பொடுகு தொல்லை நீங்க பாட்டி வைத்தியம் – Podugu neenga -Podugu Poga Tips in Tamil
Podugu Poga Tips in Tamil-தலையை சரியாக பராமரிக்கவிட்டால் பொடுகு தொல்லையால் அவதிப்பட வாய்ப்புண்டு.
பொடுகு வர காரணம்
தலைக்குக் குளித்துவிட்டு தலையைச் சரியாக துவட்டாத காரணத்தாலும், தலைக்குச் சரியாக எண்ணெய் தேய்க்காத காரணத்தாலும் பெரும்பாலும் பொடுகு ஏற்பட வாய்ப்புண்டு. மேலும், தலையில் அழுக்குச் சேர்வதாலும், வறட்சியாலும், எண்ணெய் பசையாலும் பொடுகு தோன்றுகிறது.
பொடுகு அறிகுறிகள்
பொடுகு வந்தால், அதன் மூலம் முடி உதிர்தல், முகப்பரு போன்ற பல தொந்தரவுகள் வர வாய்ப்புண்டு. பொடுகைப் போக்க என்ன செய்யலாம் என்பதைப்பற்றி காணலாம்.
பொடுகைப் போக்க வீட்டு வைத்தியம்
வெந்தயத்தை ஊற வைத்துக்கொள்ள வேண்டும். அதனை, நன்றாக அரைத்துக்கொள்ள வேண்டும். அரைத்த கலவையை தலையில் நன்றாகத் தேய்த்து மசாஜ் செய்ய வேண்டும். 15 நிமிடங்கள் ஊற வைத்து பின்னர், குளித்தால் பொடுகுத் தொல்லை தீரும்.
வேப்பிலை பறித்துக்கொள்ளவும். அதனை, நன்றாக அரைத்துக்கொள்ள வேண்டும். அரைத்த கலவையை தலையில் நன்றாகத் தேய்த்து மசாஜ் செய்ய வேண்டும். 15 நிமிடங்கள் ஊற வைத்து பின்னர், குளித்தால் பொடுகுத் தொல்லை தீரும்.
வேப்பிலை பறித்துக்கொள்ளவும். அதனை, நன்றாக அரைத்துக்கொள்ள வேண்டும். அத்துடன், தயிரைக் கலந்துக்கொள்ளவும். இந்த கலவையை தலையில் நன்றாகத் தேய்த்து மசாஜ் செய்ய வேண்டும். 15 நிமிடங்கள் ஊற வைத்து பின்னர், குளித்தால் பொடுகுத் தொல்லை தீரும்.
சின்ன வெங்காயத்தை எடுத்துக்கொள்ளவும். அதனை, நன்றாக அரைத்துக்கொள்ள வேண்டும். அதனை, தலையில் நன்றாகத் தேய்த்து மசாஜ் செய்ய வேண்டும். 15 நிமிடங்கள் ஊற வைத்து பின்னர், குளித்தால் பொடுகுத் தொல்லை தீரும்.
செம்பருத்தி இலை மற்றும் மலரைப் பறித்துக்கொள்ளவும். அதனை, நன்றாக அரைத்துக்கொள்ளவும். இந்த கலவையைத் தலையில் தேய்த்து, ஊற வைக்க வேண்டும். பின்னர், தலைக்குக் குளித்தால் பொடுகுத் தொல்லை தீரும்.
மருதாணி இலைகளைப் பறித்துக்கொள்ளவும். அதனை, அரைத்துக்கொள்ளவும். அத்துடன், தயிர் மற்றும் எலுமிச்சைச் சாறைக் கலந்துக்கொள்ளவும். அதனை, தலையில் நன்றாகத் தேய்த்து மசாஜ் செய்ய வேண்டும். 15 நிமிடங்கள் ஊற வைத்து பின்னர், குளித்தால் பொடுகுத் தொல்லை தீரும்.
பூண்டை அரைத்துக்கொள்ளவும். அத்துடன், எலுமிச்சைச் சாறு கலந்து தலைக்குத் தேய்க்க வேண்டும். இந்த கலவையைத் தலையில் தடவி, சிறிது நேரம் ஊற வைக்க வேண்டும். பின்னர், குளித்தால் பொடுகுத் தொல்லை தீரும்.
கடலை மாவுடன் வினிகரை கலந்துக்கொள்ளவும். இதனை, தலைக்குத் தடவி நன்றாக மசாஜ் செய்ய வேண்டும்.
இஞ்சி மற்றும் பீட்ரூட்டை அரைத்து உச்சந்தலையில் தடவ வேண்டும். இவ்வாறு, செய்து வந்தால் பொடுகு நீங்கும்.
கறிவேப்பிலையை நன்றாக அரைத்துக்கொள்ள வேண்டும். அத்துடன், எலுமிச்சை சாறு கலந்து தலைக்குத் தடவி நன்றாக மசாஜ் செய்ய வேண்டும்.
தயிர் மற்றும் கடலை மாவு, நெல்லிக்காய் பொடி, வெந்தயப்பொடி இவற்றை நன்றாக கலந்துக்கொள்ளவும். இதனை, தலைக்குத் தடவி நன்றாக மசாஜ் செய்ய வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் பொடுகு தொல்லை தீரும்.