பீர்க்கங்காயின் மருத்துவ குணங்கள்-Peerkangai benefits
Peerkangai benefits -பீர்க்கங்காயில் மருத்துவ குணங்கள் நிறைந்து காணப்படுகிறது .வைட்டமின் சி, துத்தநாகம், இரும்பு, ரிபோஃப்ளோ வின், மெக்னீசியம், தயாமின் ஆகிய சத்துகளைப் பீர்க்கங்காய் கொண்டுள்ளது. பீர்க்கங்காய் உடலில் உள்ள இறந்த செல்களை நீக்க உதவுகிறது.
நீர்ச்சத்து
பீர்க்கங்காயில் நீர்ச்சத்து மிகுந்து காணப்படுகிறது. எனவே, பீர்க்கங்காயைச் சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கலும், மூல நோயும் குணமாகும். உடலில் நீர்ச்சத்து குறையாமல் பார்த்துக்கொள்கிறது.
இன்சுலின்
பீர்க்கங்காயில் உள்ள பெப்டைட் மற்றும் ஆல்கலாயிட் ஆகியவை இன்சுலினாக செயல்படுகிறது. அவை உடலில் உள்ள சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்துகிறது. சர்க்கரை நோயாளிகள் பீர்க்கங்காய் சாப்பிடுவது மிகவும் நல்லது.
பார்வைக் கோளாறு
பீர்க்கங்காயில் பீட்டாகரோட்டின் சத்து உள்ளது. இது பார்வைக் கோளாறுளைத் தடுக்கிறது. பார்வைத் திறனை மேம்படுத்துகிறது.
மஞ்சள் காமாலை நோய்
பீர்க்கங்காயைச் சாப்பிட்டு வந்தால் மஞ்சள் காமாலை நோய் குணமாகும். மஞ்சள் காமாலை நோய் உள்ளவர்கள் பீர்க்கங்காய் சாப்பிடுவது மிகவும் நல்லது.
நோய் எதிர்ப்பு சக்தியானது
பீர்க்கங்காயைச் சாப்பிட்டு வந்தால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியானது அதிகரிக்கும். உடலானது ஆரோக்கியமாக இருக்கும். உடல் நோய் நொடியின்றி வலிமையாக இருக்கும்.
தோல் சார்ந்த நோய்கள்
பீர்க்கங்காய் தோல் சார்ந்த நோய்களைக் குணப்படுத்துகிறது. சருமம் பொலிவு பெற உதவுகிறது. பீர்க்கை இலைகளை அரைத்துக்கொள்ளவும். அதனை சொறி, சிரங்கு, நாள்பட்ட புண்களில் மீது பற்று போட்டால் தோல் சார்ந்த நோய்கள் குணமாகும்.
வயிறு சார்ந்த பிரச்சனை
பீர்க்கங்காய் வயிற்றில் அமிலச் சுரப்பு அதிகமாவதைத் தடுக்கிறது. வயிற்றில் புண்கள் வராமலும் தடுக்கிறது. வயிறு சார்ந்த பிரச்சனைகளைத் தடுக்கிறது.
சருமம்
பீர்க்கங்காயைக் காய வைத்து உள்ளே இருக்கும் நார்ப் பகுதியைப் பதப்படுத்தப் படுகிறது. உடம்பு தேய்த்துக் குளிக்கும் நாரானதுபீர்க்கங்காயிலிருந்து செய்யப்படுகிறது. பீர்க்கை நார் சருமத்தை சுத்தப்படுத்த உதவுகிறது. சருமத்தில் உள்ள அழுக்கைகளை வெளியேற்றுகிறது.
இதையும் படிக்கலாமே
தக்காளியின் மருத்துவ பயன்கள் –Benefits of Tomato