பொன்னாங்கண்ணி கீரையின் மருத்துவக் குணங்கள் – Ponnanganni Keerai Benefits
Ponnanganni Keerai Benefits – சீதை, சீதேவி என்ற மாற்றுப்பெயர்களைக் கொண்டது பொன்னாங்கண்ணி கீரை. கீரைகளின் ராஜா என்று பொன்னங்கன்னி கீரை அழைக்கப்படுகிறது. நீர்வளம் நிறைந்த பகுதிகளில் பெரும்பாலும் காணப்படும். பொன்னாங்கண்ணியில் இரும்பு, கால்சியம், பாஸ்பரஸ், புரதம், வைட்டமின்கள் ஏ, பி, சி ஆகிய சத்துகள் உள்ளன.பொன்னாங்கண்ணியில் சீமை பொன்னாங்கண்ணி, நாட்டு பொன்னாங்கண்ணி என இருவகைகள் உள்ளது. சீமை பொன்னாங்கண்ணி சிவப்பு நிறத்தில் காணப்படும். நாட்டு பொன்னாங்கண்ணி பச்சை நிறத்தில் இருக்கும். பொன்னங்கன்னியின் மருத்துவக்குணத்தைப் பற்றிக் காண்போம்.
உடல் எடை அதிகரிக்க – Ponnanganni Keerai Benefits
பொன்னாங்கண்ணி இலையைப் பறித்துக்கொள்ளவும். அத்துடன், துவரம் பருப்பு மற்றும் நெய் சேர்த்து வதக்கிச் சாப்பிட்டு வந்தால் உடல் எடை அதிகரிக்கும். உடல் ஆரோக்கியமாக இருக்கும். உடல் வலிமையாக இருக்கும்.
உடல் எடை குறைய – Ponnanganni Keerai Benefits
பொன்னாங்கண்ணி கீரையைச் சேகரித்துக்கொள்ளவும். அதனை, பொரியலாக செய்துக்கொள்ளவும். இந்த பொரியலைச் சாதத்துடன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் உடல் எடையானது குறையும்.
உடல் உஷ்ணம் – Ponnanganni Keerai Benefits
பொன்னாங்கண்ணி எண்ணெயை தலையில் தேய்த்துக்கொள்ளவும். 15 நிமிடங்கள் வரை ஊற வைத்திருக்க வேண்டும். பின்னர், தலையை நன்றாக அலசிக்கொள்ளவும். இவ்வாறு செய்வதன் மூலம் உடல் உஷ்ணமானது குறையும். உடலானது குளிர்ச்சி பெறும். பார்வை தெளிவாகும்.
மாலைக்கண் நோய் – Ponnanganni Keerai Benefits
பொன்னாங்கண்ணி இலையை வதக்கிக்கொள்ளவும். பின்னர், வெண்ணெயுடன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் மாலைக்கண் நோய் குணமாகும். பார்வை சார்ந்த கோளாறுகள் நீங்கும்.
மூலநோய் – Ponnanganni Keerai Benefits
பொன்னாங்கண்ணி கீரையை அரைத்து சாறாக்கிக்கொள்ளவும். அதில் கேரட் சாறை சம அளவு கலந்துக்கொள்ளவும். இதில் உப்பு சேர்த்து காலையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால், மூலநோய் குணமாகும்.
இரத்தத்தை சுத்தப்படுத்த – Ponnanganni Keerai Benefits
பொன்னாங்கண்ணி கீரையை சிறிது சிறிதாக நறுக்கிக்கொள்ளவும். அத்துடன், பாசிப்பருப்பு, சின்ன வெங்காயம், சீரகம், பூண்டு, மிளகுத்தூள் சேர்த்து வேகவைத்துக்கொள்ளவும். இந்த மசியலை சாப்பிட்டு வந்தால் இரத்தத்தில் உள்ள நச்சுகள் வெளியேறும். இரத்தம் சுத்தமாகும்.
இதையும் படிக்கலாமே:
1. அரைக்கீரையின் மருத்துவக் குணங்கள் – Arai Keerai Benefits
2. சங்குப்பூவின் மருத்துவக்குணங்கள் -Sangu Poo Benefits
Pingback: அமுக்கரா கிழங்கின் மருத்துவப் பயன்கள்… -Amukkara kizhanku
Pingback: மஞ்சள் கரிசலாங்கண்ணி- வெள்ளை கரிசலாங்கண்ணி- Karisalankanni Benefits