ளவும். சின்ன வெங்காயத்தை அதனோடு சேர்த்து நல்லெண்ணெயில் வதக்கிக்கொள்ளவும். பின்பு , அதனை நெல்லிக்காய் அளவு சிறு சிறு உருண்டையாக்கவும். இந்த உருண்டையை 5 நாட்களுக்கு காலை மாலை இருவேளையும் சாப்பிட்டு வந்தால் ஆஸ்துமா குணமாகும்.
தூதுவேளையின் காய்களை வெயிலில் காய வைத்து அதனைப் பொடியாக்கிக் கொள்ளவும். அதனை சுடு தண்ணீரில் கலந்து குடித்தால் உடல் வலி மற்றும் தலை பாரம் குணமாகும்.
தூதுவேளை இலைகளை குடிக்கின்ற தண்ணீரில் போட்டு அதனை பருகி வந்தால் பசி உணர்வு அதிகரிக்கும்.
தூதுவேளை பழங்களைச் சாப்பிட்டால் கப நோய்கள் குணமாகும்.
வெற்றிலையோடு தூதுவேளையும் சேர்த்து சாப்பிட்டால் செரிமானம் சுலபமாக நடைபெறும்.
தூதுவேளை லேகியம், நெய், சூரணம் இவை அனைத்துமே சுவாசத்தை சீராக்கும்.
காச நோயாளிகள் தூதுவேளையை உணவில் சேர்த்துக் கொண்டால் காச நோயானது குணமாகும்.
தூதுவேளை மலர்களைப் பறித்துக் கொள்ளவும். அதனை நெய்யில் வதக்கி சாப்பிட்டு வந்தால் நரம்புகள் வலிமை அடையும்.
தூதுவேளை பழங்களை பறித்துக் கொள்ளுங்கள். அதனை தண்ணீரில் போட்டு, கொதிக்க வைத்து, குடித்து வந்தால் மலச்சிக்கல் குணமாகும்.
தூதுவேளை இலை மற்றும் மலர்களைச் சாப்பிட்டு வந்தால் நீரழிவு நோய் குணமாகும்.இரத்தத்தில் சர்க்கரை அளவானது குறையும். புற்றுநோய் செல்களை வளர விடமால் தடுக்கும்.
தூதுவேளையை அதிகளவு உணவில் சேர்த்துக்கொண்டால் உடல் ஒவ்வாமை குணமாகும்
தூதுவளை தாவரத்தின் மருத்துவ குணத்தைப் பற்றி அறிந்து, அதனை சரியான முறையில் பயன்படுத்தினால் நிச்சயம் நன்மை பயக்கும்.
தூதுவளை பொடி பயன்கள்
பசும்பாலில் தூதுவளை பொடியைச் சேர்த்து சாப்பிட்டால் பித்த நோயால் ஏற்படும் மயக்கம் தீரும். இப்பொடியை எருமை மோரில் கலந்து சாப்பிட்டால் இரத்த சோகை நீங்கி இரத்த விருத்தி உண்டாகும்.
தூதுவளை சூப் பயன்கள்
தூதுவளை வாதம் பித்தம் என இரண்டு நோயையும் தீர்க்க கூடியது. இதன் இலையை எடுத்து சாறு பிழிந்து சாப்பிட்டு வந்தால் ஆஸ்துமா, ஈஸ்னொபிலியா எனப்படும் ஈழை நோய் குணமாகும். நெஞ்சு சளி விடாத இருமலுக்கு மருந்தாகும் .
தூதுவளை இலை துவையல்
தூதுவளை இலை கடாயில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் அதில் காய்ந்த மிளகாய், சிறிய வெங்காயம், பூண்டு, இஞ்சி போட்டு வதக்கி பின் தேங்காய் பூவையும் போட்டு வதக்கவும். கடைசியாக தூதுவளை இலை, புதினா இலை போட்டு வதக்கி ஆற வைக்கவும். ஆறிய பின் மிக்ஸியில் போட்டு கெட்டியாக அரைக்கவும்.
இதையும் படிக்கலாமே
பொன்னாங்கண்ணி கீரையின் மருத்துவக் குணங்கள் – Ponnanganni Keerai Benefits