தலையில் நீர் கோர்த்தல் குணமாக சில டிப்ஸ் – Thalaiyil Neer Korthal Health Tips
தலையில் நீர் கோர்த்தல் மற்றும் முகத்தில் நீர் கோர்த்தல் காரணம்:
தலை குளித்தப்பின் தலையைச் சரியாக துவட்டாமல் இருப்பதாலும், வியர்வை சேர்வதாலும், மழை மற்றும் பனியில் நனைவதாலும் தலையில் நீர் கோர்க்க வாய்ப்புண்டு. தலையில் நீர் கோர்த்தலை மிக எளிமையான முறையில் குணப்படுத்தலாம்.
தலையில் நீர் கோர்த்துக் கொள்வதால் மூளைக்கு செல்லும் நரம்புகள் பாதிப்புக்கு உள்ளாக வாய்ப்பு உள்ளது. எனவே, புகை மற்றும் காற்று மாசடைந்த இடங்களில் நீண்ட நேரம் இருப்பதைத் தவிர்க்க வேண்டும். மழை மற்றும் பனிக்காலங்களில் இரு சக்கர வாகனங்களில் அதிக தூரம் செல்வதைத் தவிர்க்க வேண்டும்.
தலையில் நீர் கோர்த்தல் அறிகுறிகள்:
தலையில் நீர் கோர்த்தால் தலை மிகவும் பாரமாக இருக்கும். கண், தலை, முகம் என அனைத்து பாகங்களிலும் மிகுதியான வலி ஏற்படும்.
தலையில் நீர் கோர்த்தல் குணமாக சில டிப்ஸ்:
தனியா விதைகள்
தனியா விதைகளை நன்றாக அரைத்துக்கொள்ளவும். அதனை நெற்றியில் பற்று போட்டு வந்தால் தலை பாரம் குறையும். தலையில் கோர்த்துள்ள நீர் இறங்கும்.
ஒத்தடம்
தண்ணீரைக் கொதிக்க வைத்து அதில் மல்லி விதை, மிளகு, மஞ்சள் தூள், சுக்குப்பொடி ஆகியவற்றை கலந்து நன்றாக சுண்டவிடவும். பின்னர், இதனை, வடிகட்டி சிறிய துணியில் இந்த தண்ணீரை நனைத்து ஒத்தடம் கொடுத்துவந்தால் தலையில் கோர்த்துள்ள நீர் இறங்கும்.
ஆவி பிடித்தல்
சுடுதண்ணீரில் வேப்பிலை, புதினா, துளசி மற்றும் கற்பூரவல்லி இலைகளைப் போட்டு ஆவி பிடித்தால் தலை பாரம் குறையும். ஆவிப்பிடிப்பதன் மூலம் தலையில் கோர்த்துள்ள நீர் முழுவதும் இறங்கும்.
பற்று
கற்பூரவல்லி, துளசி, வெற்றிலை, சுக்கு, மஞ்சள் ஆகியவற்றை அரைத்துக்கொள்ளவும். அதனை, நெற்றியில் பற்று போட்டு வந்தால் தலை பாரம் குறையும்.
நொச்சி இலை
கொதிக்கும் நீரில் நுணா இலை, நொச்சி இலை, எருக்கம் இலை போட்டு வேது பிடித்தால், தலையில் கோர்த்துள்ள நீர் வடியும். தலை பாரம் குறையும்.
செங்கல்
தண்ணீரைக் கொதிக்க வைத்து, அதில், செங்கல் போட்டு, அந்த நீரில் ஆவிப்பிடித்தால் தலையில் உள்ள நீர் வடியும். தலையில் நீர் கோர்த்தல் பிரச்சனை குணமாகும்.
இதையும் படிக்கலாமே
ராசி பலன்: இன்று – நாளை – வாரபலன்
Pingback: சைனஸ் குணமாக இதை செய்யுங்கள் போதும்-Sainas