இந்த உணவுகள் போதும் பித்தம் சார்ந்த பிரச்சனை பறந்தோடும்-Pitham
பித்தம் அதிகமானால் அறிகுறிகள்
மனித உடலில் வாதம், பித்தம், கபம் மூன்றும் சமநிலையில் இருக்க வேண்டும். பித்தம் அதிகமானால் செரிமானம் சார்ந்த பிரச்சனைகள் ஏற்படும். உதடு மற்றும் உள்ளங்கை, உள்ளங்காலில் வறட்சி, தலைவலி, கண் எரிச்சல், இளநரை, மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகள் வரும். பித்தத்தை நீக்க சில எளிய வழிமுறைகளைக் காண்போம்.
அகத்திகீரை
அகத்திகீரையைச் சமைத்து சாப்பிட்டு வந்தால் பித்தம் சார்ந்த பிரச்சனை நீங்கும். அகத்திகீரையில் நீர், புரதம், கொழுப்பு, தாதுப்புக்கள், நார்ச்சத்து, மாவுச்சத்து ஆகிய சத்துகள் நிறைந்து காணப்படுகிறது.
எலுமிச்சை
எலுமிச்சை சாறைப் பருகி வந்தாலும், எலுமிச்சை சாறைப் பயன்படுத்தி எலுமிச்சை சாதம் செய்து சாப்பிட்டு வந்தாலும் பித்தம் நீங்கும். எலுமிச்சை இலையை மோரில் நனைத்து குடித்து வந்தால் பித்தம் நீங்கும்.
இஞ்சி
இஞ்சியைத் தோல் நீக்கி சிறு துண்டாக்கி, தேனில் ஊற வைத்து சாப்பிட்டால் பித்தம் குணமாகும். இஞ்சியைச் சிறு துண்டாக்கி எடுத்துக்கொள்ளவும் அத்துடன் சீரகம், இந்துப்பு, எலுமிச்சை சாறு கலந்து நன்றாக உலரவிட்டு, பின்னர் பொடியாக்கி தினமும் காலையில் சாப்பிட்டு வந்தால் பித்தம் நீங்கும்.
பனங்கிழங்கு
பனங்கிழங்கைச் சாப்பிட்டு வந்தால் பித்தம் நீங்கும். பனங்கிழங்கில் இரும்புச் சத்து அதிகமாக உள்ளது. தொடர்ந்து பனங்கிழங்கை சாப்பிட்டு வந்தால், ரத்தசோகை நோய் தீரும். நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கும்
இந்துப்பு
உணவில் இந்துப்புவை சேர்த்துக்கொண்டால் பித்தம் சார்ந்த பிரச்சனை நீங்கும். இந்துப்பு வயிறு சார்ந்த பிரச்சனையைக் குணப்படுத்துகிறது. இந்துப்பு மலமிளக்கியாகச் செயல்படும். இந்துப்பு வாயுவை அகற்றுவது, பசியைத் தூண்டுவது, சிறுநீரைப் பெருக்குவது போன்ற செயல்பாடுகளைச் செய்கிறது.
தவிர்க்க வேண்டியவை
பித்தம் அதிக உள்ளவர்கள் புளிப்பு மற்றும் காரத் தன்மை உள்ள பொருட்களைத் தவிர்ப்பது நல்லது. அதிக கொழுப்பு சத்துள்ள பொருட்களைத் தவிர்ப்பது நல்லது. எண்ணெயில் பொரித்த உணவைத் தவிர்ப்பது நல்லது. மது மற்றும் புகை பிடிப்பதைத் தவிர்க்க வேண்டும்.
இதையும் படிக்கலாமே –
கண்டங்கத்திரியில் இவ்வளவு மருத்துவ குணங்களா? இது தெரியாமப் போச்சே-Kandankathri
Pingback: மன அழுத்தம் குறைய நாம் செய்ய வேண்டியது-Stress relief activities